நிச்சயமற்ற இந்த வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று நமக்கு தெரியும். என்றாலும் அன்றாட வாழ்வை நாம் ஓட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அதற்கு தேவை பணம். பணம் இருப்பவர்கள் பற்றிக் கவலையில்லை. ஆனால் பணத்திற்கு கவலைப்படுபவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதிலும் அவசியமான நேரத்தில் அவசரத்திற்கு பணம் தேவைப்படும் போது யார் நமக்கு உதவி புரிவார்கள் என்பது கேள்விக் குறி. திடீர் செலவை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது நாம் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் எவ்வாறு சமாளிப்பது? ஒரு வியாபாரம் அல்லது தொழில் செய்கிறோம். தொழிலில் எதிர்பாராத விதமாக பணத்தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எவ்வாறு சமாளிப்பது? வீட்டில் சில சமயம் பண நெருக்கடி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது? இதற்கான பரிகாரங்கள் பற்றித் தான் இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
பொதுவாக நாம் வீட்டில் பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றுவது வழக்கம். அவ்வாறு இல்லை எனில் அந்த பழக்கத்தை தவறாமல் மேற்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்து தூய ஆடைகளை அணிந்து பூஜை அறையில் இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றப்படும் விளக்குகள் புற இருளை அகற்றுவது மட்டும் இன்றி நமது அக இருளையும் அகற்றும். அதாவது நமது மனதில் காணப்படும் தேவையற்ற கசடுகளை அது நீக்கும் என்பது நம்பிக்கை.
அவ்வாறு தீபம் ஏற்றும் போது கூடுதலாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அகல் விளக்கில் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல் மணிகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் பாதி நெய் பாதி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் தாமரை தண்டு திரியை போட்டு மூன்று சொட்டு தேனை விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த முறையில் தினமும் நாம் தீபமீற்றி வழிபாடு செய்தோம் என்றால் அனைத்து தெய்வங்களின் அருளாலும் நமக்கு பணவரவு உண்டாகும். தாமரை தண்டு திரி கிடைக்கவில்லை என்பவர்கள் தாமரை விதைகளை அந்த எண்ணையில் போட்டு தீபம் ஏற்றலாம். தாமரை விதைகளை கடையிலிருந்து வாங்கி அப்படியே உபயோகப்படுத்துவதற்கு பதிலாக சுத்தமான காய்ச்சாத பசும்பாலில் கழுவி காயவைத்து பிறகு அதை எண்ணெயில் போட்டு தீபம் ஏற்றும் பொழுது தாமரை தண்டு திரியை போட்டு தீபம் ஏற்றுவதற்கு உரிய பலனை பெற முடியும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெருமாளுக்கு உரிய ஏகாதசி போன்ற நாட்களிலோ ஏற்ற ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு நல்ல நேரம் பார்த்து ஏற்ற ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வர உங்கள் பணப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குறிப்பாக உங்களுடைய பண நெருக்கடிகளை உங்களால் சமாளிக்க இயலும். அதற்கான திறன் மற்றும் பலம் இந்த தீப வழிபாடு அளிக்கும். மேலும் சில எளிய பரிகாரங்கள் பற்றிக் காண்போம்.
செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் விநாயகர் கோவிலில் வைத்து கொள்ளு தானம் செய்ய வேண்டும். இதை ஏழு செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.
செவ்வாய்க் கிழமைகளில் 51 எண்ணிகையிலான வெற்றிலை மாலையை விநாயகருக்கு சாற்ற கடன் பிரச்சினை தீரும்.
செல்வ விநாயகர் என்ற பெயரில் விளங்கும் விநாயகருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து வணங்க வரபணப் பிரச்சினைகள் தீரும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025