Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Rishabam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Rishabam Rasi Palan 2023

Posted DateNovember 24, 2023

ரிஷபம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் வாழ்வில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் அக்கம் பக்கம் மற்றும் சமூக வட்டார நபர்களுடனான உறவைக் கையாள்வதில் உங்களின் முதன்மை கவனம் இருக்கும். குடும்பம் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் பயனுள்ள செலவுகள் ஏற்படலாம். முறையான நல்ல தூக்கம் மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்கள் மனதில் அமைதி நிலவும். இருப்பினும், குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்புடைய கவலைகள் உங்கள் மனதில் இருக்கலாம்.   உங்கள் வாழ்க்கையின் புதிய முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்தில் உங்கள் ராசியில் மூன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் செல்வாக்கு செலுத்துவதால், நீங்கள்  எந்தவொரு விஷயத்திலும் உற்சாகமான முடிவுகளை எடுப்பீர்கள். ரிஷபம் ராசிக்காரர்களின் தோற்றமும் அழகும் நடப்பு மாதத்தில்  கூடும். குழந்தைகள் மீது விரக்தியும் கோபமும் வரலாம். இந்த மாதத்தில் எண்ணங்களின் சரியான ஒத்திசைவு இல்லாததால், எதிர் நபருடன் தங்களை வெளிப்படுத்த சிரமப்படலாம்.

காதல் / குடும்ப  உறவு :

மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான உறவையும் அன்பையும் வடிவமைப்பதில் உங்களது  முதன்மை கவனம் இருக்கக்கூடும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத்துணை  சில சமயங்களில் கோபமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கலாம், இதனை உங்களால் சரியாகக் கையாளப்பட வேண்டும்.  காதல் உறவில் இருப்பவர்களுக்கும் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல காலம். நிதி மற்றும் ஆவண விஷயங்களில் பங்குதாரருடன் சிறிய தவறான புரிதல்கள் இருக்கலாம். குழந்தைகளின் பிரச்சினைகளும் உறவைப் பாதிக்கலாம். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கைத் துணையின்  மனதைப் புரிந்துகொள்ள  வேண்டியிருக்கும்.  முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை பிரிப்பதன் மூலம் பயனடையலாம். டிசம்பர் மாத இறுதியில், நீங்கள் உங்களுக்கேற்ற  துணையை சந்தித்து நிலையான உறவைப் பெறலாம். இருப்பினும், தம்பதியினரிடையே சிறு சிறு வாக்குவாதங்களும் இருக்கலாம். டிசம்பர் மாதத்தில் திருமண சுகம் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் பணத்தை செலவு செய்யலாம்.  இது உங்கள் இருவருக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதே சமயத்தில் இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்றாலும் அவை பயனுள்ள செலவுகளாக இருக்கும்.ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதில் நீங்கள் ஆர்வம் காட்டலாம். நீங்கள் உங்கள் மனைவி அல்லது பங்குதாரர் மூலமாகவும் ஆதாயங்களைப் பெறலாம். பங்குச் சந்தையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகம் மூலமாகவும் லாபம் இருக்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் உடல் நலக் காரணங்களுக்காக செலவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு எதிர்பாராத செலவும் ஏற்படலாம். ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரைகள் தொடர்பான நீண்ட தூர பயணங்களுக்கும் பணம் செலவழிக்கப்படலாம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் சேமிப்பில் இருந்து பணத்தை செலவு செய்வீர்கள். மொத்தத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி வாய்ப்புகள் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில்  சர்ச்சையில் சிக்கக்கூடும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

உத்தியோகம் :

ரிஷப ராசிக்காரர்களின் உத்தியோக நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள்  பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலை மற்றும் விசாவை நாடுபவர்கள்  அதை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் தொழிலில் இருந்து வரும் வருமானம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். பணியாளர்கள் மற்றும் முதலாளியுடனான தொடர்பு மிகவும் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும். உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும் பரிந்துரைக்கப்படுகிறது. பணியிடத்தில் நீங்கள் திறமையுடன் செயல்படுவீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.. சிலருக்கு தவிர்க்க முடியாமல் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மற்றும் செலவுகள் தவிர்க்க முடியாத அளவுக்கு இருக்கும். சில நேரங்களில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சர்ச்சை ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். தொழிலில் உங்களின் விருப்பப்படி மேன்மை கிட்டும்.  உத்தியோகபூர்வ விஷயங்களில் வாதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.  உத்தியோகத்தில் தகுதியான அங்கீகாரம் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களின் கருத்துக்கள் தகவல் தொடர்பு அம்சத்தில் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம் அல்லது மேலதிகாரிகள் அதன் உண்மையான அர்த்தத்தில் அதைப் புரிந்து கொள்ளாமல் போகலாம்.

தொழில் : 

உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் மூலமும் நற்பயன்கள் கிட்டும். கடன் வாங்கி முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதன் வக்கிர நிவர்த்தி பெறும் வரை முதலீடு மற்றும் ஆவணங்கள் விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த மாத இறுதியில் செலவுகளை கட்டுபடுத்த வேண்டும். முதலீடுகளின் மூலம் லாபம் கிட்டும். புது கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறக்கும். தொழில் விரிவாக்கமும் நடைபெறும். பங்குதாரர்களின் தேவை கருதி தனது கருத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். புதிய தொழிலில் சாதகமான முன்னேற்றம் காணலாம்.

தொழில் வல்லுனர்கள் :

ரிஷபம் ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான நேரமாக இருக்கும். தொழிலின் வெளிப்புறச் சூழல் உங்களுக்கு சாதகமாக மாறும். வாடிக்கையாளர்களின் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் தொழிலில் வரவு ஓரளவுக்கு நன்றாக இருக்கும். சாதுரியமும் புத்திசாலித்தனமும் வாடிக்கையாளர்களை சமாளிக்க உதவும். மேலிடத்தின் அறிவுறுத்தல்களை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை முறையாக செயல்படுத்த முடியாமல் போகலாம். இதனால் முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே சில உரசல்கள் உருவாகலாம். இந்த மாத இறுதியில் வாடிக்கையாளர்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். முக்கிய நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்  சேவையை சமாளிக்க நீங்கள் நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். வழக்குகளை கையாளும் வல்லுநர்கள் ஆவணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற :சனி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கலாம். என்றாலும் சில சிறிய காயங்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு நீங்கள் ஆளாக நேரலாம். இரத்த . அழுத்தம் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மேலும், சில நேரங்களில் சில வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாறும் தட்பவெப்ப காரணமாக உடல் வெப்பநிலையும் மாற்றம் காணும். குடும்ப உறுப்பினர்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவமனைக்கான செலவுகள் டிசம்பர் மாதத்தில் மிகவும் சாத்தியமாகும். இந்த மாத இறுதியில் ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :   

ரிஷப ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பாடங்களை நன்கு கவனித்து மனனம் செய்யும் திறன் இருக்கும். தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சி செய்வார்கள். என்றாலும் முயற்சிகேற்ற பலன் இருக்க வாய்ப்பில்லை இது மனதில் விரக்தியை ஏற்படுத்தலாம். சக மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. விளையாடும் போதும் வாகனம் ஓட்டும் போதும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கற்கும் ஆர்வமும் ஆற்றலும் இந்த மாத இறுதியில் உணரப்படும்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 28, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 13, 14, 15, 22, 23, 24 & 25.