இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5 வது வீடு, 7வது வீடு மற்றும் 9வது வீட்டில் இருக்கும்.
நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பல வெற்றிகளை ருசிப்பீர்கள். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் படைப்பாற்றல் மேம்படும். நீங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். பங்கு சந்தை முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் வரும். தொழில் கூட்டாளி மூலம் ஆதாயம் கிட்டும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கூடும்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் உற்சாகமான புதிய வாய்ப்புகள் வரக்கூடும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திறந்த மனதுடன், இந்த புதிய வாய்ப்புகளை உற்சாகத்துடனும் நேர்மறையுடனும் ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
உத்தியோகம் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் மூலம் லாபம் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலை மாற்றம் இருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். மொத்தத்தில் உங்கள் உத்தியோக விஷயங்கள் பிரகாசமாகவும் நேர்மறையாகவும் இருக்கும்.
காதலர்கள் தங்கள் காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த காலக்கட்டம் ஏதுவாக உள்ளது. கடந்த காலங்களில் தாமதப்பட்ட செயல்கள் இப்பொழுது நடக்கும். உங்கள் தந்தையின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். திருமணம் வேண்டி காத்திருப்போருக்கு திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் சில சவால்கள் இருந்தாலும், அவற்றை சமாளித்து உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க குரு உங்களுக்கு உதவுவார். நீங்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டலாம், இது கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் மன நிறைவுடன் வாழ்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். புது திருமணத் தம்பதிகள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் காலக்கட்டம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்கலாம். இந்தக் காலகட்டத்தில் இரகசிய அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளைத் தவிர்ப்பது முக்கியம். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வலுவான மற்றும் விசுவாசமான ஆதரவாளராக மாறலாம், மேலும் உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் பாசமும் இருக்கும்.
உங்கள் நிதிநிலை இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் இருக்கும். முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் தீரும். நீங்கள் தொழிலை விரிவுபடுத்தும் அளவிற்கு உங்களுக்கு பணம் கிட்டலாம். நீங்கள் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடைபெறலாம். நிலையான பண வரவு இருக்கும். இருப்பினும், ஆண்டின் இறுதியில், உங்கள் குடும்பத்தில் நீங்கள் சில மன அழுத்தத்தை அனுபவிக்கலாம், மேலும் பணம் காரணமாக உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை வழி உறுப்பினர்களின் குறுக்கீடும் இருக்கலாம், இது சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனை வெளிப்படும். இது பலரின் கவனத்தை ஈர்க்கும். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் சில சவால்களை சந்திக்க நேரும் என்றாலும், கடின முயற்சிகளால் அவற்றைச் சமாளிக்க முடியும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். விருப்பமான பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கான கனவுகள் நனவாகும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும் தங்கள் இலக்குகளை அடைவதற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனை சீராக தக்க வைத்துக் கொள்ள யோகா தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கமாகக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பெரிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்காது. சரிவிகித உணவு மூலம் உங்கள் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். உங்கள் உடலை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும் உங்கள் உடல் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நிறைய தண்ணீர் குடிக்கவும், அதிக பழங்களை சாப்பிடவும்.
1) ஆன்மிக நல்வாழ்வைப் பேண, வியாழன்தோறும் நவக்கிரகங்களில் குரு பகவானை வழிபடுவது உத்தமம்.
2) உடல்நிலை சரியில்லாத நபர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் அனுசரித்து, ஒவ்வொரு மாதமும் அனாதை இல்லங்களுக்கு ஏதேனும் உதவுங்கள்
3) விஷ்ணு மற்றும் சிவபெருமானின் வழிபாடு தொழில் மற்றும் நிதி ஆதாயங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது உங்களுக்கு அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக நல்லிணக்க உணர்வைத் தரும்.
4) மாதம் ஒருமுறை வியாழன் அன்று பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கவும்
5) அனாதை குழந்தைகள் அல்லது வீடற்றவர்களுக்கு மாதம் ஒருமுறையாவது வியாழன் அன்று தொண்டு செய்யுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025