Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
ருத்ராட்சம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ருத்ராட்சம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Posted DateJuly 4, 2025

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் என்ற பெயருள்ள மரத்தின் விதை. இது சிவனின் கண் என போற்றப்படுகின்றது.ருத்ராட்சத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்களை தேவி  பார்வதிக்கு சிவபெருமான் மகாபுராணத்தில் விளக்கியுள்ளார். புனித நூல்களின்படி, சிவன் 1000 ஆண்டுகள் தியானத்தில் இருந்து விட்டு பின், ​​அவர் கண்களைத் திறந்தபோது, ​​கண்ணீர் துளிகள் கீழே விழுந்து பெரிய ருத்ராட்ச மரமாக வளர்ந்தன. ‘ருத்ரா’ என்பது சிவனைக் குறிக்கிறது, ‘அக்ஷ’ என்பது கண்ணீரைக் குறிக்கிறது, எனவே, ருத்ராட்சம் என்பது சிவனின் பரவசக் கண்ணீர் துளிகளைக் குறிக்கிறது. சிவனின் கண்களில் இருந்து  விழுந்த நீர்த் துளிகள் பூமியில் எங்கெல்லாம் சிதறியதோ அங்கெல்லாம் ருத்ராட்ச  மரங்கள் வளர்ந்தன. இவை இமய மலைப் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. சிவனின் ஆனந்தக் கண்ணீரில் இருந்து வந்த காரணத்தால் இதனை அணிந்தால் சிவன்  நம்மைக் கண் போலக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

ருத்ராட்சம் விளையும் இடங்கள்

ருத்ராட்ச மணிகள் சிவபெருமானின் வழிபாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பல நன்மைகளுக்காக அணியப்படுகின்றன. மேலே கூறியவாறு ருத்ராட்ச மணிகள் என்பது எலியோகார்பஸ் கனிட்ரஸ் என்ற மரத்தின் உலர்ந்த விதைகள். இந்த மரங்கள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், வளரும். ருத்ராட்சம் முக்கியமாக நேபாளம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வளர்கிறது. குறிப்பாக, இமயமலைப் பகுதிகளில் உள்ள குளிர்ச்சியான மலைப்பாங்கான இடங்களில் ருத்ராட்சம் செழித்து வளரும். ஜாவா, மலேசியா, தைவான் மற்றும் சீனாவின் சில பகுதிகள் போன்ற இடங்களில் ருத்ராட்சம் வளரும் இடங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

ருத்ராட்சத்தின் பயன்கள்

ருத்ராட்ச மணிகள் உடல் மற்றும் உணர்ச்சி சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தியானத்தில் தொடர்ந்து இருக்க உதவும்.  ஒளியைச் சுத்தப்படுத்தவும், சுற்றுப்புறங்களிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் உதவும்.

ருத்ராட்ச முகங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்:

ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உள்ளன. ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை ருத்ராட்சங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு முக ருத்ராட்சம் அமைதியையும் ஆன்மீக வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் இரண்டு முகம் ருத்ராட்சம் குரு-சிஷ்ய உறவில் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது.

∙ ஒரு முகம் (ஏகமுகி):

இது மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மோட்சம் கொடுக்கும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது. சிவபெருமானின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது, இதை அணிந்தால் சிவபெருமானைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

∙ இரண்டு முகம்:

இது அர்த்தநாரீஸ்வரர் சொரூபம். சக்தி இணைந்த ருத்ராட்சமாக பார்க்கப்படுகிறது குரு-சிஷ்ய உறவில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும். சந்திர கிரகத்தோடு தொடர்புடையது. பாவத்தை நீக்கவல்ல இந்த இரு முக ருத்ராட்சம், ஆண் – பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது.குன்டலினி சக்தியை எழுப்பும் தன்மைய கொண்டது. செல்வம் மற்றும் மன அமைதியை அளிக்க வல்லது.

∙ மூன்று முகம் 

மூன்று முக ருத்ராட்சம்  பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன்  ஆகிய மூன்று கடவுளர்களின் சக்திகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இதை அணிவதால், வாழ்வில் தைரியம், மன உறுதி, மற்றும் தலைமைப் பண்புகள் மேம்படும் என்று கருதப்படுகிறது. மேலும், இது செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளை அடக்கவும், ஆன்மாவை தூய்மையாக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது

∙ நான்கு முகம்

இது பிரம்மாவைக் குறிக்கும் ருத்ராட்சம் ஆகும். இதனை ஆளக்கூடியவர் புதன் பகவான். இதனை அணிபவர் ஆக்க சக்தியை பெறுவார். தன்னுள் இருக்கும் அறிவுக்  கூர்மை, திறமை, சாதூர்யத்தை வெளிப்படுத்தக் கூடிய நிலை இருக்கும். இதனை தங்களின் வலது கையில் கட்டினால் மிக சிறப்பானது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியாது.கவிஞர்கள். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நுண்கலை பயில்பவர்கள் இதனை அணிந்து கொள்ளலாம்.

