நவகிர அந்தஸ்து பெற்ற கிரகங்களுள் குருவும் ஒன்று ஆகும். இவரை குரு பகவான் என்று அழைக்கிறோம். அது மட்டும் அன்று இவரை சுப கிரகம் என்று அழைக்கிறோம். இவர் பெரும்பாலும் சுப பலன்களையே அளிப்பார் என்று கருதப்படுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் இவர் இருக்கும் இடத்தை விட பார்வை மற்றும் பார்க்கும் இடத்திற்கு நற்பலனகள் அதிகம் கிட்டும் என்று கூறப்படுகிறது. இவரை பொன்னன் என்று கூட அழைப்பார்கள். திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.
குரு வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகிறார். அவ்வாறு பெயர்ச்சி ஆகும் பொழுது அவர் இருக்கும் இடத்தை வைத்து பலன் அளிக்கிறார் குரு பகவானுக்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷ நாள் ஆகும். பெயர்ச்சி சமயத்தில் மட்டும் அன்றி பிரதி வியாழக்கிழமை அவரை வழிபடுவது நல்லது.
நவகிரகங்களுக்கு பல விசேஷ ஸ்தலங்கள் உள்ளன. அந்த வகையில் குருவிற்கும் பல ஸ்தலங்கள் உள்ளன. நாம் வழிபட வேண்டிய முக்கிய குரு தலங்கள் சிலவற்றை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு. குருபெயர்ச்சி காலகட்டத்தில் இந்த தலத்திற்கு வந்து குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் அவரது அருளைப் பெறலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் ஒரு குருஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமான் குரு வடிவில் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் ‘சின் முத்திரை’ மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும்.தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது. கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.
பெரும்பாலான கோவில்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவானாக வழிபடுகிறார்கள் ஆனால் திட்டை திருவாலிதாயம் (சென்னைக்கு அருகில் உள்ள பாடி என்று பிரபலமாக அறியப்படுகிறது) மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நவகிரக குரு, குரு பகவானாக வணங்கப்படுகிறார். உலகில் குரு பகவானுக்கு தனி விமானத்துடன் தனி சன்னதி இருப்பது அனேகமாக இதுவே. இந்த சன்னதி சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளுக்கு இடையில் உள்ளது. மேலும், குரு பகவானை 4 கைகளுடன் நின்ற கோலத்தில் தரிசிக்கக்கூடிய ஒரே தலம் இதுவே
சென்னை அயப்பாக்கத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.
சென்னைக்கு அருகில் உள்ள ‘பாடி’ என்னும் இடமே ‘திருவலிதாயம்’ என்னும் தலம் ஆகும். இங்கு குருபெயர்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது குரு பகவானுக்கு தனி ஒரு சந்நிதி அமைந்து உள்ளது. இத்திருத்தலத்தில் குரு பகவானுக்கு விசேஷ பூஜைகள் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நடைபெறும். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவம் இருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.
அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப் படுகிறார். இக்கோவில் தட்சிணாமூர்த்தியின் அருளை நாடி ஏராளமானோர் வருவதால் இங்கு மற்ற விழாக்களை விட குரு பெயர்ச்சி போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வியாழக்கிழமையிலேயே இக்கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.
கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
தேனி மாவட்டம் குச்சனூர் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.
இன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் அருள்பாலிக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு பகவான் வீற்றிருப்பார். தட்சிணாமூர்த்தியாகவும் தனி சன்னிதியில் வீற்றிருப்பார்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கூட குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு வழிபடலாம்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025