புராணங்கள் மொத்தம் பதினெட்டு. அவற்றுள் ஒன்று தான் கருட புராணம். இது பதினேழாவது புராணம் ஆகும். இது வைணவ புராணம் ஆகும். இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்திருக்கும்.
இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது
கருட புராணத்தில் கருடன் என்ற பறவையின் மகத்துவம், அவரது அசாதாரண சக்திகள், பக்தர்கள் மீது அவர் காட்டிய கருணை போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புராணத்தில் பல்வேறு வகையான தவங்கள், வழிபாட்டு விவரங்கள், புனித மந்திரங்களை உச்சரித்தல் மற்றும் நமது பாவங்களை நீக்குவதற்கான வழிகள், விஷ்ணுவின் மீதான நமது பக்தி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
கருட புராணம், மகாவிஷ்ணுவின் மகத்துவம் மற்றும் அவரின் புனித அவதாரங்கள் பற்றியும், இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது மற்றும் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிக் கூறுகிறது. மரணத்திற்குப் பிறகு ஆன்மாவின் பயணம், அவைகள் செய்த பாவத்திற்கான தண்டனைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
கருட புராணத்தைப் படிப்பவர்கள் வாழ்வில் தவறுகளை செய்வதற்கே அஞ்சுவார்கள். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்த கருட புராணத்தைப் படிப்பது நல்லது.
நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025