Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
தெய்வீக அருளைப் பெற விளக்கு ஏற்றும் முறை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தெய்வீக அருளைப் பெற விளக்கு ஏற்றும் முறை

Posted DateFebruary 6, 2024

விளக்கு ஏற்றுவதற்கு பல தாத்பரியங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமாக கருதப்படுவது இறைவன் ஜோதி வடிவானவன், அவனுக்கு உருவம் கிடையாது என்பதை உணர்த்தும் தத்துவமே விளக்கேற்ற வழிபடுவதன் தாத்பரியமாகும். விளக்கு மிக முக்கியமான மங்கல பொருளாக இந்து மத சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. எந்தவொரு சுப காரியத்தை தொடங்கினாலும் முதலில் விளக்கு ஏற்றி விட்டுத் தான் அந்த சுப காரியம் தொடங்கப்படும். அகல் விளக்கு துவங்கி, நேர்த்திக்கடனுக்காக கோவில்களில் ஏற்றும் எலுமிச்சை விளக்கு, தேங்காய் விளக்கு, மாவிளக்கு என பல விதமான விளக்குகள் உள்ளன. அகல் உள்ளிட்ட அனைத்து விளக்குகளுக்கும் தனித்தனியான பலாபலன்கள் உண்டு.

அதே போல் விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய்யின் வகை, நெய், இடப்படும் திரி, முகங்களின் எண்ணிக்கை ஆகியவையும் பலவிதமான பலன்களை தரக் கூடியவை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளதால், அந்த பொருட்களைக் கொண்டு ஏற்றப்படும் விளக்கிற்கும் தனி பலன் உண்டு. விளக்கேற்றும் போது பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டின் உள்ளே உள்ள திரியை உபயோகிக்கலாம்.

பொதுவாக விளக்கை பிரம்ம முகூர்த்தத்தில்  ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் போது நமது வீட்டில் எல்லா தேவர்களும், தெய்வங்களும் வந்து  வாசம் செய்யும். காலையில் எழுந்து கொள்ள முடியாவிட்டால் குறைந்தபட்சம் காலை ஆறு மணிக்குள் விளக்கு  ஏற்ற வேண்டும். சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு விளக்கு ஏற்ற வேண்டும். கண்டிப்பாக சூரிய உதயம் முன்பு ஏற்ற வேண்டும். மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு உடனடியாக விளக்கு ஏற்ற வேண்டும்.

நாம் விளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் விளக்கு ஏற்ற வேண்டும்  என்ற சந்தேகம் வரலாம்.

ஒரு முகம் ஏற்றினால் மத்திமமான நற்பலன்கள் கிட்டும்.   

இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கூடும்.

மூன்று முகம் ஏற்றினால் புத்திரர்கள் சம்பந்தமான நற்பலன்கள் கிட்டும்.

நான்கு முகம் ஏற்றினால் மாடு, மனை, வாசல் என்று அஷ்டலக்ஷ்மிகளின்  அருளும் செல்வ நலனும் கிட்டும்

ஐந்து முகம் ஏற்றினால் வீட்டில் செல்வம் எப்பொழுதும் செழித்துக் கொண்டே இருக்கும்.

விளக்கு ஏற்றும் திசை:

விளக்கு எந்தப் பக்கம் பார்க்கிறதோ அது தான் திசை

கிழககு திசை துன்பம் நீக்கும்

மேற்கு திசை கடனை விரட்டும்.

வடக்கு திசை செல்வம் அறிவு ஞானம் வளர உதவும்

தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது.

தீபத்தில் முப்பெரும் தேவியரும் குடியிருக்கிறார்கள். சக்தி ரூபமாகவும், லஷ்மி ரூபமாகவும், சரஸ்வதி ரூபமாகவும் தீபம் திகழ்கிறது. ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தில் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நாம் ஆவாகனம் செய்ய முடியும். 

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது குலதெய்வத்தின் பெயரை உச்சரித்த வண்ணம் தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்தின் பெயரைக் கூறி தீபம்  ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் குடியேறுவார்கள்.

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் : 

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே

விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய மந்திரம் :

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே. –

இந்த இரண்டு மந்திரங்களையும், விளக்கினை ஏற்றும் போதும், ஏற்றிய பின்பும் இறைவனை நினைத்து மனதார பிழையில்லாமல் கூறுவதால், விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் முழுப் பலனையும் நாம் அடையலாம்.