மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். இது பச்சை நிறமுள்ளது. இது நவரத்தினங்களில் ஒன்றாகும். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. லேசான பச்சை நிறம் முதல் அடர்த்தியான பச்சை நிறம் வரை கிடைக்கிறது. இதன் குறியீடு B3Al2(Sio3)6 இதன் கடினத்தன்மை 7½ இதன் அடர்த்தி எண் 2.71 இதன் ஒளிவிலகல் எண் 1.57 – 1.58. இந்த இரத்தினம் புதன் கோளிற்கு உரியதாகும்.
பச்சை நிறமுடைய, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இரத்தினம். இதை அணிபவர் உண்மையானவர், நடுநிலையானவர், பொறுப்பானவர். மரகதக் கல் ஒருவரின் மனோபலத்தையும், உள்ளுணர்வையும், அதிகப்படுத்துவதால், ஒருவரின் திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும் மேம்படும். அறிவைத் தூண்டி, ஞாபகசக்தியை அதிகப்படுத்தும், கல்வியிலும் தகவல் தொடர்பிலும், கண்ணால் பார்க்க இயலாதவற்றையும் கூட அறியும் ஆற்றலையும் தருகின்றது. பொதுவாக உடல்நலம், கண் நரம்பு மண்டலம் போன்றவற்றிற்கு நன்மை செய்யும்.
மரகதம் கடினமான கல்லாக இருந்தாலும், எளிதில் உடையும் தன்மை உடையது. எனவே இதைக் கையாள்வதிலும் அணிவதிலும் கவனம் தேவை. மரகதம் புதனால் ஆளப்படுவது. சாதகத்தில் புதன் நல்லபடி அமைந்துள்ள சாதகர் அணியலாம்.
பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிந்து கொள்ளுதல் நல்லது. 3,5,7,10 ரத்திகள் எடையில் அணிய உகந்தது. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேன்மை கொடுக்கும்.மரகதமணி சோம்பல், தூக்கமின்மை, பசியின்மை, கண் நரம்பு, முதுகு தொடர்பான கோளாறு போன்ற நோய்கள் தீர்க்கும். கிட்னி, மண்ணீரல், பித்தப்பை, கைகள், பெருங்குடல், சிறுகுடல், உடலின் நரம்புகள் போன்ற அவயவங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
ஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும். அக்வா மரைன், பச்சை சிர்கான், ஜேட் இவற்றை மரகத கல்லிற்கு மாற்றுக் கல்லாக பயன்படுத்தலாம்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025