ராம நாமம் தாரக மந்திரம் என்று கூறுவார்கள். ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை உண்டு. ராமரின் வரலாறு பற்றிய கதை இராமாயணம் ஆகும். இந்த இராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்யலாம். இல்லாவிடில் தினமும் சிறிது சிறிதான அளவில் படித்து ஒரு மண்டலம் வரை பாராயணம் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். என்றாலும் நமக்கு அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. இன்றைய வாழ்க்கை நிலையில் நாம் அதிவேகமாக பயணிக்க வேண்டி உள்ளது. நமது அன்றாட பணிகளுக்கு நடுவே ஆன்மீக விஷயங்களில் ஈடுபட நேரம் நம்மை அனுமதிப்பதில்லை. இப்படி இருக்க இராமாயணம் என்னும் புனித காவியத்தை நம்மால் நேரம் ஒதுக்கி படிக்க இயலாத நிலை உள்ளது.
இராமாயணம் படிப்பது ஆன்மீக மேன்மைக்கு மிகவும் நல்லது. ஆனால், தினமும் இராமாயணத்தை முழுமையாக ஒருவரால் படித்து முடிக்க முடியாது. ஆனால் ஏக ஸ்லோக ராமாயணம் என்று ஒன்று இருக்கிறது. இது காஞ்சி மகா பெரியவா அவர்களால் நமக்கு அருளப்பட்டது. மொத்தம் 9 வரிகளைக் கொண்ட இந்த பாடல்வரிகளை படித்தால் மொத்த இராமாயணத்தை படித்த புண்ணியத்தை நம்மால் பெற முடியும்.
ஏக ஸ்லோக இராமாயணம்
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம\
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
அனைத்து விதமான காரிய சித்திகளும் பெறவும், சர்வ மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
தொடர்ந்து 48 நாள், உங்கள் வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து ராமபிரானை நினைத்து இந்த சுலோக்ததை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராமபிரானுக்கு துளசி இலைகளால் பூஜை செய்யுங்கள். ‘உங்கள் வேண்டுதல் அனைத்தும் பலிதம் ஆகும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பெண்களால் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாள் செய்ய முடியாது. மாதவிலக்காகும் நேரத்தில் பூஜை செய்வதை தவிர்த்து விட்டு, மீண்டும் இந்த பூஜையை தொடரலாம். தவிர உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேறு யாராவது இருந்தால் அவர்களை இந்த பூஜையை தொடர சொல்லலாம். ராமரின் பிராண பிரதிஷ்டை நடைபெற்று, அடுத்து வரக்கூடிய இந்த 48 நாட்களும் மிக மிக அற்புதம் வாய்ந்த நாட்கள். இந்த ஒரு மண்டலத்தை யாரும் தவற விடாதீங்க.

இராமாயணத்தைப் படிப்பதால் மற்றொரு சிறப்பும் உண்டு. அனுமன் ஸ்ரீ இராமபிரானின் தீவிர பக்தர் ஆவார். இப்படி இராமாயணம் படிக்கும்போது உங்க பக்கத்தில் ஒரு மனைப் பலகை போட்டு வையுங்கள். நீங்கள் படிக்கும் இந்த இராமாயண சுலோகத்தைக் கேட்க அனுமன் வந்து, அந்த இடத்தில் உட்காருவார் என்பதும் ஒரு நம்பிக்கை. ராமநாமம் எந்த இடத்தில் எல்லாம் ஜபிக்கப்படுகிறதோ, அதைக் கேட்க ஹனுமன் தவறாமல் அந்த இடத்திற்கு வந்து விடுவாராம்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம் என்பது இதன் பொருள்.
October 27, 2025
September 19, 2025
September 17, 2025