Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Mesham Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Mesham Rasi Palan 2024

Posted DateMay 27, 2024

மேஷம் ஜூன் மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் உங்கள் மீது நீங்கள் அக்கறை கொள்வீர்கள். உங்கள் புகழுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்பட முயற்சி செய்வீர்கள். குடும்ப விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறையுடனும் பாசத்துடனும் இருப்பீர்கள். உங்கள் தகவல்  தொடர்புத் திறன் அதிகரிக்கும். உங்கள் இளைய உடன் பிறப்புடனான உறவு சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் காரணமாக நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம். இந்த மாதம் ரியல் எஸ்டேட்  விஷயங்களில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வருமானம் இந்த மாதம் பெருக வாய்ப்புள்ளது..  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம். இந்த மாதம் நீங்கள் முறையான தூக்கம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் மன அமைதி அதிகரிக்கும். இந்த மாதத்தில் இரண்டாம் பாதியில் நீங்கள் தைரியமாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலனைப் பெறுவீர்கள்.

காதல் / குடும்ப உறவு:

உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.  என்றாலும் உங்களிடம் ஈகோ உணர்வு காணப்படும். இந்த மாதம் உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆதரவாக இருப்பீர்கள். என்றாலும் நீங்கள் அவர் மீது ஆதிக்கம் செலுத்தும் மனோபாவத்தைக் கொண்டிருப்பீர்கள். இருவருக்கும் இடையே அன்பு மலரும்.  நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம். உங்கள்  கோபத்தை உங்கள் துணையிடம் காண்பிக்கலாம். குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதல் மற்றும் உறவின் மூலம் ஆதாயங்களும்  அதிர்ஷ்டமும் காணப்படும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். குடும்பம் மற்றும் வெளிநாடு தொடர்பான எதிர்பாராத செலவுகள் காணப்படும். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள். பண வரவு மிதமாக இருக்கும். மருத்துவ சிகிச்சை சார்ந்த செலவுகள் காணப்படும். இந்த மாதம் முழுவதும் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த மாதம் விரைவில் கடனை அடைத்து முடிப்பீர்கள். பொருளாதார திட்டம் மற்றும் சேமிப்பில் வழக்கமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். இந்த மாதம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : ராகு பூஜை

உத்தியோகம்:

உங்கள் உத்தியோகத்தில் மீட்சியைக் காணலாம் என்றாலும் பணியிடத்தில் சில குழப்பங்கள் காணப்படலாம்.  பணியிடத்தில் சந்திக்கும். நெருக்கடியான சூழலை நீங்கள் சாதுரியமாக சமாளிப்பீர்கள். இந்த மாதம் உத்தியோகத்தின் மூலம் வருமானம் பெருகும்.  உத்தியோகம் சம்பந்தமான விஷயங்களில் நீங்கள்  நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறலாம். இந்த மாதம் பெண் பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளலாம். பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  நீங்கள் பணியிடத்தில் புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு அதிகாரமும் அங்கீகாரமும் கிடைக்கலாம். இந்த மாதம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.  உங்கள் புதிய யோசனைகள் மூலம் வருமானம் பெறலாம்.

தொழில் :

தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைபடுத்த புதுமையாக யோசித்து செயல்பட வேண்டியிருக்கும். இது வரை தொழிலில் சந்தித்து வந்த நஷ்டங்கள் இனி லாபமாக மாறலாம். கூட்டாளர்கள் தொழிலில் அனுகூலமாக செயல்படலாம். தொழிலில் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரம்பத்தில் தொழிலில் சில போராட்டங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றி காணலாம்.  தொழிலை மாற்றி அமைப்பதன் மூலம் தொழில் மறு கட்டமைப்பில் வெற்றி காணலாம். உங்கள் திட்டங்களை சீரமைப்பதன் மூலம் கடன்களை திருப்பி செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இந்த மாதம் உயரலாம். உங்கள் செயல்திறன் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஒரளவு சீராக இருக்கும். என்றாலும் உங்கள் உடல் வெப்ப நிலை அதிகரிக்கலாம். தூக்கமின்மை பிரச்சினை இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். இரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது தேவையற்ற பதற்றம், பயனற்ற பயணங்கள் மற்றும் மருந்துகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான செலவுகளை ஏற்படுத்தலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

கல்வி விஷயத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களை சந்திக்கலாம். மாணவர்கள் ஆற்றலுடன் செயல்படலாம். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். புத்திசாலித்தனமாக செயல்பட முடியும். மனதை ஒருமுகப்படுத்தும் திறம் மற்றும் கவனத் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படலாம். புதிய யோசனைகளை மேற்கொள்ளலாம். ஆசிரியரின் நல்ல வழிகாட்டுதலை மாணவர்கள் பெறலாம். வெளிநாடு சென்று உயர் கல்வி  படிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணங்கள் இந்த மாதம் நிறைவேறும்.

கல்வியில் சிறந்து விளங்க  :பிருகஸ்பதி பூஜை

சுப தேதிகள் : 7, 8, 9, 10, 11, 14, 15, 16, 17, 18, 24, 25, 26, 27.

அசுப தேதிகள் : 1,2, 3, 4, 19, 20, 21, 28, 29, 30.