Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Simmam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Simmam Rasi Palan 2024

Posted DateMay 27, 2024

சிம்மம் ஜூன் மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி காணப்படும். சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் வகையில் இந்த மாதம் ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் அதிகாரம் இருக்கும். தெளிவான மனதுடன் செயல்படுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் பெண் பணியாளர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லலாம். உங்கள் உத்தியோகத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும், ஆதாயம் காண்பதிலும்  உங்கள் கவனம் இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்வில்  எதிர்பாராத திருப்பங்களைக் காணலாம். என்றாலும் நீங்கள் நிலைமையை நன்கு சமாளிப்பீர்கள். பிரச்சினைகள் இருந்தாலும் நீங்கள் தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் மனதில் பதட்டங்கள் அதிகரித்துக் காணப்படும். பணி நிமித்தமாக குடும்பத்துடன் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம்.

காதல் / குடும்ப உறவு :

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். என்றாலும் குடும்ப விஷயங்கள் காரணமாக சில தவறான புரிந்துணர்வு இருக்கலாம். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிருங்கள்.  உங்கள் குடும்ப வாழ்வில் / உறவில் பிரச்சினை ஏற்படுத்தும் நபரை நீங்கள் கண்டு கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். காதலர்கள் தங்கள் உறவில் சில சோதனைக் கட்டங்களை கடக்க நேரலாம். உங்கள் துணையின் மனதில் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே மோதல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சில சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வதன் மூலம் உறவில் அமைதி காணலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் எழலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இது மிதமான பலன் கிட்டும் மாதம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். தந்தை அல்லது மூதாதையர் சொத்து மூலம் நீங்கள் ஆதாயம் பெறலாம். அதே நேரத்தில் உங்கள் உத்தியோகம், தொழில் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் பண வரவும் இருக்கலாம். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் அதிர்ஷ்டம் மூலம் உங்களுக்கு பண வரவு இருக்கலாம். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் நிதிநிலை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். எதிர்பாராத அல்லது மறைமுக ஆதாரம் மூலம் பணம் வரலாம். அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவை கருதி உங்களுக்கு செலவுகளும் இருக்கலாம். உத்தியோகம் நிமித்தமான பயணம் காரணமாக செலவுகள் இருக்கலாம். பங்கு சந்தை முதலீடு மூலம் இந்த மாதம் நீங்கள் லாபமும் ஆதாயமும் காணலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தில் இந்த மாதம் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் பணியிடத்தில் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் பணியிடத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். நீங்கள் சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் பணியாற்றுவீர்கள். சாதுரியமாகச் செயல்படுவீர்கள். உங்கள் தலைமைப் பண்பை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.  உங்கள் தகவல் தொடர்புத் திறன் மேம்படும். மறைமுக ஆதாரம் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமானம் காரணமாக பணியிடத்தில் சிக்கல்கள் வரலாம். குழுவாக பணியாற்றுவது நல்லது. தொழிலில் அரசாங்கம் மூலம் உபரி வருமானம் மற்றும் ஆதாயம் கிட்டும். கூட்டுத் தொழிலில் செய்பவர்களுக்கு கூட்டாளர்கள் அனுகூலமாக செயல்பட மாட்டார்கள்.  தொழில் நிபுணர்கள் வெளிநாடு சம்பந்தமான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்மூலம் முன்னேற்றம் காணலாம். தொழிலில் உங்கள் அதிகாரமும் ஆளுமையும் காணப்படும். உங்கள் தகவல் தொடர்புத் திறன் இந்த மாதம் வலுவாக இருக்கும்.

 தொழில் :

இந்த மாதம் நீங்கள் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். அரசாங்க நெறிமுறைகள் மற்றும் திட்டங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில் மூலம் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும். தொழிலில் போட்டியாளர்களை வெல்வீர்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் எழலாம். வாடிக்கையாளர்களிடம்  வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் உங்கள் நன்மதிப்பு கூடும். நீங்கள் பொறுப்புடன் வலுவான தலைமைப் பண்புடன் செயல்படுவதன் மூலம் தொழிலில்  லாபம் காணலாம்.

உத்தியோகம்/ தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்கள் உணவு முறையில் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும். சில சமயங்களில் உங்கள் தந்தையுன் உடல் நிலை பாதிக்கப்படலாம். அதன் காரணமாக நீங்கள் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள நேரும். எலும்புகள் மற்றும் தசைகள் தொடர்பான எதிர்பாராத பிரச்சினைகள், சுளுக்கு போன்றவை, இப்போது ஏற்படலாம். தூக்கம் சற்று பாதிக்கப்படலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கையும், தைரியமும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற,  உதவும். ஆசிரியர்களுடன் வாக்குவாதங்கள் மற்றும் தவறான புரிதல்களும் ஏற்படலாம். இம்மாதத்தில் கல்வியில் ஒட்டுமொத்த வெற்றி கூடும். கவனம் மற்றும் நினைவகத்தை தக்கவைக்கும் திறன் மேம்படும்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

சுப தேதிகள் : 5, 6, 7, 8, 17, 18, 19, 20, 24, 25, 26 & 27.

அசுப தேதிகள் : 1, 2, 9, 10, 11, 12, 13, 28 & 29.