நமது இந்து மதத்தில் எந்தவொரு பண்டிகையும் மதம் சார்ந்த பண்டிகை என்று குறுகிய அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த பண்டிகைகள் யாவும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எளிதாக்கும். அந்த வகையில் நாம் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக விளங்குவது விநாயக சதுர்த்தி ஆகும். தடைகளை நீக்கி ஞானம் அருளும் விநாயகரை வணங்ககுவதற்கான விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த விழா நமக்குள் ஆன்மீக மேம்பாட்டை வழங்குகிறது. ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால், இந்த மாபெரும் இந்து பண்டிகையின் தோற்றம், மரபுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி மேலும் அறிந்து கொள்வது அவசியம். அதன் ஆன்மீக முக்கியத்துவம், ஜோதிட முக்கியத்துவம் மற்றும் சிறந்த தெய்வீக விளைவுகளுக்காக அதை எவ்வாறு கொண்டாடுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பிள்ளையார், கணபதி, விக்னேஸ்வரர் விநாயகர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான விநாயகர் பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்து புராணங்களில், விநாயகர் பார்வதியால் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டார். ஒரு தெய்வீக நிகழ்வின் போது, சிவனால் அவர் தலை துண்டிக்கப்பட்டு, பின்னர் அவரது தலையை யானைத் தலையால் மாற்றினார், இதன் மூலம் இன்று நாம் வழிபடும் பழக்கமான வடிவம் தொடங்கியது.இந்தியா முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பக்தியுடனும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி 2025 ஆகஸ்ட் 28, 2025 வியாழக்கிழமை கொண்டாடப்படும். மத்யான முகூர்த்தத்தின் போது விநாயகரை வீட்டிற்கு வரவேற்க சிறந்த தருணம்.
சதுர்த்தி திதி தொடக்கம் : ஆகஸ்ட் 27, 2025, இரவு 11:00 மணிக்கு
சதுர்த்தி திதி முடிவு’ : ஆகஸ்ட் 29, 2025, அதிகாலை 01:45 மணிக்கு
மத்யான முகூர்த்தம்: ஆகஸ்ட் 28, 2025, காலை 11:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை (தோராயமாக)
விநாயகர் முழு முதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். அவர் தடைகளை நீக்குபவர். இந்து மதத்தில், திருமணம், பூஜை அல்லது புதிய முயற்சி என எந்த ஒரு நல்ல விழாவாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பு விநாயகரை வணங்குவது வழக்கம். அதனால்தான் அவர் அனைத்து தடைகளையும் நீக்கும் விக்னஹர்த்தர் என்றும் கருதப்படுகிறார். ஸ்கந்த புராணத்தில், கடவுள்கள் கூட எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பண்டிகை ஜோதிட ரீதியாக முக்கியமானது. ஏனெனில் இது பாத்ரபாத (புரட்டாசி) சுக்ல சதுர்த்தி நாளில் வருகிறது. இந்த நாள் சந்திரனின் சக்தியால் நிறைந்த நாள். இந்த நாளில் கிரகங்களின் நிலைகள் தோஷங்களை நீக்கவும், முந்தைய கர்மாக்களை நீக்கவும், செழிப்பை ஏற்படுத்தவும் உதவும். நீங்கள் தொழில், நிதி, கல்வி அல்லது திருமணம் தொடர்பான தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொண்டால், விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு ஜோதிடரை சந்தித்து உங்கள் ஜாதகத்திற்கு குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்ய சிறந்த சந்தர்ப்பமாகும்.
விநாயகர் சிலை பிரதிஷ்டை
இந்தக் கொண்டாட்டம் விநாயகர் பிரதிஷ்டையுடன் தொடங்குகிறது, அப்போது பக்தர்கள் களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். சிலை ஒரு சுத்தமான பலிபீடத்தில் வைக்கப்பட்டு, பூக்கள், தூபங்கள், மற்றும் மந்திரங்களால் வழிபடப்படுகிறது.
