சிம்ம ராசி அன்பர்களே! இது வரை உங்களுக்கு ரியல் எஸ்டேட் விஷயங்களில் இருந்த கவனம் மாறும். இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நலனில் இருக்கும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகள் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கலாம். இந்தமாத இறுதி வரையில் தந்தை பற்றிய கவலை இருக்கும். இந்த மாதம் உங்கள் தந்தை தனது வாழ்வில் சில பின்னடைவுகளை சந்திக்கலாம். ஆவணங்கள் சார்ந்த பிரச்சினைகள் எழலாம். தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் மேலோங்கி இருக்கும்.. இந்த மாதம் நீண்ட தூர பிரயாணமாக ஆன்மீக யாத்திரை அல்லது புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
சிம்ம ராசி காதலர்களைப் பொறுத்தவரை இந்த மாதம் ஒரளவு நல்ல பலன்கள் கிட்டும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவ்வபொழுது சில ஏமாற்றங்களும் பின்னடைவுகளும் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வார்த்தைகளில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. காதலர்களும் தங்கள் ஈகோவை விட வேண்டும்.குடும்ப பிரச்சினைகளை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். கூடவே உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்வில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கணவன் மனைவி உறவில் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில் உங்கள் வாழ்க்கைத் துணையின் செயல் உங்களுக்கு விரக்தி மனப்பான்மையை அளிக்கலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டு கொள்ளலாம். ஆன்மீக ஈடுபாடு மனதில் அமைதியை அளிக்கும். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
உங்கள் நிதிநிலை மிதமாக இருக்கும். நீங்கள் சுதந்திரமாக செலவுகளை மேற்கொள்வீர்கள். ரியல் எஸ்டேட் மூலம் எதிர்பாராத பண வரவு வரலாம். முதலீடு மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிட்டாது என்பதால் அந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். என்றாலும் அதிர்ஷ்டம் மற்றும் யோகம் மூலம் நீங்கள் சில எதிர்பாராத லாபங்களைக் காணலாம். உத்தியோகம் அல்லது தொழில் மூலம் பொருளாதார மேன்மை காண்பீர்கள். தந்தையின் ஆரோக்கியம் குறித்த செலவுகள் இருக்கலாம். இந்த மாதம் பண வரவு மற்றும் பணபுழக்கம் சீராக இருக்கும். நீங்கள் ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். நீண்ட கால பயன் தரும் முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வீர்கள். அசையாச் சொத்துக்கள் சார்ந்த ஆவணங்கள் குறித்த செலவுகளும் இருக்கலாம். வீட்டைப் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் செலவழிப்பதில் முக்கிய கவனம் இருக்கும். பொழுதுபோக்கு மற்றும் வாகனங்கள் மூலம் சுகங்களையும் ஆடம்பரங்களையும் தொடர்ந்து அனுபவிக்கக்கூடும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
உங்கள் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தின் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டும். ஆரம்ப போராட்டங்களுக்குப் பிறகு நீங்கள் எதிர்பார்த்த உயர் பதவியைப் பெறலாம். பணியிடத்தில் பெண் பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிட்டும். என்றாலும் பணியிடத்தில் நீங்கள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். உங்களில் ஒரு சிலர் உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். நீங்கள் பணியிடத்தில் நேர்மையாக பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கும் நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் பெறுவீர்கள். நீங்கள் சிறந்த குழுத் தலைவராக செயல்படுவீர்கள். பணியிடத்தில் பெயரும் புகழும்பெருவீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். அது சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்றாலும் நீங்கள் அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த மாத இறுதியில் பணியிடத்தில் சர்ச்சை எழலாம் என்பதால் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
நீங்கள் சிறப்பாக தொழில் நடத்த இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கலாம். சமூக நடப்புகளுக்கு தகுந்தாற் போல செயல்பட வேண்டிய அவசியம் இருக்கும். தொழில் மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நிபுணர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது சிறப்பு. டிசம்பர் மாதத்தில் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதி நிதி விஷயங்களில் நல்ல செழிப்பைக் கொடுக்கும். இருப்பினும், வியாபாரத்தில் பங்குதாரர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும்கூட, வணிகத்தின் முன்னேற்றம் குறித்து ஒட்டுமொத்த திருப்தி இருக்கலாம். நீங்கள் வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம். மேலும், தொழிலை விரிவுபடுத்துவதற்கு நீங்கள் கடன் பெற வேண்டியிருக்கும்.
சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் தொழில் மூலம் லாபம் காண்பார்கள் என்றாலும் பணத்தை சேமிக்க இயலாத நிலை இருக்கலாம். தொழிலில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் புரியும் இடத்தில் பணியாளர்களுக்கு உதவுதல் மற்று வழிகாட்டுதல் மற்றும் நெருக்கடி நேரத்தில் அவர்களுக்கு உதவுதல் என பரபரப்பாக நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் தகவல் தொடர்பில் குறைபாடு இருக்கும். இதனால் உங்கள் நற்பெயருக்கு களங்கம் நேரலாம். இந்த மாதம் நீங்கள் போட்டியாளர்களை வெல்லும் வாய்ப்பு கிட்டும். இந்த காலகட்டத்தில் நல்ல பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பெண் கூட்டாளிகள் லாபத்தையும் நல்ல வியாபார வாய்ப்புகளையும் கொண்டு வரலாம். நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலால் ஆதாயம் கிட்டும். இந்த மாதம் உங்கள் பேச்சு வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
இந்த மாதம் உங்கள் உடல்நிலை சீராக இருக்கும், கடந்த கால உபாதைகளில் இருந்து முன்னேற்றம் காண்பீர்கள். கவலை மற்றும் பதட்டத்தின் விளைவாக உடல் வெப்பநிலையும் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் அஜீரணக் கோளாறுகள் மற்றும் இரைப்பைக் கோளாறுகள் ஏற்படலாம். பற்களின் நல்ல சுகாதாரத்தையும் பராமரிப்பது முக்கியம். தாயின் உடல்நிலை சீராகும். சில சிம்ம ராசிக்காரர்களுக்கு ஹார்மோன்கள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படலாம். ஆசிரியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் சரியான பாடப் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் நீங்கள் வெற்றி பெறலாம். கல்வி விஷயங்கள் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் சாதகமாக இருக்கும். உயர்ந்த அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் மாணவர்களிடையே காணலாம். இந்த மாதத்தின் முதல் பாதியில் சிறு தடைகளை சந்திக்க நேரிடும். கவனச்சிதறல்கள் தவிர்க்கப்பட வேண்டும். போட்டித் தேர்வுகளும் நல்ல பலன்களைத் தரும். வெளிநாட்டில் உள்ள கல்வி வாய்ப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
கல்வியில் சிறந்து விளங்க : விஷ்ணு பூஜை
சுப தேதிகள் : 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 24, 25, 26 & 27.
அசுப தேதிகள் 1, 2, 3, 4, 5, 6, 20, 21, 28, 29, 30 & 31.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025