தினசரி கோலம் போடும்போது பெண்கள் செய்யக்கூடாத தவறு | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தினசரி கோலம் போடும்போது பெண்கள் செய்யக்கூடாத தவறு

Posted DateJune 29, 2025

நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வீட்டு வாசலில் கோலம் போடுவது. தலை முறை தலைமுறையாக நமது இரத்தத்தில் ஊறிய பழக்க வழக்கம் என்று கூடக் கூறலாம். என்றாலும் இன்றைய நவீன யுகத்தில், அவசர கதியில் நாம் ஓடிக் கொண்டிருப்பதால் பல பேர் இந்த பழக்கத்தை கை விட்டு விட்டார்கள். அது மட்டும் அன்று. இன்றைய வீடுகளின் அமைப்பு  பெரும்பாலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்பதால் அதற்கு இடம் இல்லாத நிலை கூட உள்ளது. மார்கழி மாதம் வந்து விட்டால் முற்காலங்களில் எல்லாம் தெருவையே அடைக்கும் அளவிற்கு பெரிய பெரிய கோலம் இடுவார்கள். அதற்கு வண்ணம் அளிப்பார்கள். இன்றும் அந்த வழக்கம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் சில இடங்களில் பின்பற்றப் படுகிறது.

கோலம் போடும்போது செய்யக்கூடாத தவறுகள்

நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திற்கும் சில சாஸ்திரங்களை கடை பிடிக்க வேண்டும். அந்த வகையில் கோலம் போடுவதற்கும் சில விதி முறைகள் உள்ளன. அவற்றை மீறுவது தவறாக கருதப் படுகிறது.

∙ வீட்டு வாசிலில் கோலம் போடும் போது, நிலைப் படியின்  உள் பக்கமாக இருந்து கொண்டு  வெளியில் கோலம் போடக் கூடாது.

 ∙ கோலம் போடும்போது குனிந்தபடி நின்றுதான் போட வேண்டுமே தவிர, அமர்ந்து கொண்டு போடக்கூடாது.

 ∙ ஈரமான தரையில் தான் கோலம் போட வேண்டும். தண்ணீர் காய்ந்து விட்டால் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு கோலம் போட வேண்டும்.

 ∙ தெற்குப் பார்த்து நின்ற படி கோலம் போடுதல் கூடாது.அல்லது  தெற்கு திசை நோக்கி கோலம் போடக் கூடாது. தெற்கு திசை எமனின் திசை என்பதால் எதிர்மறை ஆற்றலை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

∙ தெற்கில் முடியும்படி கோலம் போடக்கூடாது.

 ∙ இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

 ∙ அமாவாசை நாட்களிலும் வாசலில் கோலம் போடக்கூடாது.  இந்த நாட்களில் வாசலில் போடப்படும் கோலங்கள் இறந்தவர்களின் ஆத்மாக்களை வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

 ∙ கோலம் போடும்போது தவறுதலாக புள்ளிகளை வைத்துவிட்டால், அவற்றை காலால் அழிக்கக்கூடாது. கைகளால் மெதுவாக அழித்துவிடலாம்.

∙ பூஜை அறையில் போட வேண்டிய கோலங்களை வீட்டு வாசிலில் போடக் கூடாது. உதாரணமாக இருதய கமலம், சங்கு சக்கரம் போன்ற கோலங்கள். தெய்வ திரு உருவங்களையும் வாசலில் கால் மிதிக்கும்படி போடுதல் கூடாது.

∙ வேலைக்காரர்களைக் கொண்டு கோலம் போடக்கூடாது. இது குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே போடப்பட வேண்டும் என்று

இவை அனைத்தும் கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் ஆகும். இவற்றை கடைபிடிப்பதன் மூலம், வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரலாம்.