குபேர சம்பத்து பெற கூற வேண்டிய மந்திரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குபேர சம்பத்து பெற கூற வேண்டிய மந்திரம்

Posted DateJune 29, 2025

சம்பத்து என்றால் செல்வம் என்று பொருள். செல்வத்தின் அதிபதியாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி. அந்த செல்வத்தை பகிர்ந்து அளிப்பவாரக குபேரன் விளங்குகிறார். நவநிதிகளுக்கும் இவரே அதிபதி ஆவார். குபேர சம்பத்து என்பது செல்வ வளம், அதிர்ஷ்டம், மற்றும் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவதைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். அதாவது குபேர சம்பத்து என்பது செல்வச் செழிப்பையும், அளவற்ற செல்வத்தையும் குறிக்கும் ஒரு சொல். குறிப்பாக, குபேரனின் அருள் பெற்று செல்வத்தில் சிறந்து விளங்கும் நிலையைக் குறிக்கிறது. செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பது அன்று.  இது வீடு, நிலம், ஆபரணங்கள், போன்ற அனைத்து வகையான செல்வங்களையும் உள்ளடக்கியது.

செல்வத்தை சேர்க்க நமக்கு முதலில் வருமானம் தேவை. அப்படியே வருமானம் வந்தாலும் அதனை சேர்த்து வைக்க வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும். அதன் மூலம் சொத்துக்களை சேர்ப்பது என்பது இயலும். ஆனால் வருமானம் வந்தாலும் ஒரு சிலருக்கு அதற்கு மேல் செலவு இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை ஒரு சிலரால் தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருக்கலாம். வரவுக்கு மேலே வரும் செலவுகளை கட்டுப்படுத்த இயலாமல் போகலாம். இதற்கெல்லாம் பரிகாரமாக நாம் குபேர வழிபாடு மேற்கொள்ளலாம்.

இந்தப் பதிவில் பணம் தங்கவும் குபேர சம்பத்து பெறவும் உண்டான மந்திரங்கள் பற்றிக் காண்போம்.  குபேர வழிபாடு மற்றும் மந்திரம் அதற்கு மிகச் சிறந்த வழி ஆகும். இது தன ஆகர்ஷனத்தை அளிக்கும். குபேரரை வணங்குவதன் மூலம் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.மேலும் குபேர நாணயத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் குபேர சம்பத்து கிடைக்கும். வீட்டில் பணத்தட்டுபாடு நீங்கி லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும். கணவன், மனைவி பிரச்சனை நீங்கும். தீராத வியாதிகள் தீரும்.

இந்த மந்திரங்களை  உச்சரிப்பதன் மூலம், ஒருவரது வாழ்க்கையில் பொருளாதார நிலை மேம்படும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.  மற்றும் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

குபேர சம்பத்து தரும் மந்திரங்கள்: 

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய, தனதான்யாதிபதயே தனதான்யசம்மிர்த்திம் மே தேஹி தபாய ஸ்வாஹா:

இது மிகவும் பிரபலமான குபேர மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

 ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஓம் குபேராய நமஹ:

இது செல்வத்தையும், செழிப்பையும் அதிகரிக்க உதவும் ஒரு மந்திரமாகும்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நிரந்ஜனாய வித்மஹே

நிராபாசாய தீமஹி

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் விஷ்ணு மற்றும் குபேரனின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

இந்த மந்திரங்களைக் கூறுவதற்கு முன் குபேர படத்தை வைத்து  விளக்கேற்றி படத்திற்கு  மஞ்சள் குங்குமம், சந்தனம் பூக்கள் சாற்றி வழிபடுவது மேலும் அதிக பலனை அளிக்கும்.