மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Mithunam Rasi Palan 2024 | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Mithunam Rasi Palan 2024

Posted DateMay 27, 2024

மிதுனம் ஜூன் மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்வில் வளமும்  முன்னேற்றமும் இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் காணப்படும்.  தாயாரும் உங்களுக்கு  உறுதுணையாக இருப்பார்.  அவரது உடல்நிலை கணிசமாக மேம்படும்.உங்கள்  மனநலமும் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் மூலமாகவும் உடன்பிறந்தவர்கள் மூலமாகவும் ஆதாயம் கிடைக்கும். இது வரை இருந்து வந்த  உடல்நலப் பிரச்சினைகள் வரும் நாட்களில் சரியாகிவிடும்.  நீங்கள்  புதிய திறன்களைக் கற்றுக்கொள்வீர்கள், மாற்று வாய்ப்புகளை ஆராய்வீர்கள் மற்றும் நேர்மறையான அணுகுமுறையைப் பேணுவீர்கள்.இந்த மாதம் நீங்கள் சாதுரியமாக செயல்படுவீர்கள். உங்களிடம் நல்ல  சிந்தனைகள் காணப்படும். பெரியவர்கள் அல்லது தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்படலாம். இந்த மாதம் உங்களுக்கு   மதம், ஆன்மீகம் அல்லது ஆத்ம உணர்வு ஆகியவற்றில் அதிக ஆர்வத்தை கொண்டு வரலாம்.

Gemini June Tamil

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள்  வாழ்க்கைத் துணையுடன்/கூட்டாளியுடனான சுமுகமான உறவு இருக்கும். இருவருக்கும் இடையே காதல் உணர்வு காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு  ஆதரவாக இருப்பார்கள். தம்பதியினருக்கு இடையே உள்ள அன்பும் பாசமும் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் பேரார்வம் நிறைந்ததாக இருக்கும். திருமணமான தம்பதிகள்  இந்த காலகட்டத்தில் ஆதரவு மற்றும் புரிதலுக்காக தங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளலாம். . தம்பதிகளிடையே நல்ல அந்நியோன்யம் இருக்கலாம். தம்பதிகள்,  நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சமூகக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். புதிய உறவுகளையும் அன்பையும் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். சில சமயங்களில் குடும்பத்தில் ஈகோ காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வரும் காலங்களில் குடும்பத்தில் நல்லிணக்கம் மேம்படும்.  இந்த மாதத்தின் முதல் பாதியில் பிரியமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் உட்பட நீண்ட தூர பயணங்களில் ஈடுபடலாம்.

திருமண உறவில் நல்லினக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

 

நிதிநிலை :

மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு மேம்படும். உங்கள்  தந்தை மூலமாகவும் ஓரளவு பணம் கிடைக்கும். உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  அதிர்ஷ்டமும்  முக்கிய பங்கு வகிக்கலாம். திடீர் லாபமும் வரலாம். வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் தேவைகளுக்காகவும் செலவுகள் கூடும். ஜூன் மாதத்தில் வழக்கத்திற்கு மாறான உடல்நலப் பிரச்சினைகளுக்கான செலவுகள் ஏற்படக்கூடும். கடந்த கால முதலீடுகள் இப்போது லாபம் ஈட்டலாம். பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டிகளில் முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல காலம். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் சாதுரியம் நல்ல பண வரவைக் கொடுக்கக்கூடும். சமய நிகழ்வுகள் அல்லது நண்பர்களுடன் கூடிய கூட்டங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். இந்த மாதத்தின் முதல் பாதியில் அரசு தொடர்பான செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளும் ஏற்படலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

மிதுன ராசிக்காரர்களின் தொழிலைப் பொறுத்த வரையில், தற்போதைய நிலையைத் தக்கவைக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின்  நற்பெயருக்குக் கேடு விளைவிக்கக் காத்திருக்கும் எதிரிகள் பணியிடத்தில் இருக்கக்கூடும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சில வாய்ப்புகள்  வெளிநாட்டிலிருந்து வரக்  கூடும்.  முக்கியமான காலக்கட்டத்தில் சரியான உத்தியோகம் / தொழிலை  தேர்ந்தெடுக்கும்போது கூட்டாளியின் அல்லது வழிகாட்டியின் ஆலோசனையைப் பெறவும் பரிந்துரைக்கப்படுகிறது. தங்களுடைய வேலை/தொழிலை மாற்றும் எண்ணம் மிதுன ராசிக்காரர்களுக்கு பயத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் வாக்குவாதங்களை திறம்பட சமாளிக்க வேண்டும். இம்மாதத்தில் சக பெண்மணிகள் உங்களுக்கு  சாதகமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல அங்கீகாரம் மாதத்தின் நடுப்பகுதியில் கிடைக்கும். ஜூன் மாதத்தில் உங்கள் தொழிலில் சாதுரியம்  மற்றும் அவுட்-ஆஃப்-பாக்ஸ் சிந்தனை உங்களுக்கு உதவும். வெளிநாட்டு பயணங்கள் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் தொழில்முறை நெட்வொர்க்கை விரிவுபடுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நல்ல தலைமைத்துவ திறன் உங்கள் செயல்பாட்டில்  வெளிப்படும்.

தொழில் :

நீங்கள்  வேலை பார்ப்பதை  விட சொந்தமாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுதந்திரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள்.  கூட்டாண்மைகளில் நுழைவது லாபத்தை அடைவதற்கான சிறந்த தேர்வாக இருக்காது. தற்போதுள்ள தொழிலில்  நல்ல ஏற்றத்தை அனுபவிக்கலாம். திருப்புமுனையைத் தேடுபவர்கள் சரியான உத்தியையும், சந்தைப் பங்கை மீண்டும் பெற ஆலோசனை தந்து உதவக்கூடிய நபர்களையும் கண்டுபிடிப்பீர்கள். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் வணிகத்தை புதுப்பிக்க அதிக செலவுகள் இருக்கலாம். கூட்டாளிகள்  மற்றும் பங்குதாரர்கள் காரணமாக லாபம் குறையலாம். தற்போதுள்ள கூட்டாண்மைகளுக்கு மறுமதிப்பீடு அல்லது மறுபரிசீலனை தேவைப்படலாம். வணிகம் தொடர்பான பயணங்கள் இந்த மாதம் முக்கியமானதாக இருக்கும். பெண் பணியாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் இந்த காலகட்டத்தில் அனுகூலமாக இருப்பார்கள்.

உங்கள் உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : துர்கா பூஜை

ஆரோக்கியம் :

உங்கள்  ஆரோக்கியம் இந்த காலகட்டத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைக் காணலாம். தூக்கம் நன்றாக வரலாம். இதன் விளைவாக தளர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து நீங்கள் விடுபடலாம். பணியிடத்தில் மன அழுத்தத்தை சமாளிக்க நீங்கள்  ஒரு பயனுள்ள வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். குடும்பம் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு ஏற்படலாம். உடல் உஷ்ணமும் கூடும். இருப்பினும், சரியான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் இந்த பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் தடைகளை கடக்கும் வலிமையைப் பெறலாம். முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது கவனத் திறன்மற்றும் ஞாபக சக்தி கூர்மையாக இருக்கும். வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்புகளும் கைகூடும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 12, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 28, 29 & 30.

அசுப தேதிகள் : 5, 6, 7, 8, 9, 24 & 25.