Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
குடும்ப பாதுகாப்பிற்கு அம்மன் வழிபாடு | Amman vazhipadu
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குடும்பப் பிரச்சினை தீர்க்கும் அம்மன் வழிபாடு

Posted DateJune 6, 2024

நாம் அனைவரும் பிரச்சினை இல்லாத வாழ்க்கை வாழத்தான் விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில், ஒரு சிலருக்கு, பெரும்பாலான சமயங்களில் அவ்வாறான வாழ்க்கை அமைவதில்லை. வாழ்வில் ஏதாவது ஒரு பிரச்சினயை சந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு வயதினருக்கும் அவரவர் வயதிற்கேற்ப பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றாலும் அது மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் என்று எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வரும் பொழுது நமது மனது சஞ்சலப்படுகிறது. “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலைக்கு நாம் ஆளாக நேருகிறது. நம் கை ,மீறி போகும் சமயத்தில் நாம் இறைவனைத் தான் நாடுவோம். அந்த வகையில் நமது குடும்ப பிரச்சினைகளைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உங்களுக்கு ஏதாவது பிரச்சினை தீர வேண்டும் என்றாலும் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது  பிரச்சனை இருந்தாலும் சரி அவை தீர இந்த அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். ஒன்பது எலுமிச்சைப் பழங்களை எடுத்து அவற்றை மாலையாகக் கோர்த்துக் கொள்ளுங்கள். அம்மனுக்கு வேப்பிலை பிடிக்கும் எனவே அதோடு வேப்பிலையும் எடுத்து நடு நடுவே கோர்த்துக் கொள்ளுங்கள். அதாவது எலுமிச்சைப் பழம் மற்றும் வேப்பிலையை மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்று உங்கள் பிரச்சினை தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து அம்மனுக்கு சாற்றச் செய்யுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மேற்கொள்ளுங்கள்.

வீட்டு விலக்காகும் நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது என்பதற்காக வருந்தாதீர்கள். அது தவிர்க்க முடியாத ஒன்று எனவே அந்த நேரத்தில் விட்டு விட்டு பிறகு தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்து வந்தால், அந்த அம்பாள் உங்கள் குடும்பத்தை தீராத பிரச்சினையில் இருந்து காத்தருள்வாள். உங்கள் பிரச்சினை எதுவாயினும் அது விரைவில் தீரும்.  அம்மனிடம் சரணாகதி அடைந்து விட்டால் அவள் உங்களை நிச்சயம் காப்பாள். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு அம்மனின் அருளால் பிரச்சினை இல்லாத வாழ்க்கையை வாழுங்கள்.