செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை துர்கை அம்மன் வழிபாடு செய்ய உகந்த நாட்கள் ஆகும். வாரத்தின் இந்த இரண்டு நாட்கள் அம்மனுக்கு பூஜை செய்ய உகந்த நாட்கள். அதிலும் சக்தி மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தில் முப்பெரும் தேவியருள் ஒருத்தியாக விளங்கும் துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு. துர்கை என்றாலே ராகு கால பூஜை விசேஷம் ஆகும். துர்கையை ராகு காலத்தில் பூஜை செய்ய வேண்டும்.
துர்கை அம்மனுக்கு ஆலயத்தில் ராகு கால பூஜை விமரிசையாக நடைபெறும். ஆலயம் சென்று துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்து அவளை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை வாழ்வில் பெற முடியும். துர்கை அம்மன் அசுரரை வதம் செய்தவள். அவளை நாம் பூஜித்தால் அவள் கெட்டதை நமக்கு காட்டிக் கொடுப்பாள். நமக்கு எதிராக செயல்படுபர்கள் யார் யார் என்று நாம் சில சமயங்களில் அறியாமல் இருக்கலாம். நமக்கு எதிர்மறையாக செயல்படுபவர்களை நாம் உணர வைப்பாள்.
துர்கை அமனுக்கு ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது சிறப்பு. துர்கை ஆலயம் சென்று அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். இந்த விளக்கை கோவிலில் தான் ஏற்ற வேண்டும். எலுமிச்சை விளக்கை வீட்டில் ஏற்றுதல் கூடாது. வீட்டில் சாதாரண அகல் விளக்கு ஏற்றி ராகு கால வழிபாடு மேற்கொள்ளலாம். துர்கை அம்மனிடம் தடைகள் விலக வேண்டும். மாற்றங்கள் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் ராகு கால பூஜை செய்யலாம். குத்து விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து முகத்திலும் திரி போட்டு குத்து விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள். அதனையே துர்கை அம்மனாக பாவித்துக் கொள்ளுங்கள். குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் அட்சதை மற்றும் மலர்கள் சாற்றி பூஜை செய்ய வேண்டும். துர்கை அம்மனுக்கு உரிய பாடல்களைப் பாடலாம். துர்கை அம்மன் 108 போற்றி மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இந்த பூஜையை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளலாம். குறிப்பாக ராகு காலத்தில் இந்த பூஜையை செய்யலாம்.
துர்கை அம்மனை வழிபடுவதன் மூலம் வாழ்வின் முன்னேற்றத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிரிகள் மீது வெற்றி காண முடியும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025