இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பது போல பணத்தை கடன் வாங்குவதும் இயல்பான ஒன்றாகி விட்டது. இன்று கடன் வாங்காதவர்களே இல்லை என்னும் அளவிற்கு கடன் வாங்கும் பழக்கம் அதிகமாகி விட்டது எனலாம். வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களை இன்று கடனில் வாங்கி EMI கட்டுபவர்கள் தான் அதிகம். அது மட்டும் இன்றி வீடு, நிலம், சொத்து போன்றவற்றையும் கடனில் வாங்கி EMI கட்டும் பெரும்பாலானோர் நம்மிடையே உள்ளனர்.
அது மட்டும் இன்றி அன்றாட வாழ்கை நடத்துவதே சிலருக்கு பெரும்பாடாக இருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேறு வழி இல்லாமல் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படுவதும் உண்டு. வட்டி மட்டுமே கட்டி அசல் கட்ட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப் படும் போது அவர்கள் கலங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது.கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் என்ற கூற்று நம் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.
அவ்வாறு கடன் வாங்கி கட்ட முடியாமல் கஷ்டப் படுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் கடன் தொகை விரைவில் கட்டி முடிக்க வாராஹி வழிபாட்டு பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த வழிபாட்டை மேற்கொவதற்கு முன் நீங்கள் உங்கள் இஷ்ட் தெய்வம், மற்றும் கிராம தெய்வம் அல்லது எல்லை தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும்.
இதற்கு தேவை வாராஹி படம் அல்லது சிலை ஆறு அகல் விளக்கு கிண்ணத்தில் பச்சரிசி மற்றும் அச்சு வெல்லம்
உங்கள் கடன் பிரச்சினைகள் தீர இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த வேளையீல் செய்ய வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக நீராடி வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வராகி அம்மனின் படம் அல்லது சிலையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அந்த அம்மனுக்கு முன்பாக ஆறு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அந்த அம்மனுக்கு முன்பாக கண்ணாடி கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அது நிறைய உடையாத பச்சரிசியை நிரப்ப வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு அச்சு வெல்லத்தை வைத்து அந்த வெல்லத்திற்கு மேல் தங்க அரளி என்று சொல்லக்கூடிய மஞ்சள் அரளி பூவை வைக்க வேண்டும்.
பிறகு வராகி அம்மனுக்கு முன்பாக அமர்ந்து ஒரு மஞ்சள் நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி உங்களுக்கு தீர வேண்டிய கடன் தொகையை யாருக்கு எங்கு என்ற முழு விவரத்தை 21 முறை எழுதி கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி 48 நாட்கள் விடாமல் செய்து வர அந்த கடன் தொகை அடைவதற்குரிய வழி அந்த அம்மனின் பரிபூரண அருளால் உங்களுக்கு கிட்டும்.. ஒவ்வொரு நாளும் கிண்ணத்தில் இருக்கக்கூடிய பச்சரிசி வெல்லம் இவற்றை எரும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட்டு புதிதாக பச்சரிசி வெல்லத்தை வைக்க வேண்டும். அல்லது பசு மாட்டிற்கு கூட கொடுக்கலாம். தினமும் வராகி அம்மனுக்கு கற்கண்டையை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் கற்கண்டு சாதம் செய்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025