ஆன்மீக சக்தி மற்றும் நல்ல அதிர்வுகளுக்கு உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் சிலையை வைக்க வேண்டும். இது மிகவும் மங்களகரமானது.தென்னிந்தியாவில் வீடுகளில் விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று முகூர்த்த நேரத்தில் ஆவாகனம் மற்றும் பூஜை செய்வார்கள் ஒரு சிலர் அன்று மாலையே விசர்ஜனம் செய்து விடுவார்கள். வேறு சிலரோ மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என ஓற்றைப் படை நாட்களில் விசர்ஜனம் செய்வார்கள். பந்தல்கள் அமைத்து சமூகத்தில் கொண்டாடப்படும் விழாவில் பத்து நாட்கள் கொண்டாட்டம் இருக்கும். அதன் பிறகு விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று விசர்ஜனம் செய்வார்கள். வட இந்தியா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வீடுகளில் கூட இதனை பத்து நாட்கள் விழாவாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும், அதன் பிறகு சிலை ஒரு பிரமாண்டமான ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஒரு நீர்நிலையில் மூழ்கடிக்கப்படுகிறது. நீரில் மூழ்குவது பற்றின்மை மற்றும் அண்ட கூறுகளுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது.இது ஒரு மதிப்புமிக்க பாடத்தை புகுத்துகிறது: எதுவும் என்றென்றும் நிலைக்காது; தெய்வீக வடிவங்கள் கூட அவற்றின் இருப்பிடத்திற்கே திரும்புகின்றன.
கணேஷ் சதுர்த்தி அன்று அதிகப் பலன்களைப் பெறுவது எப்படி :
களிமண்ணால் ஆன சிலையை வாங்கி பூஜை செய்யுங்கள். இது இயற்கை மற்றும் ஐம்பூதங்களுடன் இணைந்தது மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. பிளாஸ்டிக் சிலைகளை தவிரக்கவும். சிவப்பு செம்பருத்தி மலர் விநாயகருக்கு மிகவும் விரும்பத்தக்கது.தென்கிழக்கு மூலையில் நெய் தீபம் ஏற்றுவது செல்வத்தை ஈர்க்கிறது மற்றும் எதிர்மறை சக்தியை நீக்குகிறது.
சமூக விழாவாக விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி அன்று ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிற்கு விநாயகரை வரவழைத்து ஆவாஹனம் செய்து தனிப்பட்ட வழிபாட்டை மேற்கொள்வார்கள். இதைத் தவிர, சமூக கொண்டாட்டமாகவும் இந்த விழா அமைகிறது. பந்தல்கள் நிறுவப்பட்டு பெரிய பெரிய அளவில் விநாயகர் சிலைகளை நிறுவி அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவார்கள். மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்து இந்த விழாவை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு ஆன்மீக ரீதியாக எவ்வாறு தயாராவது
உங்கள் வீட்டையும், உடலையும் மனதையும் சுத்திகரித்து தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
விநாயகர் சிலை வருவதற்கு முன்பு உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
மனைப்பலகை அல்லது உயர்ந்த பீடத்தில் விநாயகரை வைப்பதற்கு முன் அதில் கோலம் போடுங்கள்.
சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள் .
பூஜை முடியும் வரை எதிர்மறையான பேச்சிலிருந்து விலகி, கோபம், ஈகோ மற்றும் பொறாமையைத் தவிர்க்கவும்.
விநாயகர் உங்கள் அனைத்து தடைகளையும் நீக்குவதை கற்பனை செய்துகொண்டு தினமும் குறைந்தது 11 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.
இந்த சங்கல்பத்தை உங்கள் குடும்பத்தினரையும் எடுத்துக் கொள்ள செய்து அவர்களையும் பூஜையில் ஈடுபடுத்துங்கள்.
விநாயகர் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025