Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
வீட்டில் கண் திருஷ்டி பிள்ளையார் படம் வைக்கலாமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீட்டில் கண் திருஷ்டி பிள்ளையார் படம் வைக்கலாமா?

Posted DateSeptember 30, 2024

பொதுவாக வீடுகள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பிறரின் கண் தாக்காமல் இருக்க திருஷ்டி பொம்மைகளை வைப்பது வழக்கம். ஒரு சிலர்திருஷ்டி தாக்காமல் இருக்க படிகாரத்தை கறுப்பு நூலில் கட்டி வைப்பார்கள். மேலும் சிலர் பூத பொம்மைகள், வெண்கடுகு, ஆகாச கருடன் போன்றவற்றை வைப்பார்கள்.  அந்த  வகையில் கண் திருஷ்டி பிள்ளையார் படமும் திருஷ்டி போக வைக்கும் படமாகும். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

திருஷ்டி என்றால் என்ன?

திருஷ்டி என்பது பார்வை ஆகும். ஒவ்வொரு மனிதரின் பார்வைக்கும் வெவ்வேறு சக்திகள் உண்டு. ஒருவர் சாதாரணமாக பார்க்கும் பார்வையால் எந்த கெடுதலும் நம்மைத்  தாக்காது. ஆனால் பொறாமையுடன், கெட்ட நோக்கத்துடன், தீய உணர்வுடன் பார்க்கும் பார்வையால் திருஷ்டி தாக்க வாய்ப்புள்ளது. அவர்களின் எண்ண அலைகள் காரணமாக எதிர்மறைவிளைவுகளை நாம் சந்திக்க நேர்கிறது. அத்தகைய திருஷ்டி தாக்காமல் இருக்க நமக்கு உதவிகரமாக இருப்பது கண் திருஷ்டி கணபதி ஆகும்.

கண் திருஷ்டி கணபதி

அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகா சக்தியை உருவாக்கினார். அது தான் இந்த கண் திருஷ்டி கணபதி என்று சொல்லப்படுகிறது. அகத்திய முனிவரால் உருவாக்கபப்ட்ட இந்த சிறப்பான வடிவம் கொன்ட கண் திருஷ்டி கணபதியை வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்று கூறப்படுகிறது. இந்த கண் திருஷ்டி கணபதியை வீடு, தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார ஸ்தலங்களில் வைத்துக் கொள்ளலாம்.

கவசம் போல் காக்கும் கண் திருஷ்டி விநாயகர்

கண் திருஷ்டி விநாயகர் எதிர்மறை சக்திகளில் இருந்து நம் வீடு, வசிப்பிடம் அலுவலகம், கடைகள் மற்றும் இருக்கும் இடத்தை பாதுகாக்கிறது. இதனை நாம் மாட்டி வைத்துக் கொள்வதன் மூலம் பிறரின் கண் திருஷ்டியால் ஏற்படும் தீமைகளில் இருந்து காத்துக் கொள்ள முடியும். இது கவசம் போல அமைந்து திருஷ்டி நம் மீது தாக்காமல் காக்கும் என்று கூறப்படுகிறது. இவரை வீட்டில் வைத்துக் கொள்வதோடு மட்டும் இன்றி  வணங்கவும் செய்யலாம்.  சட்ட சிக்கல்கள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் மற்றும் மனநல பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண கண் திருஷ்டி விநாயகரை வழிபடுவது வழக்கம். கண் திருஷ்டி விநாயகர் வழிபாடு செல்வம் மற்றும் நல்வாழ்வு பெற வழிவகுக்கும் ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு முறையாகும்.

எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்?

 நம்முடைய வினைகளையெல்லாம் அழித்து ஞானம் தருபவர் விநாயகரே என்பதால், அனைத்து கண் திருஷ்டியையும் போக்கி சுபிட்சம் தருவார் என்பதாலேயே கண் திருஷ்டி விநாயகர் என்று போற்றப்படுகிறார்.

கண் திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டில் குறிப்பாக வடக்கு திசை பார்த்தவண்ணம் மாட்ட வேண்டும். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ மற்றவர்கள் கண்பார்வை படுமாறு வைத்து வணங்கலாம். வியாபாரஸ்தலம், அலுவலகம், தொழிற்சாலைகளிலும் வைத்து வணங்கினால் நலம்.

 கண் திருஷ்டி கணபதிக்கு தீபாராதனை செய்யலாம். தேனும், இஞ்சியும் நைவேத்தியமாக படைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை பெருகச் செய்வார் கண் திருஷ்டி விநாயகர்!