Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Viruchigam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Viruchigam Rasi Palan 2023

Posted DateNovember 27, 2023

விருச்சிகம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

இந்த மாதம் உங்கள் சுய முன்னேற்றத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். மற்றும் உங்கள் குடும்பம் குறித்தும் நீங்கள் கவனம் செலுத்தலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். முக்கிய விஷயங்களைக் கையாளும் போது உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை எளிதாக தீர்த்து முடிப்பீர்கள். மாதத்தின் முதல் பாதியில் நீங்கள் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் நலனுக்காக செலவுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் மற்றும் சமூக வாட்டரத்துடன் நல்லுறவை மேற்கொள்ள விரும்புவீர்கள். அசையாச் சொத்துக்கள் மூலம் லாபம் காண்பீர்கள். வரும் நாட்களில் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறை அதிர்வுகளும் ஆற்றலும் இருக்கலாம். நீங்கள் போதுமான தூக்கத்தைப் பெறலாம் மற்றும் அன்பானவர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம். மொத்தத்தில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் சாதகமான காலம் எதிர்பார்க்கப்படுகிறது.

காதல்/ குடும்ப உறவு:

 உறவில் இது வரை நிலவி வந்த தவறான புரிந்துணர்வு தீர்க்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் வார்த்தைகள் தான் உறவுகளின் நிலைப்பாட்டை நிர்ணயிக்கும். கணவன் மனைவி உறவில் தவிர்க்கமுடியாத பிரிவினை இருக்கலாம். இது வேலை நிமித்தமாகக் கூட இருக்கலாம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள்.  குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.   இந்த மாதம் நீங்கள் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். தம்பதியரிடையே ஏற்படும் ஈகோ மோதல்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதனை தவிர்த்தால் தம்பதியினரிடையே அன்பும் பிணைப்பும் வலுப்பெறும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை சந்திக்கலாம். இந்த மாதம் காதல் மற்றும் உறவுகளுக்கு மிதமான காலமாக இருக்கும்.

 திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் முதலீடுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஊக வணிகங்களில் ஈடுபடும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. மாத ஆரமபத்தில் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க நேரலாம். ஆனால் இந்த நிலை மாத இறுதியில் சீரடையும். ஆதாயங்கள் மற்றும் லாபங்கள் கிட்டலாம். பணத்தை தங்கம் அல்லது ஆபத்து இல்லாத பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. நீங்கள் கடினமாக சம்பாதித்த பணம் பாதுகாப்பாக இருப்பதையும் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதிசெய்யும். நிதி வரவுகள் ஓரளவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் காரணமாக திடீர் வருமானம் வரக் காண்பீர்கள். மறைமுக ஆதாரங்கள்   மூலமாகவும் நீங்கள் சம்பாதிக்கலாம். மாதத்தின் ஆரம்பப் பாதியில், உறவை வலுப்படுத்துவதற்காக மனைவி/கூட்டாளிகளுக்காக அதிக செலவு செய்யக்கூடும். உங்கள் தந்தையின் நலன் கருதி செலவுகள் ஏற்படலாம் அதே நேரத்தில், நன்மையான நோக்கங்களுக்காக அதிக செலவுகள் இருக்கலாம். இந்த மாதத்தில் பயணம், வீடு மற்றும் வாகனங்களுக்கான செலவுகள் கூடும். சில சமயங்களில் குடும்ப நலனுக்காகவும் செலவு செய்யலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உத்தியோகத்தில் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வெற்றி காண்பீர்கள். அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலை சம்பந்தமான உங்கள் முயற்சிகளும் நல்ல பலனை அளிக்கும். மொத்தத்தில் உத்தியோக வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணியிடத்தில் சூடான வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை. பணியிடத்தில் நீங்கள் சாதுரியமாக செயல்பட்டு உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். இந்த மாத பிற்பகுதியில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் உள்ளவர்கள் தங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். சக ஊழியர்களும் இந்த மாத இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். வேலை சுமை உணரப்படும், ஆனால் இந்த மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு பணிச்சுமை குறையும்.

தொழில் :

தொழில் மூலம் வருமானம் கணிசமாக மேம்படும். பாதுகாப்பு, ரியல் எஸ்டேட், அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஆலோசனைத் துறையில் செயல்படுபவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். இருப்பினும், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, தளவாடங்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இதனால் தொழிலில் சற்று வீழ்ச்சியைக் காணலாம். இந்த மாத இறுதியில் உங்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். ஆவணங்களில் உள்ள சிக்கல்களால் சங்கடமான சூழ்நிலைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஆயினும்கூட, மேலே குறிப்பிட்டுள்ள வணிகத்தைத் தவிர்த்து,மற்ற தொழிலில்  நல்ல லாபமும் இருக்கலாம். வணிக கூட்டாளிகளும் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் ஆதரவாகவும் இருக்கலாம். தகங்கள் ஓத்துழைப்பை அளிக்கலாம். ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதும் ஒப்பந்தங்களை இறுதி செய்வதும் டிசம்பர் மாதத்தில் கவனமாக செய்யப்பட வேண்டும்.

தொழில் வல்லுனர்கள் :

தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் இணையம் ஆகிய துறைகளில் செயல்படும் விருச்சிக ராசி  வல்லுநர்கள் தங்கள் தொழிலில் இந்த மாதம் சற்று  பின்னடைவைக் காணலாம். தொழில் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. தொழில் குறித்த உங்கள் கருத்துப் பரிமாற்றத்தில் மிகவும் கவனமாகவும் சாதுரியமாகவும்  செயல்படவேண்டும். ஏனெனில் சர்ச்சைகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன.  முக்கியமான பிரச்சினைகளில் வழிகாட்டிகளின் உதவியைப் பெறுவது நல்லது. நிதி ரீதியாக, விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் நல்லதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கூட்டாண்மை, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் மறுசீரமைப்பு இருக்கலாம். அரசு அதிகாரிகளால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கூடும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேம்பட : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதத்தில் உடல்நிலை சீராக இருக்கும். வயதானவர்கள் வயது மூப்பு காரணமாக சில உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். தாயாரின் உடல் நிலை சீரடையும். சளி மற்றும் இருமல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சில ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கலாம், குறிப்பாக இரத்தம் மற்றும் தோல் தொடர்பான உபாதைகளை சந்திக்க நேரலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். இந்த மாதம் மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மாணவர்களின் கவனத் திறன் சிறப்பாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் கல்வி சார்ந்த பயணங்களை மேற்கொள்ள நேரலாம்.  அது நீண்ட தூர பயணமாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த மாதத்தில் பள்ளி/கல்லூரியில் வாக்குவாதம் மற்றும் ஈகோ மோதல்களில் இருந்து விலகி இருக்கலாம். வெளிநாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தகுந்த வாய்ப்புகளைப் பெறலாம். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் அதிகக் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாதத்தின் பிற்பாதியில் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இருப்பினும், மாதத்தின் ஆரம்ப பாதியில் ஆராய்ச்சி செய்து புதிய உத்தியை உருவாக்கும் போக்கு அதிகமாக இருக்கலாம். தேர்வுகளை எழுதும் போது கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் மாணவர்கள் தங்கள் தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

 கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 15,16, 17, 18, 19, 22, 23, 24, 25 & 31.

அசுப தேதிகள் : 9, 10, 11, 12, 13, 26, 27 & 28.