கும்பம் ராசி மார்ச் 2025 பலன் | Kumbam Rasi Palan March 2025 | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2025 | March Matha Kumbam Rasi Palan 2025

Posted DateFebruary 19, 2025

மகரம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2025

இந்த மாதம் பணியிடத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள் என்றாலும் அதற்கான பாராட்டை நீங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெறுவதற்கு கால தாமதம் ஆகும். உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் இருக்கும். சக ஊழியர்களிடமிருந்து சில ஒத்துழைப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் அவர்களின் உதவி உங்களின் வளர்ச்சிக்கு உதவலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த நேரத்தில் லாபத்தைப் பெறலாம். தங்கள் சொந்த முயற்சிகளின் மூலம்  கணிசமான வெற்றியைக் காணலாம். காதலர்கள் இனிமையான தருணங்களை அனுபவிக்கலாம்.  திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நீங்க  உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல  ஆரோக்கியத்தை அனுபவிக்கலாம்.  குடும்பத்தாரின்  ஆதரவின் மூலம் நிதி நிலைமை வசதியாகவும் முன்னேற்றமாகவும் இருக்கும். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 காதல் / குடும்ப உறவு

காதலர்களின் பிணைப்பு சிறப்பாக இருக்கும்.  இந்த மாதம்  ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்கள் அன்பை வலுப்படுத்திக் கொள்வார்கள். திருமணமான தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ஒன்றாக இரவு உணவு சமைப்பது, மாலை நடைப்பயிற்சி, அல்லது இரவு  திரைப்பட காட்சிகள் பார்ப்பது போன்றவற்றின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு கனிவான தொடர்பு பசுமையான  நினைவுகள் மற்றும் பிணைப்பை உருவாக்க வாய்ப்புகளை வழங்குகிறது. மென்மையான தருணங்கள் காண பெரிய விவகாரங்களாக இருக்க வேண்டியதில்லை; அது சிறிய விஷயங்களில் கூட இருக்கலாம்.  நீண்ட நேர வேலைக்குப் பிறகு ஒரு அணைப்பு. ஒரு உண்மையான பாராட்டு அல்லது புன்னகை இவையே போதுமானது.  இத்தகைய செயல்கள் ஒருவரையொருவர் விசேஷமாக உணரவைத்து, அவர்களது உறவை மேலும் வளர்க்கிறது. வயதான குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு சவாலானதாக இருக்காது. உங்கள் குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

Aquarius

 நிதிநிலை

உங்கள் நிதிநிலையில் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப் படலாம். ஒரு சீரான  பொருளாதார அடித்தளம் மற்றும் நிதியில் முன்னேற்றங்களை அனுபவிப்பதற்கான கணிசமான வாய்ப்பு உங்களுக்கு வந்துவிட்டது. கடந்த காலத்தில் உங்கள் மனதில் தோன்றிய யோசனைகளை உணர்ந்து முதலீடு செய்வதற்கான தைரியத்தை இந்த மாதம் நீங்கள் பெறலாம். நீங்கள் பங்குகளை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய லாபத்திற்கான வாய்ப்புகள் இருந்தாலும், புத்திசாலித்தனமாக இருங்கள் மற்றும் இப்போது மாபெரும் பங்குகளை வாங்க வேண்டாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம்

கும்பம் ராசியின் கீழ் பிறந்தவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வருமானத்தை அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது, சில ஆரம்ப தடைகளுக்குப் பிறகு உங்களின் முதலீடுகள் பலன் அளிக்க ஆரம்பிக்கலாம். உங்கள் முன்னேற்றத்தை எளிதாக்க சக ஊழியர்கள் பல வழிகளில் தங்கள் ஆதரவை வழங்குவார்கள். ஐடியில் பணிபுரியும் கும்ப ராசிக்காரர்கள் வளர்ச்சியில் வேகத்தைக் காணலாம். என்றாலும் இந்த மாதம் கடின உழைப்பு அவசியம். தயாரிப்பில் இருப்பவர்கள் நிர்வாகத்தால் அவர்களின் உழைப்பிற்காக கௌரவிக்கப்படுவார்கள். கும்ப ராசி வழக்கறிஞர்கள், வாடிக்கையாளர்களின் பல பாராட்டுக்களுடன், தக்க சமயத்தில் தலை நிமிர்ந்து நிற்பார்கள்! திரைப்படம் மற்றும் ஊடகங்களில் உள்ள கும்ப ராசிக்காரர்கள் அரங்கில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளை எதிர்கொள்வார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து சில  நிராகரிப்புகளையும்  எதிர்கொள்ளலாம். மருத்துவத்  துறையில் இருப்பவர்கள்  தாமதமான வெற்றியைக் காணலாம்.  ஆனால் உறுதியான சாதனைகளை நோக்கிய உங்கள் முயற்சிகள் பின்னர் அங்கீகரிக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் புதுமையான திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மேலதிகாரிகள் மிகப்பெரிய ஆதரவை வழங்கலாம்.

உங்கள் உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

 தொழில்  

தொழில் மூலம்  இந்த காலகட்டத்தில் செல்வத்தை அடைவதற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் இந்த நேரத்தில் பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்களின்  கடின உழைப்பு வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் முடிவுகளையும் சாதனைகளையும் அளிக்கத் தொடங்கும் நேரமாக இது இருக்கலாம். கூட்டாண்மைகள் உங்களின்  வணிகச் செயல்பாடுகளை சிக்கலாக்கும் மற்றும் இடையூறுகள் மற்றும் தவறான புரிதல்கள் அல்லது சச்சரவுகளுக்கு கூட வழிவகுக்கும். மாறாக, உங்களின் சுயாதீனமான நோக்கங்களில் கவனம் செலுத்துவது  பயனளிக்கும், இது உங்களின்  தொழில் மற்றும்  நிதிச் சூழ்நிலைகளின் மீது அதிக கட்டுப்பாட்டை அடைய உங்களுக்கு  உதவக்கூடும்.

தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியமான மன நிலை உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் அனுகூலமாக இருக்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் மற்றும் வாழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும்.

 உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள்

ஆரம்ப மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்த வெற்றி காணலாம்.  வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தேடுபவர்கள் விசா அனுமதிகளுக்கு ஒரு சிறந்த தருணத்தைக் கண்டுபிடிப்பார்கள், அதேசமயம் தற்போது முதுகலை படிப்பைப் படிப்பவர்களுக்கு நல்ல செயல்திறன் இருக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைக்கான ஒப்புதலை இந்த மாதம் பெறலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

 சுப தேதிகள் : 1,2,4,6,8,9,10,11,13,15,17,19,20,21,23,25,26,28,29,30,31

அசுப தேதிகள் : 3,5,7,12,14,16,18,22,24,27