AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
மகா சிவராத்திரி - Maha Shivaratri , shivaratri slokas in tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி முன்னுரை:

சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் நாளாகும். இது, தேய்பிறை காலங்களில் வரும் சதுர்தசி நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிவராத்திரி தமிழ் மாதமாகிய மாசியில் (பிப்ரவரி மத்திய காலம் முதல் மார்ச் மத்திய காலம் வரை) வரும் பொழுது, அது மிகவும் புனிதத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாசி மாத சிவராத்திரியே ‘மகா சிவராத்தரி’ என்று மக்களால் நாடெங்கும் அனுசரிக்கப்படுகிறது. அன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள், சிவ ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மகா சிவராத்திரி

இதில் மகா சிவராத்திரி மிகவும் பிரசித்தி வாய்ந்தது. பல மகிமைகளை தன்னுள்ளே கொண்டது. மாதாந்திர சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி தேதியில் கொண்டாடப்படுகிறது, அதே சமயம் மாசி மாதம்  வரும் கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தின் ஒரு மகத்தான திருவிழா. சிவபுராணத்தின் படி, மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானும் பார்வதியும் திருமணம் செய்து கொண்டதாக நாம் அறிகிறோம். சிவராத்திரி பற்றிய விளக்கம் கருட புராணம், ஸ்கந்த புராணம், பத்மபுராணம் மற்றும் அக்னிபுராணம் முதலியவற்றில் காணப்படுகிறது.

சாஸ்திரங்களின்படி, மகாசிவராத்திரி நாளில் இருந்து படைப்பு தொடங்கியது என்று நம்பப்படுகிறது. இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

பிரளயத்துக்குப் பின் பிரபஞ்சம் தோன்றிய நாள்

முன்னொரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலக உயிர்கள் அனைத்தும் சிவனுக்குள் ஒடுங்கிப் போயின, எனவே உலகின் இயக்கம் நின்று விட்டது.  இதனைக் கண்ட சக்தி பிரபஞ்சம் இயங்க வேண்டும் அதற்கு தாங்கள் கருணை புரிய வேண்டும் என்று சிவனை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டாள். அப்போது சிவன்  தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது சக்தி சிவனை நோக்கி நான் என் மனதில் தங்களை தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனை மகா சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே நடக்கட்டும் என்று அருள் புரிந்தார்.

நீலகண்டனாய் அருள் புரிந்த நாள்

பாற்கடலைக் கடைந்த போது கடலில் இருந்து ஹாலாஹலா என்ற கொடிய விஷம் வெளிப்பட்டது. இந்த விஷத்திற்கு உலகம் முழுவதையும் அழிக்கும் சக்தி இருந்ததால், அதில் பங்கேற்ற தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். அவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர், உலகத்தை அழிவிலிருந்து காக்க அவர் விஷத்தை அருந்தினார். ஆனால் அவர் அதை விழுங்கவில்லை, மாறாக அவர் அதை தனது தொண்டையில் வைத்திருந்தார். இதனால், அவரது தொண்டை நீல நிறமாக மாறியதால், அவருக்கு நீலகண்டன் என்று பெயர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

அண்ணாமலையாக சிவன்  ஜோதியாக தோன்றிய நாள்

சிவபுராணத்தில் உள்ள மற்றொரு புராணக்கதை, இரண்டு முக்கிய இந்து கடவுள்களான பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு இடையேயான யார் உயரந்தவர் என்ற சண்டையை குறிப்பிடுகிறது. சண்டை மிகவும் கடுமையானது, மற்ற தேவர்கள் சிவனிடம் ஓடி வந்து தலையிடும்படி கெஞ்சினார்கள். அவர்களின் சண்டை அர்த்தமற்றது என்பதை சிவன் அவர்களுக்கு புரிய வைக்க விரும்பினார். அவர் ஒரு பெரிய நெருப்புத் தூணாக உருவெடுத்து பிரம்மா மற்றும் விஷ்ணு முன் தோன்றினார். அதன் அளவைக் கண்டு வியந்த அவர்கள் அதன் ஆரம்பம் மற்றும் முடிவைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். முதலில் யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே உயர்ந்தவர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.விஷ்ணு வராஹமாக மாறி பூமியில் மூழ்கி தேடும் போது பிரம்மா அன்னமாக மாறி மேலே எழுந்தார். ஆனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தேடியும், இருவராலும் அடி மற்றும் முடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் பிரம்மா மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்த  தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க நான் சிவனின் தலையில் இருந்து வருகிறேன் என தாழம்பூ பதில் அளித்தது. அதனால் தேடுவதை நிறுத்த பிரம்மா முடிவு செய்து அந்த மலரை பொய் சாட்சியாக வைக்க முடிவு செய்தார்.

உண்மை அறிந்து கோபம் கொண்ட சிவன் பிரம்மாவிற்கு தனி கோவில் அமைத்து யாரும் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். தாழம்பூவும் பொய்  சாட்சி கூறியதால் இனிமேல் எந்த வழிபாட்டிற்கும் தாழம்பூ உகந்தது அல்ல என்று கூறிவிட்டார். தேவர்கள் சிவனை வேண்ட சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.  எனவே இந்த நாள் மிகவும் புனிதமானது மற்றும் இது மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவனை வழிபட்டால் செழிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.

