வீட்டில் எப்பொழுதும் நல்ல விஷயங்களே நடக்க நம் அனைவருக்கும் ஆசை தான். திருமணம், வேலைவாய்ப்பு, நல்ல பணப்புழக்கம் போன்ற நேர்மறை விஷயங்கள் நடக்க நாம் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. நமது கர்ம வினைகள் காரணமாக நாம் நமது முயற்சிகளின் போது எதிர்மறை ஆற்றலை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவ்வகையான எதிர்மறை ஆற்றல்கள் நமது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இந்த ஆற்றலானது நமது கண்ணுக்குத் தெரியாத எதிரிகளாகவோ அல்லது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளாகவோ செயல்படுகிறது. நம்முள் இருக்கும் காமம்,கோபம், குரோதம் போன்ற அக எதிரிகளும் நமது வளர்ச்சியை பிடிக்காத சிலரின் கண் திருஷ்டி, ஏவல் பில்லி, சூனியம் இவைகளோ புற எதிரிகளாக செயல்படுகின்றன.இதன் காரணமாக நாம் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றை தாண்டி முன்னேற்றம் காண்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
எதிர்மறையான ஆற்றல் செயல்படும் போது நமது சிந்தனையும் தடைபடுகிறது. செயலும் தடைபடுகிறது. சிந்தனயும் செயலும் தெளிவாக இருந்தால் தான், நம்மால் சிறந்த முறையில் வருவாயை ஈட்ட முடியும். எல்லாவற்றிற்கும் மேலான தேவையாக பணம் விளங்குகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதுமா? அதை அனுபவிக்க நல்ல ஆரோக்கியமும் வேண்டியிருக்கிறது அல்லவா? நல்ல ஆரோக்கியம். செல்வம். மன நிம்மதி மற்றும் மன நிறைவு என வாழ்வில் அனைத்தையும் நாம் பெற ஒரு எளிய பரிகாரம் ஒன்றை இந்தப் பதிவில் காணலாம்.
எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை அளிக்கும் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் காய்ந்த மல்லிகை மலர்கள், கிராம்பு, அகல், நல்லெண்ணய் மற்றும் விளக்கு போடும். திரி
கிராம்பு பல நல்ல விஷயங்களை கொடுக்கும். வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலை பல மடங்காக்கும். எதிர்மறை ஆற்றல்களை விலக்கி பண வரவை அதிகரிக்கும். கிராம்பு அதிக அளவில் பயன்படுத்தினால். அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
வாசம் நிறைந்த மல்லிகை மலர்களை காய வைத்து ஓரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். அதே போல முனை முறியாத கிராம்பு எடுத்து அதையும் ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். மண்விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி திரி போடுங்கள். அதில் ஐந்து கிராம்பு போட்டுக் கொள்ளுங்கள். ஐந்து மல்லிகை மலர்களைப் போடுங்கள். பிறகு தீபம் போடுங்கள்.இந்த தீபத்தை நீங்கள் வாரம் ஒரு முறை ஏற்றுங்கள். கிராம்பும் மல்லிகையும் தேவி மகாலட்சுமிக்கு உகந்த ஒன்றாகும்.
அடுத்த நாள் அந்தக் கிராம்பு மற்றும் மலர்களை கால்கள் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்களால் முடிந்தால் இந்த விளக்கை தினமும் கூட ஏற்றலாம்.
இதே போல் ஏழு கிராம்பை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலமும் பணவரவு என்பது அதிகரிக்கும். இப்படி மஞ்சள் துணியில் வைப்பதால் மகாலட்சுமி தாயாரின் அருளும் அதே சமயம் குருபகவானின் அருளும் ஒரு சேர கிடைத்து பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025