Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடகம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Kadagam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் ஜூன் மாத ராசி பலன் 2024 | June Matha Kadagam Rasi Palan 2024

Posted DateMay 27, 2024

கடகம் ஜூன் மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் உங்கள் கடின உழைப்பிற்கு பல மடங்கு பலன்கள் கிட்டும். எனவே இந்த காலகட்டத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சனியின் பாதகமான தாக்ககங்கள் குறையும். உங்கள் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு இந்தக் காலக் கட்டம் அனுகூலமாக இருக்கும். உங்கள் உத்தியோகம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் எந்தவொரு செயலையும் செய்வதற்கு தெற்கு திசை உங்களுக்கு அனுகூலமான பலனை பெற்றுத் தரும். பணியிடத்தில்  நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்த செயல்கள் உங்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும் புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் ஆசிகள் உங்கள் வளரச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதிநிலையில் முன்னேற்றம் காணும் வகையில் நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நீங்கள் பதவி உயர்வு பெறுவீர்கள்.

இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதன் மூலம் எதிர்மறை நீங்கும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க சரியான முடிவு எடுக்கும் விஷயங்களில் மேலதிகாரிகள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் சுமுகமான உறவை பராமரிக்கலாம். அதன் மூலம் மன அமைதி கிட்டும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீரும். உங்கள் வருமானம் பெருகவும் பணத்தை சேமிக்கவும் நல்ல வாய்ப்புகள் கிட்டும். இந்த காலகட்டம் உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை மேம்படுத்த பல வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு, இளைய சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள். மேலும், உங்களின் அனைத்து செயல்களையும் செய்து முடிப்பதில் உங்கள் மூத்த உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த காலகட்டத்தில் கடன்களை திருப்பிச் செலுத்தவும், உடல்நலம் மற்றும் சட்ட சிக்கல்களை சமாளிக்கவும் முடியும். அன்புக்குரியவர்கள் உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். திடீர் வீழ்ச்சிகளைத் தவிர்க்க கூட்டாண்மை நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள். பார்வதி தேவியை தவறாமல் வழிபடுவது இந்த மாதத்தில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

காதல் / குடும்ப உறவு :           

காதலில் உங்கள் துணை உங்களுக்கு ஆதரவாக செயல்படலாம். உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதனை சமாளிக்க உங்களுக்கு உதவலாம். என்றாலும் உங்கள் துணையின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்படுத்தும் சில பிரச்சினைகள் காரணமாக உங்களுக்கு இடையே பிரிவு அல்லது மன வருத்தங்கள் ஏற்படலாம். காதலில் ஏற்படும் பிரிவு காரணமாக நீங்கள் புது இடம் மாறலாம். புதிதாக காதலிப்பவர்கள் தங்கள் காதலைக் கூற இது ஏற்ற மாதம் அல்ல. உங்கள் காதல் நிராகரிக்கப் படலாம். எனவே பொறுமை தேவை. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். உறவில் நட்பைப் பராமரியுங்கள். குடும்ப வாழ்க்கையில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் உங்கள் வாழ்க்கை துணையுடன் சிரமங்களை சமாளிக்க முடியும். மேலும், நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் துணையுடன் மீண்டும் சேரலாம். உங்கள் கூட்டாளருடனான சட்ட மோதல்கள் முடிவுக்கு வரலாம், இது திருப்தி அளிக்கும். துர்கா தேவியை வழிபடுவது உறவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற பல கிரக நிலைகள்  அனுகூலமாக உள்ளன. எனவே இந்த காலக் கட்டத்தைப் பயன்படுத்தி உங்கள் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். பணத்தை சேமியுங்கள். பல ஆதாரங்கள் மூலம் உங்களுக்கு  பண வருவாய் இருக்கலாம். இதனால் நீங்கள் சிரமங்களை சமாளிக்கலாம். கடன், வழக்கு, மருத்துவ செலவுகளை சமாளிக்கலாம். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பணத்தை சேமிக்க திட்டமிடுங்கள். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்சிக்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம். மருத்துவ செலவுகளைக் குறைக்க உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பும் இடத்திற்கு பயணம் மேற்கொள்ள இந்த காலக்கட்டம் உங்களை அனுமதிக்கும். எனவே பயணம் சார்த்த செலவுகள் இருக்கலாம். உங்கள் மூத்த உடன்பிறப்பு மற்றும் நண்பர்களுக்கு  பணத்தை நீங்கள் கடனாக அளிக்கலாம். சிவபெருமானை வணங்குவதன் மூலம் நீங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி காணலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

உத்தியோக வளர்ச்சிக்கு இது ஏற்ற மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் முன்னேற உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்து இடம் மாறலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தெற்கு திசை உகந்த திசையாக இருக்கும். நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறையில் இருப்பவர்களிடம் வரம்பைப் பராமரிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

 தொழில் :

முதலீடுகளை மேற்கொள்ள இது அனுகூலமான மாதமாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளை அடையலாம். புதிய இடங்களில் புதிய கிளைகளை தொடங்குவதன் மூலம் இந்த மாதம் நீங்கள் தொழிலில் பல மடங்கு பலன்களைக் காணலாம். என்றாலும் சொந்த இடத்தில் தொழிலில் நஷ்டம் காண வாய்ப்பு உள்ளது. எனவே சொந்த ஊர் அல்லது தெரிந்த இடம் சார்ந்த செயல்களில் எச்சரிக்கையாக செயல்படவும். சொந்த ஊரில் அல்லது தெரிந்த இடத்தில் தொழில் செய்வதன் மூலம் தொழிலில் வளர்ச்சியும் லாபமும் குறையலாம். லக்ஷ்மி தேவியை வணங்குவதன் மூலம் தொழிலில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

உத்தியோகம்/ தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம் :

தலை, மூளை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மாதம் உகந்த காலமாக இருக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதும் மருத்துவரின் பரிந்துரைகளை பின்பற்றுவதும் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் சில குறைபாடுகள் வரலாம். இதனால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் தாய் அல்லது தாய் வயதை ஒத்தவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்பபுள்ளது. எனவே அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பிருகஸ்பதி பூஜை

 மாணவர்கள் :

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம். கல்வி நிறுவனங்களிடம் இருந்து பரிசுகள் பெறலாம். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பணிகளை முடிக்க தாமதம் ஆகலாம். இதனால் நீங்கள் கல்வியில் பின் தங்க நேரலாம். இந்த பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1,2,5,6,12,13,14,17,18,19,20,21,28,29

அசுப தேதிகள் : 7,8,9,10,11,22,23,26,27