என்ன செய்தால் கடன் தீரும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு கழுத்தை நெருக்கும் கடன் இருக்கிறதா? அதில் இருந்து நீங்கள் மீண்டு வர விரும்புகிறீர்களா? எத்தனயோ பரிகாரம் செய்தும் அதில் இருந்து விடு பட முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. கடன் தீர நாம் செய்ய வேண்டியது ஒரு எளிய பரிகாரம் தான்.
நாம் உணவில் பயன்படுத்தும் பாசிபருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சக்திக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம். வெல்லம் சிறிது வாங்கிக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முந்தைய நாள் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் பசுவிற்கு அதனை கொடுத்து விடுங்கள். பசுவை கோமாதா என்று கூறுவார்கள். கோமாதாவிற்கு இந்த உணவை வழங்குவதன் மூலம் உங்களுக்கு கோமாதாவின் ஆசிகள் கிட்டும். பசுவின் மேனியில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நீங்கள் அவர்கள் அனைவரின் ஆசிகளையும் பெறலாம். வாரம் ஒரு முறையாவது இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். உங்கள் கடன் படிபடியாக தீர்வதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
இரண்டாவதாக, புதன் கிழமை பாசிப்பயிறு வாங்கிக் கொள்ளுங்கள். புதன் ஹோரையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு யாருக்காவது இந்தப் பாசிபயிறை தானமாக அளியுங்கள். அவ்வாறு இல்லையெனில் ஏழை எளியவர்களுக்குக் கூட தானமாக அளிக்கலாம். இவ்வாறு தானம் அளிப்பதன் மூலம் உங்கள் செல்வம் பெருகும். கடன்கள் அடையும்.
மூன்றாவதாக, பாசிப்பருப்பு பிரசாதம். பாசிப்பருப்பை சுண்டல் போன்று செய்து அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் வைத்து பூஜை செய்து அதனை நைவேத்தியமாக, வரும் பக்தர்கள் அனைவருக்கும் தானமாக கொடுப்பதினால் கடன் தீருவதற்கான காசு உங்களைத் தேடி வரும் இதனை முக்கியமாக பிரதோஷ நாளன்று செய்வது மிகவும் நன்மையானது.
நான்காவதாக, மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு குலதெய்வ வழிபாடு. நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் குல தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். குல தெய்வத்தின் அருள் இருந்தால் தான் பிற தெய்வங்களின் அருள் கிட்டும். சாதாரணமாகவே நாம் எடுத்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் குலதெய்வத்தின் அருள் மிகவும் முக்கியமானது. இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று மேற்கொள்ளலாம். அன்று குல தெய்வ கோவிலுக்குச் சென்று நைவேத்தியமாக பாசிப்பருப்பிலான உணவை பிரசாதமாக வைத்து மனதில் கடன் தொல்லை தீர வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்தது. குல தெய்வம் கோவிலுக்கு செல்ல இயலாதாவர்கள் வீட்டிலேயே குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். பிரசாதமாக படைத்த அந்த பாசிப்பருப்பிலான உணவை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் முன் காகத்திற்கு சிறிதளவு வைத்து விட்டு பிறகு கொடுப்பது நல்லது. இந்த நான்கு வழிபாடுமே கடன் தொல்லை தீர்ந்து வாழ்வில் செல்வ செழிப்புடன் இருக்க உதவும்.
முடிந்தவர்கள் இந்த நான்கு பரிகாரங்களையும் செய்யலாம். இவை எளிய பரிகாரம் தான். நான்கையும் செய்ய இயலாதவர்கள் தங்களால் இயன்றது எதுவோ அதனை செய்யலாம். நம்பிக்கை தான் முக்கியம். முழு மனதுடன் கடைபிடித்தால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து மீளலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகார முறைகளை பின்பற்றி பலன் அடையுங்கள்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025