வில்வ இலையும் சிவ பூஜையும்

சிவராத்திரியில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழிப்பார்கள். இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஒரு ஏழை பழங்குடி மனிதன் சிவனின் தீவிர பக்தன். ஒரு நாள், விறகு சேகரிக்க காட்டிற்குச் சென்றான். ஆனால் அவன் வழி தவறி விட்டதால் இரவுக்குள் வீடு திரும்ப இயலவில்லை. அவன் காட்டில் சுற்றித் திரிந்தபோது, ​​அருகில் வனவிலங்குகள் உறுமுவதைக் கேட்டு, பயத்துடன், ஒரு  மரத்தின் மீது ஏறி, பகல் வரை ஒதுங்கினான். தூங்கினால் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் தூங்காமல் இருந்தான். மேலும் தூக்கம் வராமல் இருக்க மரத்திலிருந்து இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து சிவனின் பெயரை உச்சரித்தவாறு கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அவன் ஏறி இருந்த மரம் வில்வ மரம். அதன் கீழே ஒரு லிங்கம் இருந்தது. அவன் போட்ட இலைகள் அந்த லிங்கத்தின் மீது விழுந்தன. இந்த தற்செயலான இரவு வழிபாடு அவனுக்கு தெய்வீக பேரின்பத்தை வழங்கியது.  அவன் சிவனின் பரிபூரண அருளைப் பெற்றான். மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் விரதம் இருக்கும் போது இந்தக் கதையை ஓதுவார்கள். இரவு முழுவதும் விரதம் இருந்து சிவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்பார்கள்.

மகாசிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரி வழிபாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் அன்று ஒரு நாளில் செய்யும் வழிபாடு / விரதம்/ பூஜை/ தியானம்/ மந்திர பாராயணம்  ஓர் ஆண்டிற்கான பலனை அளிக்கும். எனவே தான் சிவராத்திரி விரத அனுஷ்டானம் நமக்கு சிறந்த பலனைக் கொடுக்கின்றது. சைவ சமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜை முறை என்று விரிவான விளக்கங்களை நாம் காணலாம். மகா சிவராத்திரி அன்று ஆலயங்களில்  இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவ பெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் பிரியமானது.

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி?

மகாசிவராத்திரி தினத்தில் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். குளித்து முடித்து தூய ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் சிவனுக்கும் லிங்கத்திற்கும் பூஜை செய்ய வேண்டும். பூஜையில் வில்வ இலையை பயன்படுத்த வேண்டும். இதனால் முற்பிறவி பாவங்கள் நீங்கும்.  மூன்று வேளையும் உண்ணாமல் இருந்து சிவ பெருமானை வழிபட்டு நான்கு ஜாம பூஜைகள் செய்து வழிபட வேண்டும். உடல் நலப் பிரச்சினைகள் அல்லது வயது மூப்பு காரணமாக முழு நாளும் உணவு அருந்தாமல் இருக்க முடியாது என்பவர்கள் பழச்சாறு, பழங்களைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்தலாம்.  சிவாலங்களுக்கு சென்று அங்கு நடக்கும் நான்கு ஜாம பூஜைகள் தரிசித்து செய்து வழிபடலாம். இரவில் கண் விழிக்க வேண்டும்.  சிவ புராணம் திருவாசகம் பாராயணம் செய்யலாம்.

மகாசிவராத்திரி விரதத்தின் பலன்கள்

சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடுவதால், சிவனின்  அருளால்  உங்கள் கவலைகள் யாவும் தீரும்.  நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிவபெருமானுக்கு உரிய சில மந்திரங்கள்

சிவராத்திரி அன்று இரவில் கண்விழித்து மந்திரங்களை உச்சரிப்பவருக்கு சிவபெருமான் மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஓம் நமசிவாய

இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவபெருமானை மகிழ்விக்கும் எளிய மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் அவர் மகிழ்ச்சி அடைகிறார். சிவபெருமானின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். பலன் தரும். சிவராத்திரியன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே. சுகந்திம் புஷ்டிவர்தனம். ஊர்வாருகமிவ பந்தணான். ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ॥

அகால மரணத்தைத் தவிர்க்கவும், கடுமையான நோய்களின் பிடியில் இருந்து விடுபடவும் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் பலனளிக்கிறது. சிவலிங்கத்திற்கு நீர் மற்றும் மலர்களை அர்ப்பணிக்கும் போது மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் பலனளிக்கும்.