 ∙ ஐந்து முகம்:

இது மிகவும் சிறப்புடையது. ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

∙ ஆறு முகம்

ஆறு முக ருத்ராட்சம் என்பது கார்த்திகேயக் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு ருத்ராட்சம் ஆகும். இது முருகப்பெருமானின் வடிவமாகக் கருதப்படுகிறது, மேலும் துணிச்சல், நம்பிக்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

∙ ஏழு முகம்

ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. மேலும், இது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பையும், தொழில் மற்றும் நிதி சார்ந்த வெற்றிகளையும் தரும் என்று நம்பப்படுகிறது. இது மகாலட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது.

∙ எட்டு முகம்

இது விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தையும், கேது கிரகத்தின் தாக்கத்தையும் குறிக்கிறது. இந்த ருத்ராட்சத்தை அணிவதால், ஞானம், அறிவு, தடைகளை நீக்கும் திறன் மற்றும் வாழ்வில் வெற்றி ஆகியவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

∙ ஒன்பது முகம்:

இந்த ருத்ராட்சம் ஒன்பது வித சக்திகளை உள்ளடக்கியது. கேது கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளது, இதை அணிவதால் மரண பயம் நீங்கும்.

∙ பத்து முகம் ருத்ராட்சம் :

 மகா விஷ்ணுவின் அம்சமாக பத்துமுக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. இது கோள்களினால் எற்படும் தீவினைகளிலிருந்து காக்கின்றது.ஆபத்து மற்றும் பீடைகளை நீக்க வல்லது. புண்ணியத்தைப்  பெற்றத் தரும்.  இதை அணிபவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும்,

 ∙ பதினொன்று முகம் ருத்ராட்சம் :

 ஏகாதச ருத்ராடசமான இதனை ருத்ர ரூபம் என்று  கூறலாம்.  இது அசுவமேத யாகம் செய்த பலனை அளிக்கும்.  சிவஞான சித்தியை அளிக்கும். அனுமனின் அம்சமாக 11முக ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. இதை அணிவதால் நேர்மையான பாதையை கடைப்பிடிப்பதோடு, எதிர்த்து வரும் தீய சக்திகளிலிருந்து காக்க வல்லது. துணிவையும், வெற்றியையும் தர வல்லது.

 ∙ பன்னிரண்டு முகம்:

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்றது. தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றைத் தரும்.

∙ பதின்மூன்று முகம்:

பரணி, பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்றது. குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

∙ பதினான்கு முகம்:

இது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது, இதை அணிவதால் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.

 

ருத்ராட்சம் அணிய வேண்டிய முறை

ருத்ராட்ச மணிகளை அணிவதற்கு முன் அதற்கு சக்தி ஊட்டப்பட வேண்டும். பாலில் 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவி, சுத்தமான துணியில் துடைக்கவும். சோப்பு அல்லது ரசாயனப் பொருட்களால் துவைக்க வேண்டாம். பின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைக் கூறி அதனை கழுத்தில் அணிந்து கொள்ளவும்.  இந்த செயல்முறை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மீண்டும் செய்யப்பட வேண்டும். ருத்ராட்சத்தை அணிய வயது பாலினம் எதுவும் கிடையாது. கலாச்சாரம் மதம் என்ற பாகுபாடு கிடையாது. இவற்றைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் இதனை அணியலாம். ருத்ராட்சத்தை எப்போதும் கழுத்தில் அணிய வேண்டும்.ஏதாவது காரணத்தினால், உங்களால் ருத்ராட்சத்தை அணிய முடியாவிட்டால், அதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும், பட்டு அல்லது பருத்தித் துணியில் சுற்றி வைக்க வேண்டும். உலோகப் பாத்திரத்தில் வைப்பதைத் தவிர்க்கவும்.குளிக்கும்போது ருத்ராட்ச மணியை அகற்றி ஒரு துணியில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

 

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:

 ∙ உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கான தூய்மையை அளிக்கிறது.

∙ ஆன்மீக நாட்டத்தை மேம்படுத்டுக்றது.

∙  பக்தி மார்கத்தில் மனம் லயிக்கின்றது.

∙ மனதில் அமைதி நிலவுகின்றது

∙ உடல் சூட்டைக் குறைத்து சமநிலை அளிக்கிறது.

∙ உடலின்  இரத்த அழுத்தம் சீரடைகின்றது.

∙ எண்ணங்களில் தெளிவு  பிறக்கின்றது

∙ விபத்துக்கள் நேராமல்  நம்மைக் காக்கின்றது

∙ துர் மரணங்களில் இருந்து நம்மைக் காக்கின்றது