நம்மில் பல பேருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஒரு சிலர் உயர் படிப்பிற்காக செல்ல நினைப்பார்கள். ஒரு சிலர் வேலை வேண்டி செல்ல நினைப்பார்கள். நினைத்தால் மட்டும் போதாதது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எல்லாருடைய முயற்சிகளும் வெற்றி அடையுமா என்றால் சந்தேகம் தான். முயற்சிகள் செய்தாலும் சில பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வெளிநாடு செல்வதற்கு ஒருவரது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்க வேண்டும். வெளிநாட்டு யோகம் இருந்தால் தான் வெளிநாடு செல்ல முடியும். அந்த யோகம் இல்லாதாவர்கள் எவ்வளவு முயன்றாலும் செல்ல முடியாது. யோகம் இருந்தாலும் ஓர் சிலர் தடைகளை சந்திக்க நேரும். தாமதங்கள் ஏற்படலாம். அல்லது வெளிநாடு எதற்காக சென்றார்களோ அந்த வேலை கிடைக்காமல் போகலாம்.ஒரு சிலர் அங்கேயே குடியேற நினைத்து அது நிறைவேறாமல் போகலாம். இவ்வாறு பல விதத்தில் தடைகளை சந்திப்பவர்களுக்கு அதில் இருந்து நிவர்த்தி தரும் ஒரு எளிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இந்தப் பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு பற்றியது ஆகும். முதலில் உங்களுக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அல்லது சன்னதியில் ஒவ்வொரு மாதமும் வரும் அசுவினி, மகம் மூலம் நடசத்திரம் அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் குறிப்பாக மூலம் நடசத்திரம் அன்று வெற்றிலை மலை (11 வெற்றிலை) வடை மாலையும் சாற்றி வழிபடுங்கள். முடிந்தவர்கள் வெண்ணெய் காப்பு செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து வழிபாடு செய்து வர உங்கள் வெளிநாட்டு கனவுகள் யாவும் நனவாகக் காண்பீர்கள்.
புதுப்பாக்கம் என்னும் ஊரில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இவரது திருநாமம் வீர ஆஞ்சநேயர் ஆகும். இது வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் இருக்கக்கூடிய கோவில் ஆகும். வசதி இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வரலாம். இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல வேண்டும். அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வெண்ணெய் காப்பு செய்து வழிபட வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக 21 வாரங்கள் இந்த கோவிலுக்கு சென்று இங்கு இருக்கக் கூடிய வீர ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நிவர்த்தியாகி வெளிநாடு செல்வதற்குரிய யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் வீர ஆஞ்சநேயரை வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வாரங்கள் நிறைவடைந்த பிறகு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்து அந்த வடையை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025