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவ காயத்ரி மந்திரம் 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவா காயத்ரி மந்திரம் 2

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

பிரதோஷ மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

தரித்திரம் நீக்கும் மந்திரம் :

ஓம் ருத்ராய ரோகநாஷாய

அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ

சிவ மந்திரம்

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே

குணைகஸிந்தவே நம சிவாய

தாமலேச தூதலோக

பந்தவே நம சிவாயநாம

சோஷிதா நமத்

பவாந்தவே நம சிவாய

பாமரேதர ப்ரதாத

பாந்தவே நம சிவாய

ருத்ர மந்திரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய

மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய

த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய

ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

சிங் சிங் சிவாய ஓம்

மூல மந்திரம்

ஓம் நம சிவாய

சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி (சிவனின் 108 போற்றி)

ஓம் சிவாய போற்றி

ஓம் மஹேஸ்வராய போற்றி

ஓம் சம்பவே போற்றி

ஓம் பினாகினே போற்றி

ஓம் சசிசேகராய போற்றி

ஓம் வாம தேவாய போற்றி

ஓம் விரூபக்ஷாய போற்றி

ஓம் கபர்தினே போற்றி

ஓம் நீலலோஹிதாய போற்றி

ஓம் சங்கராய போற்றி

ஓம் சூலபாணயே போற்றி

ஓம் கட்வாங்கினே போற்றி

ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி

ஓம் சிபி விஷ்டாய போற்றி

ஓம் அம்பிகா நாதாய போற்றி

ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி

ஓம் பக்த வத்ஸலாய போற்றி

ஓம் பவாய போற்றி

ஓம் சர்வாய போற்றி

ஓம் திரிலோகேசாய போற்றி

ஓம் சிதிகண்டாய போற்றி

ஓம் சிவாப்ரியாய போற்றி

ஓம் உக்ராய போற்றி

ஓம் கபாலினே போற்றி

ஓம் காமாரயே போற்றி

ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி

ஓம் கங்காதராய போற்றி

ஓம் லலாடாக்ஷாய போற்றி

ஓம் காலகாளாய போற்றி

ஓம் க்ருபாநிதயே போற்றி

ஓம் பீமாய போற்றி

ஓம் பரசுஹஸ்தாய போற்றி

ஓம் ம்ருகபாணயே போற்றி

ஓம் ஜடாதராய போற்றி

ஓம் கைலாஸவாஸிநே போற்றி

ஓம் கவசிநே போற்றி

ஓம் கடோராய போற்றி

ஓம் திரிபுராந்தகாய போற்றி

ஓம் வ்ருஷாங்காய போற்றி

ஓம் வ்ருஷபாரூடாய போற்றி

ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி

ஓம் ஸாமப்ரியாய போற்றி

ஓம் ஸ்வரமயாய போற்றி

ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி

ஓம் அநீச்வராய போற்றி

ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி

ஓம் பரமாத்மநே போற்றி

ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி

ஓம் ஹவிஷே போற்றி

ஓம் யக்ஞ மயாய போற்றி

ஓம் ஸோமாய போற்றி

ஓம் பஞ்வக்த்ராய போற்றி

ஓம் ஸதாசிவாய போற்றி

ஓம் விச்வேச்வராய போற்றி

ஓம் வீரபத்ராய போற்றி

ஓம் கணநாதாய போற்றி

ஓம் ப்ரஜாபதயே போற்றி

ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி

ஓம் துர்தர்ஷாய போற்றி

ஓம் கிரீசாய போற்றி

ஓம் கிரிசாய போற்றி

ஓம் அநகாய போற்றி

ஓம் புஜங்கபூஷணாய போற்றி

ஓம் பர்க்காய போற்றி

ஓம் கிரிதன்வநே போற்றி

ஓம் கிரிப்ரியாய போற்றி

ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி

ஓம் புராராதயே போற்றி

ஓம் மகவதே போற்றி

ஓம் ப்ரமதாதிபாய போற்றி

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி

ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி

ஓம் ஜகத்வ் யாபினே போற்றி

ஓம் ஜகத் குரவே போற்றி

ஓம் வ்யோமகேசாய போற்றி

ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி

ஓம் சாருவிக்ரமாய போற்றி

ஓம் ருத்ராய போற்றி

ஓம் பூதபூதயே போற்றி

ஓம் ஸ்தாணவே போற்றி

ஓம் அஹிர் புதன்யாய போற்றி

ஓம் திகம்பராய போற்றி

ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி

ஓம் அநேகாத்மநே போற்றி

ஓம் ஸாத்விகாய போற்றி

ஓம் சுத்த விக்ரஹாய போற்றி

ஓம் சாச்வதாய போற்றி

ஓம் கண்டபரசவே போற்றி

ஓம் அஜாய போற்றி

ஓம் பாசவிமோசகாய போற்றி

ஓம் ம்ருடாய போற்றி

ஓம் பசுபதயே போற்றி

ஓம் தேவாய போற்றி

ஓம் மஹாதேவாய போற்றி

ஓம் அவ்யயாயே போற்றி

ஓம் ஹரயே போற்றி

ஓம் பூஷதந்தபிதே போற்றி

ஓம் அவ்யக்ராய போற்றி

ஓம் பகதேத்ரபிதே போற்றி

ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி

ஓம் ஹராய போற்றி

ஓம் அவ்யக்தாய போற்றி

ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி

ஓம் ஸஹஸ்ரபதே போற்றி

ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி

ஓம் அனந்தாய போற்றி

ஓம் தாரகாய போற்றி

ஓம் பரமேஸ்வராய போற்றி