Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
திருமணம் நடக்க பரிகாரம் | Thirumanam nadakka pariharam
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருமணம் நடக்க பரிகாரம்

Posted DateJuly 18, 2024

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் அவரவர் வயதிற்கேற்ப தேவைகளும் ஆசைகளும் இருக்கிறது. இளம் வயதில் கல்வி அவசியம் என்றால் வாலிப வயதில் திருமணம் என்பது அவசியமாகிறது. நமது வாழ்க்கை துவங்குவது பிறப்பில். நாம் மீண்டும் புதிய வாழ்க்கை துவக்குவது திருமணத்தில். வாலிப வயது வரை பெற்றோரின் நிழலில் வாழும் நமக்கு வாலிப வயதை அடையும் பொழுது திருமண ஆசை வருவது இயல்பு. ஆனால் எல்லோருக்கும் இளம் வயதில் அல்லது வாலிப வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

மண வாழ்கை தள்ளிப் போகிறவர்களுக்கு மண வாழ்க்கை எளிதில் அமையாதவர்களுக்கு அதற்கான காரணாம் வெவ்வேறாக இருந்தாலும் அதற்கான தீர்வு வேண்டும் அல்லவா? நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற ஒரு எளிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

எந்தவொரு காரியமும் தடையின்றி நடைபெற அன்னதானம் செய்வது சிறப்பு. எனவே திருமணம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு. இது பொதுவான பரிகாரம் ஆகும்.

திருமண யோகம் கூடி வர நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் ருதுவாகாத கன்னிப் பெண்ணிற்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு,  மஞ்சள், குங்குமம், மஞ்சள் நிறம்  கலந்த சட்டை அல்லது ஆடை  மல்லிகைப்பூ வளையல் ஆகியவற்றை அளிக்க வேண்டும். இவற்றை கிழக்கு முகமாக நின்று அளிக்க வேண்டும். ருதுவாகாத கன்னிப் பெண்ணிற்கு   மிகப் பெரிய சக்தி உண்டு. அவர்களை தெய்வத்திற்கு  சமமாக கருத வேண்டும்.

இந்த  பரிகாரத்தை செய்வதன் மூலம்  திருமணத் தடை அகலும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்து இதுவரை நடக்காது தள்ளி சென்று திருமண யோகத்தை விரைவில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.