Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2025 | February Matha Thulam Rasi Palan 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2025 | February Matha Thulam Rasi Palan 2025

Posted DateJanuary 22, 2025

துலாம் பிப்ரவரி 2025 பொதுப்பலன்: 

இந்த மாதம் பணியிடத்தில் உங்கள் அர்ப்பணிப்பு வெளிப்படும். அதற்கான நற்பலன்களையும் நீங்கள் பெறுவீர்கள். என்றாலும் அது கிடைக்க சற்று கால தாமதம் ஆகும் என்பதால் நீங்கள் பொறுமை காக்க வேண்டியிருக்கும். சில சமயம் உங்கள்  கடின உழைப்பு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாமல் கூட போகலாம். என்றாலும் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் லாபம் காணலாம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேம்படுவதன் மூலம் நீங்கள் லாபம் காணலாம்.கூட்டுத் தொழில் மேற்கொள்ள இந்த மாதம் ஏதுவாக இல்லை. காதலர்கள் தங்கள் உறவில் சில தடைகளை சந்திக்க நேரிடும், இதனால் உறவின் நல்லிணக்கம் கெடும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒன்றாக அர்த்தமுள்ள தருணங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் உங்கள் உறவு சார்ந்த விஷயங்களில் பிறரின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள்.

குடும்ப உறவு

காதலர்கள் இந்த மாதம் தங்கள் உறவுகளில்  பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும், எனவே உங்கள் உறவில் நல்லிணக்கம் குறையும். அதனால் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். கணவன் மனைவி  பரஸ்பரம்  அனுபவங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள், ஆனால் உங்களின் உறவு சார்ந்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிப்புற காரணிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் வயதான உறுப்பினர்களுடனான உங்கள் பிணைப்பு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் வளர்க்கும் உறவு ஆதரவாகவும் சாதகமாகவும் இருக்கும். உங்கள் நட்பு வலுவாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை

உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாதம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும்  நிதி நிலைமைகளில் முன்னேற்றத்திற்கான சாத்தியம் உள்ளது.  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள்  நிதி ஆதாரங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள். பணத்தை முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் அதனை செயல்படுத்த  இந்த மாதம்  சரியான தருணமாக இருக்கும். முதலீட்டில் நீங்கள் புதிய உத்திகளை மேற்கொள்வீர்கள். உங்கள் எண்ணங்களை செயல்படுத்த தேவையான உந்துதல் உங்களுக்கு இருக்கலாம். இருப்பினும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபத்திற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இத்தருணத்தில் கணிசமான பங்குகளை வாங்குவதில் கவனமாக இருப்பது அவசியம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

 உத்தியோகம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். உங்கள் பணிக்கான அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்கும் என்றாலும் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரும். உங்கள் முன்னேற்றத்திற்கு சக ஊழியர்கள் பல்வேறு வழிகளில் ஆதரவை வழங்குவார்கள். மென்பொருள் துறையில் பணிபுரியும் துலாம் ராசியினர் தங்கள் துறையில்  சிறப்பாக செயல்படுவார்கள். தங்களின்   அர்ப்பணிப்புக்காக நிர்வாகத்தின் பாராட்டுகளைப் பெறலாம். உற்பத்தி துறையில்  இருப்பவர்களின் முன்னேற்றத்தில்  மந்த நிலை இருக்கலாம். ஆனால் சில தடைகளைத் தாண்டி இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.  இந்த நேரத்தில் சட்ட வல்லுநர்கள் சிறப்பாக செயல்படலாம்.  வாடிக்கையாளர்களிடமிருந்து சாதகமான வரவேற்பைப் பெறுவீர்கள.  ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறைகளில் உள்ள துலாம் நபர்கள் சில நிராகரிப்புகளை எதிர்கொண்டாலும், தொழில் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை சந்திக்கலாம்.  சுகாதாரத் துறையில், இருப்பவர்கள் தங்கள் உத்தியோகத்தில் வெற்றியைக் காண்பார்கள், அவர்களின் சக ஊழியர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடுபவர்கள் தங்கள் புதுமையான திட்டங்களுக்கு நிர்வாகத்தின் கணிசமான ஆதரவிலிருந்து பயனடைவார்கள்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில்  

இந்த மாதம் உங்கள் தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிட்டும். தற்போது சொந்தமாக நிறுவனம் அமைத்து தொழில் செய்பவர்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை எதிர்பார்க்கலாம். இது அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான  முடிவுகளைத் தரத் தொடங்கும் நேரமாக இருக்கலாம். உங்களில் ஒரு சிலர்  தொழில் விரிவாக்கம் மேற்கொள்ள நினைக்கலாம். உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறலாம். தொழிலில் சாதனைகளைப் புரிவீர்கள். என்றாலும் இந்த மாதம் நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கூட்டுத் தொழில் உங்களின் வணிகச் செயல்பாடுகளைச் சிக்கலாக்கும் மற்றும் தவறான புரிதல்கள் அல்லது சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, நீங்கள் தனித்து செயல்படுவதில் கவனம் செலுத்துவது மிகவும் சாதகமானதாக இருக்கலாம். இது நீங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட உதவிகரமாக இருக்கும்.

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை அளிக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வயிற்றில் அஜீரணக் கோளாறு காரணமாக அசௌகரியம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எனவே உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்ப்பது விவேகமானதாக இருக்கும், ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். இந்த நேரத்தில் உங்கள் ஊட்டச்சத்தை கவனத்தில் கொள்வதன் மூலம், உங்கள் நல்ல ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :புதன் பூஜை

மாணவர்கள்

ஆரம்பக் கல்வி மாணவர்கள் மற்றும்  உயர்கல்வியில் பயிலும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க கல்வி வெற்றியை அனுபவிக்கலாம். வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடர்பவர்களுக்கு, விசா அனுமதிகளுக்கு இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும், அதே சமயம் தற்போதைய முதுகலை மாணவர்கள் பாராட்டுக்குரிய கல்வி செயல்திறனை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடும் நபர்கள் தங்கள் விசா விண்ணப்பங்கள் தொடர்பாக அறிவியல் சமூகத்தின் கணிசமான ஆதரவைப் பெறுவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை 

 சுப தேதிகள்  : 1,4,5,7,9,10,12,14,17,19,20,21,23,25,27,28

 அசுப தேதிகள்  : 2,3,6,8,11,13,15,16,18,22,24.