புராணத்தின் படி, பிருந்தா என்னும் ஒரு அழகான மற்றும் பக்தியுள்ள பெண் இருந்தால். அவள் ஜலந்தர் என்ற அரக்க அரசனை மணந்தார். அவரது மனைவியின் கற்பு அப்படியே இருக்கும் வரை அவரை வெல்ல முடியாது என்னும் வரத்தை ஜலந்தர் சிவபெருமானிடம் இருந்து பெற்றார். அந்த வரத்தின் காரணமாக அகந்தையுடன் இருந்தார் ஜலந்தர்.
ஜலந்தரைப் போல் வேடமணிந்து பிருந்தாவின் கற்பை உடைத்த விஷ்ணுவால் ஜலந்தர் போரில் தோற்கடிக்கப்பட்டார். ஜலந்தரின் தோல்விக்கு வழிவகுத்தது. இதனை அறிந்து மனம் உடைந்த பிருந்தா மகாவிஷ்ணுவை கல்லாக மாறும்படி சபித்தார். விஷ்ணு பிருந்தாவின் சாபத்தை ஏற்று, சாலிகிராம கல்லாக மாறினார்,
விஷ்ணுவை சபித்ததற்காக வருந்திய பிருந்தா, அவரது மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்தார். அவரின் கருணையால் அவள் துளசி செடியாக இருந்து அவருடன் சேர்ந்து வழிபடும் வரம் பெற்றார். இதன் விளைவாக, துளசி இந்து கலாச்சாரத்தில் தூய்மை மற்றும் பக்தியின் புனித சின்னமாக மாறியது மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் தெய்வமாக வழிபடப்படுகிறது. அடிக்கடி காணப்படுகிறது.
துளசி செடி, அதன் மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்று துளசி செடி. இது இந்துக்களுக்கு புனிதச் செடியாகும். இது மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி சளி தொல்லை, இருமல் தொல்லை, நுரையீரல் பிரச்சினைகளுக்கு உகந்த மூலிகையாகும். பெண்களின் கருப்பையை வலுவாகும் சக்தி இதற்கு உண்டு.
ஒவ்வொரு வீட்டிலும் துளசிச் செடி இருக்க வேண்டும். பெண்கள் காலையில் நீராடி துளசிச் செடிக்கு நீர் ஊற்ற வேண்டும். தொட்டியில் வைப்பதை விட துளசி மாடம் வாங்கி அதில் வைப்பது உத்தமம். தினமும் மாதத்திற்கு மஞ்சள் குங்குமம் பூசி அலங்கரிப்பது நல்லது. காலையும் மாலையும் துளசி மாடத்தின் முன் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நல்லது. துளசியை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். துளசி வீட்டிற்குள் வைத்தல் கூடாது. முற்றத்தில் மிதமான வெயில் படும்படி வைக்க வேண்டும். துளசி நன்றாக செழித்து வளர்ந்தால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதை உணரலாம். வீட்டில் உள்ள துளசி, திடீரென பச்சை பசேல் என மாறினால் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அது போல் துளசி செடி பூப்பதும் மங்களகரமானது.அதே நேரம் துளசி வாடினாலோ அல்லது சரியாக வளரவில்லை என்றாலோ உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.
நாம் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சில நேரங்களில் துளசி செடி திடீரென வளரும். . அவ்வாறு உங்கள் வீட்டில் துளசி செடி திடீரென முளைத்துவிட்டால் அது மிகவும் நல்ல சகுனம் ஆகும். உங்கள் வாழ்வில் வளமும் நலமும் வந்து சேர்வதற்கான அறிகுறியாக நீங்கள் அதனைக் கருதலாம். அது நல்ல இடத்தில் செழிப்பாக வளரும் வகையில் உள்ளதா என்பதைக் கவனியுங்கள். இல்லாவிடில் அதனை ஒரு தொட்டியில் பத்திரமாக வைத்து வளருங்கள். இது உங்கள் வீட்டில் செல்வச் செழிப்பைக் கொண்டு சேர்க்கும். எதிர்மறை சக்திகள் வருவதற்கே அஞ்சும். துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகிவிடும். துளசி இலையை பிரசாதமாக நினைத்து உண்போருக்கு சகல பாவங்களும் தொலையும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025