இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நாகரீகம் வளர வளர நம் தேவைகளும் அதிகரிக்கின்றன. நம் அத்தியாவசிய தேவைக்கென்று சில பொருட்கள், ஆடம்பர தேவை கருதி சில பொருட்கள், பொழுது போக்குவதற்கு சில பொருட்கள் என்று இப்படி நம் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் நீண்ட பட்டியலே போடலாம். ஒரு பக்கம் இப்படி இருக்க ஒரு சிலருக்கு தமது அன்றாட வாழ்விற்கே கடன் வாங்கும் சூழல் இருப்பதையும் நாம் காணலாம். கல்யாணம், காது குத்தல், சீமந்தம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம் என்று சுப நிகழ்ச்சிகளை நடத்த ஒரு சிலர் கடன் வாங்குவார்கள். வேறு சிலரோ வீடு, வாகனம் வாங்க கடன் வாங்குவார்கள். எதற்காக வாங்கினாலும் கடன் கடன் தான். வாங்கிய கடனை சரியான நேரத்தில் அடைத்து முடிக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அதை அடைத்து முடிக்கும் வரை அவர்கள் தவிக்கும் தவிப்பு, கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல என்பார்கள். கடன் பிரச்சினைகள் தீர நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இப்பதிவில் காணலாம்.
வாழ்வில் நாம் பணத்தை பிறரிடம் அல்லது வங்கியில் கடன் வாங்குவதற்கு முன் அது அவசியம் தேவையா என்று யோசித்து வாங்குவது நல்லது. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் என்ற கூற்றில் இருந்து கடன் வாங்கினால் எத்துனை அளவு கலக்கம் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள இயலும். எனவே நாம் கடன் வாங்கும் போது நம்மால் அதனை திருப்பிச் செலுத்த முடியமா? என்பதனை சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து அதை வாங்க வேண்டும் இதனை வாங்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு கடனாளியாக ஆகுதல் கூடாது. அப்படி அவசியம் வாங்க வேண்டும் என்றால் தகுதிக்கு ஏற்றார் போல வாங்க வேண்டும்.

கடன் தீர மட்டும் அன்றி பொதுவாக நமது அனைத்துப் பிரச்சினைகளும் தீர கால பைரவர் வழிபாடு சிறந்தது. கால பைரவர் காலத்திற்கு அதிபதியாக கருதப்படுகிறார். காலபைரவரை நாம் வழிபாடு செய்தால் நமது பிரச்சினைகள் தீர்வது மட்டும் அன்றி பல நன்மைகளையும் பெறலாம். முழு மனதோடு காலபைரவரை நாம் வழிபாடு செய்தால் பிரச்சனை தீர்வதற்குரிய வழி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலபைரவரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்.
இந்த வழிபாட்டை அஷ்டமி தினத்தில் தான் செய்ய வேண்டும். சிவபெருமானின் அம்சமான கால பைரவருக்குரிய திதியான அஷ்டமி திதி என்பது இந்த வழிபாட்டிற்கு நல்ல பலனை தரும். சூரிய உதயம் ஆகும்பொழுது எந்த திதி இருக்கிறதோ அந்த திதி தான் அன்றைய நாள் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது இந்த வழிபாட்டை நாம் வீட்டிலேயே செய்யலாம். அவ்வாறு செய்வதற்கு நமக்கு காலபைரவரின் சிலையோ படமோ தேவை என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. இதற்கு நமக்கு புதிதாக வாங்கிய எட்டு அகல் விளக்குகள் வேண்டும். இந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். கால பைரவருக்கு நெய்வேத்தியமாக அவல் வெல்லம் இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். கால பைரவாஷ்டகத்தைபாராயணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை இரவு 8 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தொடர்ச்சியாக 8 அஷ்டமிகள் நாம் முதலில் ஒரே ஒரு பிரச்சினைக்கு மட்டும் தீர்வு வேண்டி (அதாவது கடன் தீர வேண்டும் என வேண்டி) பைரவருக்கு எட்டு தீபங்கள் ஏற்றி வைத்து அவருடைய அஷ்டகத்தை படித்து வழிபடுவதன் மூலம் அந்த பிரச்சனைக்கான தீர்வு காலபைரவர் அருளால் விரைவில் கிட்டும்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026