குபேரன் வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவ்சகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார்.
குபேரன் ஒரு யக்ஷன். இந்த யக்ஷ குபேரன் வேண்டியதை தரக் கூடியவர். நாம் வேண்டியது அனைத்தையும் தரக் கூடியவர் குபேரன். குபேரன் இருக்கும் இடம் செல்வச் செழிப்பு நிறைந்து இருக்கும். நம் அனைவருக்கும் ஐஸ்வரியம் பெருக வேண்டும் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும். என்ற ஆசை கண்டிப்பாக இருக்கிறது.
எனவே நாம் நமது வீட்டில் குபேர சிலைகளை வைத்துக் கொள்வது நல்லது. அது செல்வத்தை சேர்ப்பது மட்டும் அன்றி நாம் வேண்டுவன்வற்றையும் அளிக்க வல்லது.
பொதுவாக குபேர சிலைகளில் கைகளை மேலே உயர்த்திக் கொண்டு இருப்பது போன்ற சிலை அதிகம் இருக்கும். பெரிய தொப்பை வைத்துக் கொண்டும் காசு மூட்டையை சுமந்து கொண்டு இருக்கும் சிலையும் இருக்கிறது. இப்படி வெவ்வேறு வடிவங்களில் குபேரர் சிலை இருக்கிறது எந்த குபேர சிலையை எந்த அமைபில் வேண்டுமானலும் வைக்கலாம். அதிலும் குறிப்பாக சிரிக்கும் புத்தர் (குபேர) சிலை வைப்பது நல்லது. இந்த குபேர சிலையை குறிப்பிட்ட சில திசைகளில் வைக்கும் போது மிகச் சிறந்த பலன்களை நாம் காணலாம்.
இந்த பொம்மை சிறந்த வாஸ்து பொருளாக கருதப்படுகிறது.குபேரர் இருக்கும் இடத்தில் அதிர்ஷ்டம் இருக்கும். இதனை சிரிக்கும் புத்தர் என்று கூறுவார்கள். இந்த பொம்மை அதிர்ஷ்டத்தை ஈர்க்க வல்லது. துரதிர்ஷ்டத்தை நீக்க வல்லது இந்த பொம்மை இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதி குடி கொண்டிருக்கும் என்று கூறுவதும் உண்டு. மேலும் இந்த பொம்மை இருக்கும் இடத்தில் செல்வச் செழிப்பு நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
வீட்டில் குபேர பொம்மையை சரியான திசையில் வைப்பது எதிர்பாராத செழிப்பை தரும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லைகள் அழியும். வேலை செய்யும் இடத்தில் வைத்தால் வேலையில் சுபிட்சமும் வருமானமும் அதிகரிக்கும். குழந்தைகள் படிக்கும் மேசைக்கு மேலே வைத்தால், பெரும் கல்விப் பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் சோம்பேறித்தனம் நீங்கி படிப்பில் நல்ல கவனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே, குபேர பொம்மையை எந்த திசையில் அதிக பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.பொதுவாக இந்த குபேர சிலையை வீட்டு வாசலை பார்த்தவாறு வைப்பது நல்லது. குபேரன் வடக்கு திசை அதிபதி என்பதால் வடக்கு திசை நோக்கி வைக்கலாம். அதாவது குபேரனின் முகம் வடக்கு பார்த்தவாறும் முதுகு தெற்கு பார்த்தவாறும் வைக்க வேண்டும். கிழக்கு திசையும் குபேர பொம்மை வைக்க உகந்த திசையாக கருதப்படுகிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025