இந்த மாதம் உங்கள் செயல்களில் வெற்றி பெறவும், முன்னேற்றம் காணவும் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். உங்கள் செயல்கள் மற்றும் வளர்ச்சி மூலம் நீங்கள் சமூகத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். இந்த மாதம் உங்களால் பிறருக்கு ஆதரவு அளிக்க இயலும். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும். நீங்கள் சமூக சேவை செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு வெற்றி காண இது ஏற்ற மாதமாக இருக்கும். அரசு நடத்தும் வேலை வாய்ப்பு தேர்வில் நீங்கள் பங்கு கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் கனவு காணும் வேலை உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், உங்கள் உத்தியோகம் நிமித்தமாகவும் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். கடவுள் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். ஆன்மீக வழிகாட்டிகளின் ஆசிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். இருப்பினும், செலவுகள் காரணமாக உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை மேம்படுத்துவது கடினமாக இருக்கும். எனவே, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இது தவறான புரிதலை ஏற்படுத்தும். எனவே, உறவு சிக்கல்களைத் தவிர்க்க அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். முதலீடுகள் மூலம் நிதி இழப்புகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்கள் அனைத்து முதலீட்டு திட்டங்களையும் ஒத்திவைக்கவும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். உங்கள் திருமண வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல மாதம்.
காதலர்களுக்கு இது ஏற்ற மாதமாக இருக்கும். உங்கள் துணைக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் கடன் வாங்க நேரலாம். உங்கள் காதல் உறவில் எதிரிகளால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவது காதல் உறவுகளில் உள்ள சிரமங்களைக் குறைக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க இது ஒரு சாதகமான காலமாகும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மூலம் எதிரிகளை தோற்கடித்து உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை அனுபவிப்பது சாத்தியமாகும். இந்த காலகட்டம் உங்கள் துணையை திருமணம் செய்து கொள்ளவும், உங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கவும் உதவும். பிரிந்தவர்களுக்கு மீண்டும் துணையுடன் சேர வாய்ப்புகள் கிடைக்கும். கருப்பசாமியை வழிபடுவது அன்பான உறவுகளின் மூலம் மகிழ்ச்சியைக் காண உதவும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
உங்கள் கடந்த கால முயற்சிகளுக்கு உண்டான பலன்களை இந்த மாதம் நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நீண்ட கால விருப்பங்கள் இந்த மாதம் நிறைவேறலாம். உங்கள் செலவுகள் இந்த மாதம் அதிகரிக்கலாம். அதனால் பணத்தை சேமிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். முதலீடுகள் மூலம் நஷ்டங்கள் மற்றும் பெரும் சிரமங்களை சந்திக்க நேரலாம். எனவே வீடு, நிலம், வாகனம் மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்களை தள்ளிப் போடுவது நல்லது. குழந்தைகளின் மேற்படிப்பிற்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். உத்தியோக வளர்ச்சி சார்ந்த விஷயங்கள் குறித்து மேற்கொள்ளும் பயணம் காரணமாகவும் செலவுகள் இருக்கலாம். லக்ஷ்மி தேவியை வணங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி காணலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை
இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு கணாலாம். பணி சார்ந்த உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு முன்னோர்களின் ஆசி கிட்டும். பணியிடச் சூழலில் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பு உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் தொழில் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் உங்கள் திட்டங்களில் வெற்றியை அடைவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவது சாத்தியமாகும். மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெற முடியும். புதிய வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் குழுப்பணி உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.
இந்த மாதம் கூட்டுத் தொழில் மூலம் சாதகமான வளர்ச்சிகளைக் காணலாம். கூட்டாளர்களின் ஆதரவு மூலம் தொழிலில் லாபங்களைக் காணலாம். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சார்ந்த தொழில் மூலம் இந்த மாதம் லாபமும் ஆதாயமும் காணலாம். உங்கள் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழிலில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் பராமரிக்கவும் இயலும். தொழில் முதலீடுகள் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவறான முடிவுகள் மற்றும் தொழில் நஷ்டங்களைத் தவிர்க்க முடிவெடுக்கும் அதிகாரத்தை கூட்டாளியிடம் ஒப்படையுங்கள். மகான்களை வணங்குவதன் மூலம் தொழிலில் நஷ்டத்தை தவிரக்கலாம்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை
கணுக்கால், கால்களில் பிரச்சினை, தூசி ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு ஜூன் ஒரு சாதகமான காலமாகும். அவ்வப்போது பரிசோதனை செய்து, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றவும். இந்த காலம் பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், இதனால் செலவுகள் மற்றும் மன கவலைகள் ஏற்படலாம். எனவே, அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை
இந்த மாதம் நீங்கள் புதிய மொழிகளைக் கற்கலாம். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள புதிய படிப்புகளை படிப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் சேரவும், ஐம்பது சதவிகித கல்வி உதவித் தொகை பெறவும் வாய்ப்புள்ளது. அது உங்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கலாம். நீங்கள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பாடங்களை படிப்பதில் தற்காலிக பயம் இருந்தாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் நிலைமையை சமாளிப்பீர்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி குறித்த சரியான முடிவை எடுக்க உதவி செய்வார்கள். உங்கள் படிப்புக்கு சரியான திட்டங்களை அமைத்து படிப்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 5,6,10,11,17,18,19,22,23,24,25
அசுப தேதிகள் : 3,4,12,13,14,15,16,26,27,30
September 19, 2025
September 17, 2025
September 15, 2025