மகாளயபட்சம் என்பது பித்ரு வழிபாட்டிற்கான நேரம் ஆகும். இது பாரம்பரியமாக நடைபெறும் வழிபாடு என்று கூறலாம். இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நமக்கு முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். அதன் மூலம் நமது வாழ்வும் நமது சந்ததியினரின் வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டில் செய்யப்படும் முக்கிய சடங்கு பித்ரு தர்ப்பணம் ஆகும். பித்ரு தர்ப்பணம் பற்றிய அனைத்து விவரங்களையும் ஆஸ்ட்ரோவேதின் இணைய தளத்தில் உள்ள இது சம்பந்தமான பதிவில் நீங்கள் காணலாம்.
இக்கட்டுரையில், மகாளய பித்ரு தர்ப்பணத்தை எளிமையாகவும், படிப்படியாகவும் செய்யும் முறைகளை விரிவாகப் பார்ப்போம்.
மகாளயபட்சம் காலத்தில், முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமியில் வந்து தங்களது சந்ததிகள் மூலம் வழங்கப்படும் தர்ப்பணம், பித்ரு பூஜை, பிண்டங்கள் ஆகியவற்றைப் பெற்று திருப்தியடைவதாக ஐதீகம். இந்தக் காலத்தில் தர்ப்பணம் செய்தால், பித்ருக்களின் ஆசி எளிதில் கிடைக்கும்.
தர்ப்பணம் செய்வதற்கு முன்பான ஏற்பாடுகள்
தர்ப்பணம் செய்வதற்கு முன் சில முக்கியமான பொருட்கள் மற்றும் ஏற்பாடுகள் அவசியம். தர்ப்பை. இது ஒரு புல் வகை ஆகும். பித்ரு தர்ப்பணத்திற்கு இது மிகவும் அவசியம். அடுத்ததாக தண்ணீர். கங்கைத் தண்ணீர் கிடைத்தால் சிறந்தது. இல்லையெனில் வீட்டிலேயே கிடைக்கும் சுத்தமான நீர். பிறகு எள். கண்டிப்பாக கருப்பு நிற எள்ளைத் தான் பயன்படுத்த வேண்டும். அன்னம். வாழை இலை. அருகம்புல், அகத்தி இலை, துளசி போன்ற புனித இலைகள்
தர்ப்பணம் செய்யும் இடம்
ஆற்றங்கரைகள், குளம், கடற்கரை போன்ற நீர் நிலைகள் மற்றும் கோயில்கள் அருகிலுள்ள புனித குளங்கள் தர்ப்பணம் செய்ய உகந்த இடமாக கருதப்படுகிறது. வீட்டிலேயே சுத்தமான இடத்தில் கூட தர்ப்பணம் செய்யலாம். என்றாலும் நீர் நிலைகளில் செய்வது உத்தமமானதாக கருதப்படுகிறது. ஆனால் அனைவராலும் அவ்வாறு செய்ய இயலாது. அத்தகையவர்களை கருத்தில் கொண்டு அவர்களின் சார்பாக நீர்நிலைகளில் நடத்தும் சேவையை ஆஸ்ட்ரோவேத் வழங்குகிறது.
தர்ப்பணம் செய்யும் நாள் மற்றும் நேரம்
மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்யலாம். குறிப்பாக மகாளய அமாவாசை நாளில் செய்யப்படும் தர்ப்பணம் மிகுந்த பலனளிக்கும். காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை சூரிய உதய நேரமே சிறந்தது.
தர்ப்பணம் செய்யும் முறை – படிப்படியாக
முதலில், முன்னோர்களை மனதில் நினைத்து, “என் குடும்ப பித்ருக்கள் வந்து இந்த தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளமாற எண்ணிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். தர்ப்பையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நுனி உங்களை நோக்காமல், வெளியே நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையில் தர்ப்பை வைத்து, இடது கையில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னோர்களுக்காக நீரை ஊற்றும் போது, “ஓம் பித்ருப்யோ நம:” என்று மூன்று முறை சொல்ல வேண்டும். கருப்பு எள்ளை நீருடன் கலந்து, தர்ப்பையின் மேல் வைத்து கையில் எடுத்து முன்னோர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.மூன்று முறை செய்ய வேண்டும். இது பித்ருக்களுக்கு பசியாற்றும் அர்ப்பணிப்பாகக் கருதப்படுகிறது. சோறு சிறிதளவு உருட்டி தர்ப்பையின் மேல் வைத்து, முன்னோர்களின் பெயரை (தெரிந்தால்) நினைத்து அர்ப்பணம் செய்ய வேண்டும். அறியாவிட்டால், “என் குல பித்ருக்களுக்கு” என்று சொல்லி தரலாம்.
மந்திர உச்சரிப்பு மற்றும் தானம்
அர்ச்சகர் இருப்பின், அவர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லலாம். இல்லையெனில், “ஓம் பித்ருப்யோ நம:” அல்லது “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லி மனப்பூர்வமாக கூறலாம். பித்ருக்களை திருப்திப்படுத்த, பிச்சைக்காரர்களுக்கு அல்லது பிராமணர்களுக்கு அன்னம், பழம், பானம், உடை ஆகியவற்றை வழங்க வேண்டும்.இதுவே பித்ரு தானமாகக் கருதப்படும்.
பொதுவாக தர்ப்பணம் ஆண்கள் செய்வது வழக்கம். ஆனால் கணவர் இல்லாத விதவைகள், குழந்தையற்ற பெண்கள், மகன் இல்லாத குடும்பங்களில் பெண்களும் பித்ரு பூஜை செய்யலாம் என்று சில சாஸ்திரங்கள் கூறுகின்றன. முக்கியமானது தூய மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதே.
குடும்பத்தில் அமைதி, வளம், ஆரோக்கியம் பெருகும்.பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைத்து சந்ததிகள் செழிக்கலாம். பித்ரு தோஷங்கள் குறைந்து, திருமணம், சுகம், குழந்தைப்பேறு போன்ற தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஆனந்தம், ஒற்றுமை நிலைக்கும்.
தர்ப்பணம் செய்யும் நாளில் அசுத்தமான உணவு (மாமிசம், மதுபானம்) உட்கொள்ளக் கூடாது. கோபம், சண்டை, பொய் பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ருக்களை நினைத்து செய்யும் வேளையில் மனதில் வேறு எண்ணம் இருக்கக்கூடாது.
இந்த வழிபாடு வெறும் சடங்கு அல்ல. இது நம் முன்னோர்களின் நினைவாகவும், அவர்களின் அர்ப்பணிப்பை நன்றி கூறுவதற்கான வாய்ப்பாகவும் விளங்குகிறது. நாம் இன்று வாழ்வதற்கான அடித்தளம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்கள் செய்த தியாகங்களே என்பதைக் கற்றுக் கொள்ளும் சிறந்த வழி இதுவாகும்.
மகாளய பித்ரு தர்ப்பணம் என்பது பரம்பரை வழியாக வந்த ஒரு புனித கடமை. முன்னோர்களின் ஆன்மா நிம்மதி பெற நாமும் பங்களிக்க வேண்டும். இது வெறும் சடங்கு மட்டுமல்ல. குடும்ப பந்தங்களை உறுதிப்படுத்தும் ஆன்மீக பாலம். ஒவ்வொரு ஆண்டும் மகாளய பட்சத்தில் பக்தியோடு தர்ப்பணம் செய்தால், பித்ருக்களின் ஆசி எளிதில் கிடைத்து, வாழ்க்கை நல்வழியில் செல்லும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025