Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2024 | December Matha Kadagam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2024 | December Matha Kadagam Rasi Palan 2024

Posted DateNovember 22, 2024

கடகம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் வரவேற்கத்தக்க அற்புதமான மாதமாக இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறலாம். புதிய தொழில் தொடங்க இந்த மாதம் உகந்த நேரமாக இல்லை. எனவே தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை தள்ளிப் போடவும். ஏற்கனவே தொழில் செய்பவர்கள் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்கள் வணிக விவகாரங்களில்  மூன்றாம் நபரை நீங்கள் ஈடுபடுத்துவத்தைத் தவிர்க்கவும். காதலர்கள் சிறு தடைகளுக்குப் பின் தங்கள் காதல் உறவில் வெற்றி பெறலாம்.  கணவன் மனைவி உறவில் சில குழப்பங்கள் காணப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணை பிரச்சினையை உருவாக்கினால், பொறுமையைக் கடைபிடிப்பது உத்தமம். உங்கள் குடும்ப விஷயங்களின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் மூன்றாவது நபரை ஈடுபடுத்த வேண்டாம்.  உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம், நீங்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இந்த மாதம் மாணவர்களுக்கு நல்ல நேரம். இந்த நேரத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வியில் வெற்றி காணலாம்.

குடும்ப உறவு

உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறு சிறு பிரச்சினைகள் வந்து சரியாகும்.  உங்கள் குடும்ப விவகாரங்களில்  மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிகாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், எனவே நல்லுறவை பராமரிக்க விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வீட்டில் இருக்கும் வயதானவார்க்ளைக் கையாள்வது சிறிது  கடினமாக இருக்கும், எனவே அவர்களிடம் பொறுமையைக் காட்டுவது முக்கியம். குழந்தைகளுடன் சுமுக தொடர்பை உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை.

இந்த மாதம் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் உங்கள் வருமானம் உயரும் என்றாலும் உங்களால் கணிசமான பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம். என்றாலும்  விரைவில், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். உங்களின் நிதி இலக்குகளை அடைய உதவும் வகையில் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கூடுதலாக, உங்கள் வாழ்க்கை துணையின் குடும்பத்தினர்  உங்களுக்கு உறுதியான நிதி ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும் எனவே சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பதற்குப் பதிலாக, புத்திசாலித்தனமான முதலீடுகளை மேற்கொள்வது சிறப்பு. இந்த அணுகுமுறை உங்கள் செல்வத்தை மிகவும் திறம்பட வளர்க்கவும், பிரகாசமான நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

 உத்தியோகம்  

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் புதிய வாய்ப்புகள் வரலாம். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோக மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் கடக ராசியினர்  சற்று காலம் காத்திருக்க வேண்டும். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். உங்கள் மேலதிகாரி  மற்றும் சக ஊழியர்களிடமிருந்து வலுவான ஆதரவையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள்.

தற்போது உற்பத்தித் துறையில் பணிபுரியும் கடக ராசியினருக்கு   தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்  நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. உங்கள் பணியிடச் சூழல் உங்கள் வளர்ச்சியை ஆதரிக்கலாம்.  மேலும் உங்கள் தொழில்முறை இலக்குகளை அடைய உங்களுக்கு உதவ நிர்வாகம் ஆதரவாக இருக்கலாம். இந்த ஊக்குவிப்பு நீங்கள் உங்கள் துறையில் சிறந்து விளங்க உதவும் புதிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளுக்கு வழிவகுக்கும்.

IT துறைகளில் உள்ள கடக ராசியினர்  நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்க வேண்டும், இருப்பினும் சம்பள உயர்வுகள்  எதிர்பார்த்தபடி விரைவாக கிடைக்காது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும், உங்களின் கடின உழைப்புக்கு இறுதியில் அங்கீகாரம் கிடைக்கும்., உங்கள் சம்பளம் உங்கள் பங்களிப்புகளை பிரதிபலிக்கும் என்பதில் உறுதியாக இருங்கள்.

கல்வித் துறையில் பணிபுரிபவர்களுக்கு, வரவிருக்கும் காலம் பிரகாசமாகத் தெரிகிறது, நிர்வாகம் உங்கள் முயற்சிகளை அங்கீகரித்து வெகுமதிளை வழங்கலாம். உங்கள் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்கு கவனிக்கப்படும்.

மருத்துவர்கள் நோயாளிகளிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெறுவதை எதிர்பார்க்கலாம். இந்த அங்கீகாரம் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது உங்கள் மீதான நம்பிக்கையைக் குறிக்கிறது. மேலும் உங்கள் வேலையின் மீதான உங்கள் ஆர்வத்தை  தூண்டுகிறது.  ஊடகங்கள் மற்றும் சினிமா துறைகளில் ஈடுபட்டுள்ள கடக ராசியினருக்கு இது ஒரு அற்புதமான காலம்  ஆகும்.  திரைப்படத் துறை மற்றும் பிற ஊடகத் துறையினர்  முயற்சிகளில் கவனம் செலுத்தினாலும், வரவிருக்கும் காலம் கணிசமான வெற்றிகளையும் உங்கள் தொழில்முறை பாதையை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும். ஒட்டுமொத்தமாக, கடக ராசியினர்  பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் ஊக்கம் நிறைந்த ஒரு நேரத்தை எதிர்பார்க்கலாம்.

 உத்தியோகத்தில் சிறந்து விளங்க : அங்காரகன் ஹோமம்

 தொழில்

இந்த மாதம் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் சற்று தள்ளிப் போடுங்கள். ஏற்கனவே தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய  பெரிய முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில்  அல்லது கார்ப்பரேட் முடிவுகளில் மூன்றாம் தரப்பினரை  ஈடுபடுத்தக் கூடாது. இந்த மாதம் கூட்டாண்மை வணிகங்களில் இறங்குதல் கூடாது.

ஆரோக்கியம்

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அஜீரணக் கோளாறுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள  வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க தினமும் தியானம் மற்றும்  யோகா செய்யவும்.

உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள்

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அது மட்டும் அன்றி கல்வி சாரா நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் முயற்சிக்கான வெற்றியைப் பெறுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இளங்கலைப் படிக்கும்  மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கலாம். உங்களுக்கு ஆசிரியர் மற்றும் சக மாணவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிட்டும். ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறிது தாமதங்களை எதிர்கொண்டாலும் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனென்றால் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண சிறிது காலம் ஆகும்.

கல்வியில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை

 சுப தேதிகள்  : 1,2,7,13,15,16,17,19 ,24,23,24,25,26,27,29,31

அசுப தேதிகள் :  3,4, 5,6,8,9,10,11,12 ,14,18,20,21,22,28,30