Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தீபாவளி சமயத்தில் உடன் பிறப்புகளுக்கு தர வேண்டிய பரிசு

Posted DateNovember 17, 2023

தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று   உடன் பிறபுக்களுக்கான விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதனை பௌ பீஜ்  என்று கூறுவார்கள். இந்நாளில் தங்களின் அண்ணன் தம்பியரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலனுக்காக சகோதரிகள் வேண்டுதல் நிகழ்த்துவதும் வெற்றித்திலகம் இடுவதும் சகோதரர்கள் தங்கள் பெண் உடன்பிறப்புகளுக்காக பரிசுகள் வாங்கிவருவதும் வழக்கம் ஆகும். இந்த விழா வங்காளம், மகாராஷ்டிரம்  கொங்கன் பகுதிகளிலும் கர்நாடகம் மற்றும்கோவாவின் சிலபகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. 

நேபாளத்திலும் இது முதன்மையான சமயவிழாவாக உள்ளது. என்றாலும் இதனை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

புராண கதைகளின்படி தீபாவளித் திருநாளில் நரகாசுரனை வென்றபின்னர் கிருஷ்ணன் தனது தங்கை சுபத்திரையை காண வந்தபோது சுபத்திரை அவருக்கு விருந்துகள் அளித்து வெற்றித்திலகமிட்டதை நினைவு கூறுமுகமாக இந்தத் திருநாள் கொண்டாடப் படுவதாக்க் கூறப்படுகிறது.

எல்லா உறவுகளிலும் சிறந்த உறவாக திகழ்வது உடன் பிறப்பு உறவு ஆகும். எத்தனை சண்டை சச்சச்சரவுகள் இருந்தாலும் இரத்த பாசத்தால் ஒன்றிணைவது இந்த உறவு. ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒன்றாக வாழ்ந்து தங்களின் அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழும் உறவு உடன்பிறப்பு தான் என்றால் மிகை ஆகாது. உடன் பிறந்த பெண்கள் திருமணம் ஆகி வேறு வீட்டிற்கு சென்றாலும் இந்த உறவு தொடரும். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

அப்படியான இந்த உறவு முறைகளில் நாள் கிழமைகளில் நாம் ஏதேனும் வாங்கிக் கொடுத்தால் அது அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். நமக்கும் மன நிறைவை கொடுக்கும்.

அண்ணன் தம்பிகள் தங்கள் சகோதரிக்கு இந்நாளில் பரிசுப் பொருளை வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இதன் மூலம் இருவரின் உறவும் நன்கு வளரும். சகோதரிகள் தங்கள் உடன் பிறப்பை இந்த நாளில் சந்தித்து அவர்களுக்கு நெற்றித் திலகம் இட்டு பெரியவர்கள் என்றால் அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். சிறியவர்கள் என்றால் அவர்களுக்கு ஆசிகளை வழங்க வேண்டும். அண்ணன் தம்பிகள் தங்களால் முடிந்த பரிசுப் பொருளை அவர்களுக்கு வழங்க வேண்டும். குங்குமம் மஞ்சள்,புத்தாடைகள் வாங்கி அளிக்கலாம் அல்லது அவர்களுக்கு பிடித்த வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கலாம். உடன்பிறப்புகளுக்கு வாங்கி கொடுக்கும் இந்த ஒரு பொருள் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணம் தங்கள் வீட்டில் பிறந்து வேறு வீட்டிற்கு வாழப் போன பெண்களுக்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது இவர்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று பொருள். அது மட்டும் இன்றி இது போல செய்பவர்களுக்கு எமதர்மராஜாவின் பரிபூரண ஆசீர்வாதமே கிடைக்கும் என்றும் கூட சொல்லப்படுகிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் இதை சம்பிரதாயம் என்ற பெயரில் செய்து வந்தார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிக்கு தீபாவளி சமயத்தில் புத்தாடை அல்லது பரிசுகளை வாங்கி அளிக்கலாம். இதன் மூலம் உங்கள் உடன்பிறப்புகளின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமையும். உங்களின் வாழ்க்கையின் செல்வ நிலையில் பல மடங்கு உயரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.