Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
இறைவன் பெயரில் அர்ச்சனை செய்வது சரியா? – ஜோதிட மற்றும் ஆகம விளக்கம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இறைவன் பெயரில் அர்ச்சனை செய்வது சரியா?

Posted DateAugust 14, 2025

நாம் கோவிலுக்கு செல்லும் போது அர்ச்சனை செய்வது வழக்கம். முதலில் அர்ச்சனை என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். அர்ச்சனை என்றால் சொல் சமஸ்கிருதச் சொல்லான அர்ச்சன என்பதிலிருந்து வந்தது. இதன் அடிப்படை அர்த்தம் வழிபாடு அல்லது பெருமையைப் புகழ்ந்து போற்றுதல் என்பதாகும். கோயில்களில் அல்லது வீட்டில், தெய்வத்தின் பெயரை மந்திரமாகச் சொல்லி, இறைவனின்  முன்னால் பூ, அகிலம், சந்தனம் போன்றவற்றை சமர்ப்பிப்பது அர்ச்சனை எனப்படுகிறது.

அர்ச்சனை செய்வதன் மூலம், நாம் தெய்வத்தை புகழ்ந்து, நன்றி கூறி, ஆசிகளை வேண்டுகிறோம்.பொதுவாக, ஒரு அர்ச்சனையில் அஷ்டோத்திரம் (108 பெயர்கள்) அல்லது சஹஸ்ரநாமம் (1000 பெயர்கள்) சொல்லப்படும். அர்ச்சனை செய்வது என்பது பூ, தண்ணீர், சந்தனம் போன்றவற்றைத் தெய்வம் முன்னிலையில் வைத்து பெயர்களைக் கூறி அர்ப்பணிப்பது. உதாரணமாக, “ஓம் விஷ்ணவே நமஹ” என்று சொல்லி பூவை அர்ப்பணித்தல். இது முறையான வழிபாடு ஆகும். ஆகமங்களில், “நாமஸ்மரணமே பரமோபாயம்” என்கிறார்கள். அதாவது, நாமம் கூறி அர்ப்பணிப்பது பரமானந்தத்தை தரும்.

 கோவிலில் அர்ச்சனை செய்யும் முறை Bottom of Form

பொதுவாக கோவிலில் தனிப்பட்ட முறையில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் முதலில் அர்ச்சனை டிக்கெட்டை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அர்ச்சகரிடம் அந்த டிக்கெட் மற்றும் அர்ச்சனைக்கு உரிய பொருட்களை அளிக்க வேண்டும். அவர் யார் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்பார்? பெயர் நட்சத்திரம் கோத்திரம் கூறி இவர்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்  என்று கூறி அர்ச்சனை செய்வோம்.

அர்ச்சனை செய்வதன் முக்கிய நோக்கம்:

பக்தி மற்றும் மன ஒற்றுமை  ஏற்படுத்துவது. தெய்வத்தின் சக்தியை நம் மனதில் நிலைநிறுத்துவது. ஆன்மீக சமாதானம் பெறுவது. சுருக்கமாகச் சொன்னால் தெய்வத்தின் நாமங்களை உச்சரித்து, பூக்கள் போன்ற பொருட்களுடன் மரியாதையுடன் வழிபாடு செய்வது கடவுளின் அருளை வேண்டுவது. நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வது.

 அர்ச்சனை செய்வதன் பலன்

அர்ச்சனையில் நாமாவளிகள் கூறப்படுகின்றன.பாகவதம், நாரத பக்தி சூத்திரம் போன்ற நூல்கள், தெய்வ நாம ஜபம் செய்வதே மிகப்பெரிய பூஜை என்று கூறுகின்றன.

இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவது சரியா ?

ஒரு சிலர் பெயர் கோத்திரம் கேட்கும் பொழுது இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறிவிடுவார்கள். இது சரியா என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

தெய்வத்தின் பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியானது மட்டமல்ல அது மிகச் சிறந்த வழிபாடு என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே  அது சாஸ்திரத்துக்கு விரோதமல்ல. அர்ச்சனை செய்வதில் இரண்டு முக்கிய அங்கங்கள் உள்ளன:

முதலாவதாக பொதுவாக யாருடைய நலம் வேண்டுகிறோமே அவர்களின் பெயர் கோத்திரம் நாம் சொல்வோம். சில சமயம் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறுவோம். இது நமது சுய நலம் வேண்டி இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளும் முறை ஆகும். , அர்ச்சனை எவருக்காகச் செய்யப்படுகிறது என்பதைச் சொல்ல, அந்த நபரின் கோத்திரம், நட்சத்திரம், பெயர் கூறுவர்.இதனால் அந்த அர்ச்சனைக்கு அந்த நபருக்கு புண்ணியம் சேர்ந்துகொள்ளும்.

இரண்டாவது நாம் குறிப்பிட்ட தேவை எதுவும் இன்றி  “அம்மனின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்”  பெருமாளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்லுவோம். இறைவன் பெயரில் சக்தி உள்ளது. வேத, ஆகமங்களின் படி, தெய்வத்தின் திருநாமம்  தெய்வத்தையே பிரதிபலிக்கிறது. அதனால், இறைவன் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வது  தெய்வத்தை நினைவில் கொள்வது போன்றே ஆகிறது. அது தவறு அல்ல, உண்மையில் அர்ச்சனை எப்போதும் தெய்வத்துக்கே. அதனால் சாமியின் நாமம் சொல்லி அர்ச்சனை செய்வது முறையானதே.நீங்கள் கோத்திரம் சொல்லாமல் சாமி பெயரிலேயே செய்வது சரியா? என்றால் மிகவும் சரி, ஏனெனில் சாஸ்திரங்கள் சொல்வது: “தெய்வ நாமம் உச்சரிப்பது போதும், அது உத்தமம்.கோத்திரம் சொல்வது வழக்கம் மட்டுமே, பயனாளி யாரென்று குறிப்பதற்காக, ஆனால் அவசியமான சாஸ்திரக் கட்டாயம் இல்லை.கோவிலில் பலர் அன்னதானம், சாமி ஆராதனை போன்றவற்றை யாருக்காவது பயனாகச் சேரவேண்டாம் என்று நினைத்து, கோத்திரம் சொல்லாமல் “தெய்வ அருளுக்காக” மட்டுமே செய்யிறார்கள். அது முற்றிலும் ஒழுக்கத்திற்கு ஏற்புடையது.

சுருக்கமாக: கோத்திரம் சொல்லாமல், “சாமி பெயருக்காக அர்ச்சனை செய்யுங்கள்” என்பது சரியானது, தவறு அல்ல. சாஸ்திரம் அதற்கு எதிராக ஒன்றும் சொல்லவில்லை.