மகாளய அமாவாசை சடங்கு பித்ரு வழிபாடு எனப்படும். இந்த சடங்கை பின்பற்றுவதன் மூலம் சடங்கை செய்பவர் மட்டும் இன்றி அவர்களது தலைமுறையே அதனால் நன்மை அடைகிறது. மகாளயபட்சம் தினங்களில் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்திற்கு பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் நீரும் கலந்த தர்ப்பணம், பிண்டதானம் (அன்னப்பிண்டம்), தீபம், ப்ரார்த்தனை, அன்னதானம் ஆகியவை அவசியம். இந்த நாட்களில் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் ஆயுள், ஆரோக்கியம், பிள்ளைப்பேறு, செல்வ வளம், வம்ச விருத்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்து சமயத்தில் பித்ரு தர்ப்பணம் என்பது ஒரு மிகப்பெரிய ஆன்மீக சடங்காகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி கழித்து அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் என அழைக்கப்படுகின்றன. இக்காலத்தில், ஒவ்வொரு நாளும் அந்தந்த திதி அடிப்படையில் முன்னோர்களுக்கான சடங்குகள், தர்ப்பணம், பிண்டதானம், அன்னதானம் போன்றவை செய்யப்படுகிறது. இதன்மூலம் பித்ருகள் திருப்தி அடைந்து குடும்பத்தாருக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள் என நம்பப்படுகிறது. மகாளயபட்சத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோவேதில் 15 நாட்கள் தர்ப்பணம் 5 புரோகிதர்கள் நடத்தும் பித்ரு பூஜை, தனிப்பட்ட த்ரிகண்ட ஹோமம், தில ஹோமம் மற்றும் பல சடங்குகள் இடம் பெறுகின்றன.
மகாளயபட்சம் பதினைந்து நாட்கள் என்பதும் அந்த நாட்களில் தர்ப்பணம் மற்றும் திதி செய்வது வழக்கம் என்பதும் நாம் அறிவோம். ஆனால் எந்தெந்த திதி யார் யாருக்கானது மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் ஆசிகள் என்னவென்பதும் நம்மில் பல பேருக்கு தெரியாது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம் வாருங்கள். ஒவ்வொரு திதிக்கும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது குறிப்பிட்ட காரணங்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு குறிப்பிட்ட திதி உரியதாக அமைகிறது. அந்த திதியில் சடங்குகளைச் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா திருப்தி அடைவதாக கருதப்படுகிறது. மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியும் தனித்துவமான ஆற்றல் அதிர்வை தாங்கி நிற்கிறது. தர்ம சாஸ்திரம் மற்றும் கருட புராணத்தின் படி, ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்வது, தனித்துவமான அருளைப் பெற்றுத்தரும். இதன் மூலம் பித்ருக்களுடன் உள்ள ஆன்மிக இணைப்பு வலுப்பெற்று, உங்களுக்கும் உங்களின் தலைமுறைகளுக்கும் வாழ்வின் தரம் மேம்படும்.
திதி |
பலன் |
யாருக்காக செய்யப்படுகிறது |
1ஆம் திதி (பிரதமை) |
செல்வம் கிடைக்கும் |
நிறைவேறாத ஆசைகளால் இறந்தவர்கள் |
2ஆம் திதி (த்விதியை) |
நல்ல ஆரோக்கியமான சந்ததி கிடைக்கும் |
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவேதனையுடன் வாழ்ந்தவர்கள் |
3ஆம் திதி (த்ருதியை) |
உண்மையான ஆசைகள் நிறைவேறும் |
மரணத்திற்கு முன் துன்புற்றவர்கள் |
4ஆம் திதி (சதுர்த்தி) |
புத்தி, அறிவு, எதிரிகளை வெல்லும் சக்தி |
தாயை கவனிக்காமல் விட்டவர்கள், தத்தெடுத்த குழந்தைகள்/செல்லப்பிராணிகளைப் பிரிந்தவர்கள் |
5ஆம் திதி (பஞ்சமி) |
நல்ல அதிர்ஷ்டம், விரும்பியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு |
விலங்குகள், பறவைகளை கொன்றவர்கள் அல்லது உண்டவர்கள் |
6ஆம் திதி (ஷஷ்டி) |
புகழ், பெயர், கீர்த்தி |
குருவாக, வழிகாட்டியாக இருந்தவர்கள் |
7ஆம் திதி (ஸப்தமி) |
செல்வ வளம், உயர்ந்த நிலை, தலைமைத் திறன் |
தன்னலமின்றி உதவிய நண்பர்கள் |
8ஆம் திதி (அஷ்டமி) |
அனைத்து வகையான செழிப்பு |
அநீதியான வாழ்க்கை வாழ்ந்த முன்னோர்கள் |
9ஆம் திதி (நவமி) |
தலைமுறைக்கும் உறவு பாக்கியம், குடும்ப சந்தோஷம் |
விபத்து/இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தவர்கள், கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்த திருமணமான பெண்கள் |
10ஆம் திதி (தசமி) |
ஆசை நிறைவேற்றம், முயற்சிகளில் வெற்றி |
குழந்தைப் பருவம்/இளம் வயதிலேயே இறந்தவர்கள் |
11ஆம் திதி (ஏகாதசி) |
அறிவு, புத்தி |
நமக்கு வாழ்வாதாரமாக இருந்த பித்ருக்களுக்கு நன்றி செலுத்துதல் |
12ஆம் திதி (த்வாதசி) |
பொருளாதார வளர்ச்சி, தொடர்ச்சியான வெற்றி, ஆரோக்கியம், மன உறுதி, செழிப்பு |
சொத்து வாரிசு பிரச்சினையால் துரோகம் அனுபவித்து இறந்தவர்கள் |
13ஆம் திதி (திரயோதசி) |
நீண்ட ஆயுள், உயர்ந்த அதிகாரம் |
கடைசி நிலை நோயால் இறந்தவர்கள், ஜாதகத்தில் வரும் பித்ரு சாபம் நீங்க |
14ஆம் திதி (சதுர்த்தசி) |
ஆனந்தம், ஆரோக்கிய புத்துணர்ச்சி |
போரில்/ஆயுதத்தால் இறந்தவர்கள், பிறந்த ஊரைத் தவிர வேறு இடத்தில் தகனம் செய்யப்பட்டவர்கள். |
அமாவாசை (சர்வபித்ரு அமாவாசை) |
அனைத்து பித்ருக்களின் ஆசீர்வாதம், தேவதைகள் மற்றும் முனிவர்களின் அருள் |
அறிந்த, அறியாத எல்லா பித்ருக்களும் (மேற்கண்ட நாட்களை தவற விட்டால், அமாவாசை தர்ப்பணம் கட்டாயம்) |
மகாளய பட்சம் என்பது முன்னோர்களை நினைவுகூறும் காலம் மட்டுமல்ல, குடும்பத்திற்கும் சந்ததியினருக்கும் மூதாதையர்களின் ஆசியைச் சேர்க்கும் முக்கியமான ஆன்மீக வாய்ப்பாகும். ஒவ்வொரு நாளும் அந்தந்த திதியில் உரிய சடங்குகளைச் செய்வதன் மூலம், பித்ருகள் திருப்தி அடைந்து பிள்ளைப்பேறு, ஆரோக்கியம், செல்வ வளம், குடும்ப நலன் ஆகியவை பெருக ஆசி அளிப்பார்கள். மகாளய பட்சம் வழிபாடு செய்தல் மூலம், ஒருவரின் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நலமும் நிறைவுமாக வாழ வழி அமைவது நிச்சயம்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025