மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கத் தான் செய்கின்றன. இவை அனைத்தும் நிறைவேற நமக்கு பணம் அவசியமாகிறது. பணம் சம்பாதிப்பதற்கு தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த முயற்சிகள் வெற்றி அடைய ஓருவரிடம் பணம் தங்க வேண்டும் என்றால் மகா லட்சுமியின் அருள் வேண்டும். திருமகளாம் மகாலட்சுமியின் அருள் இருந்தால் தான் இந்த உலகில் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.
மகா லட்சுமியின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மகா லட்சுமியின் அருளைப் பெற நாம் மகா விஷ்ணுவின் அருளையும் பெற வேண்டும். மகா விஷ்ணுவின் திருமார்பில் தான் மகா லக்ஷ்மி குடி கொண்டிருப்பார். மகா விஷ்ணுவையும் மகா லட்சுமியையும் ஒரு சேர வழிபடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஒரு தாம்பாளத் தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நவதானியத்தை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள் அதில் நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு தாமரைத் திரியை வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை லட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன் ஏற்றி வைத்து வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். அவ்வாறு வழிபடும் பொழுது விஷ்ணுவின் நாமத்தையும் கூறி வழிபட வேண்டும். எவ்வாறு வழி;
*கேட்டதை கொடுக்கும் மந்திரம்*
மகாலட்சுமி வீட்டிற்குள் வரவும், நாம் கேட்டது அனைத்தும் கிடைக்கவும் மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை தினமும் ஐந்து முறை கூறினால் போதும்.* மகாவிஷ்ணுவிற்கு உரிய மந்திரங்கள் பல இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. யார் ஒருவர் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்கிறதோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் நிரந்தரமாக இருந்து அருள் புரிவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விஷ்ணு சகஸ்ர நாமத்தை நம் அனைவராலும் எளிதில் பாராயணம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக ஒரு சில நாமங்களை மட்டும் நாம் உச்சரிப்பதன் மூலம் நமக்கு சில நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் நாம் கேட்டது கிடைப்பதற்கும், கடன், எதிரி, நோய் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கும் கூற வேண்டிய விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
விஷ்ணு சகஸ்ர நாமத்தில் மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த ஆயிரம் நாமங்களில் இருந்து ஐந்தே ஐந்து நாமங்களை மட்டும் தினமும் நாம் பாராயணம் செய்தோம் என்றால் நாம் என்ன நினைத்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐந்து நாமங்களை ஐந்து முறை கூறினால் போதும். இந்த நாமத்தை கூற தொடங்கக்கூடிய நாள் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். அதுவும் வளர்பிறை வியாழக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தில் காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு மேலே கூறியது போல வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மகாவிஷ்ணுவிற்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து பின்வரும் இந்த ஐந்து நாமங்களை ஐந்து முறை கூற வேண்டும். பிறகு தினமும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே வர வேண்டும். காலையிலும் மாலையிலும் தீபமேற்றி இந்த மந்திரத்தை கூறும் பட்சத்தில் விரைவிலேயே நாம் கேட்டது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருக்கக் கூடிய தரித்திர முற்றிலும் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் குடியேறுவதற்குரிய ஒரு அற்புதமான மந்திரம் ஆக தான் இந்த மந்திரம் திகழ்கிறது.
நம்முடைய வாழ்நாள் முடியும் வரை பணம் என்பது தேவைப்படும். நம்முடைய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்று நாம் நினைப்போம். ஏதாவது ஒரு தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த தேவையாக இருந்தாலும் அதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வைத்து மகாவிஷ்ணுவை நினைத்து கூறுவதன் மூலம் நாம் கேட்டது கிடைக்கும்.
“ஓம் பூதபவனாய நமஹ
ஓம் ஸம்மிதாய நமஹ
ஓம் ஸ்ரஷ்ட்ரே நமஹ.
ஓம் ஸுவீராய நமஹ
ஓம் ப்ரியகிருதே நமஹ”
விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஐந்தே ஐந்து நாமங்களை முழு மனதோடு மகாவிஷ்ணுவை நினைத்து தினமும் கூறுபவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும், கேட்டது கிடைக்கும், வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும், மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்கும்
September 11, 2025
September 10, 2025
September 10, 2025