கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிட்டும். நீங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து கவனம் கொள்வீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுடனான உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்காது. இந்த மாதம் லௌகீக இன்பங்களை அனுபவிப்பீர்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் சாதகமான பலன்களைக் காண முடியும். கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஒருசிலருக்குக் கிட்டும். குழந்தைகளின் நலனுக்காக குடும்பத்தில் வாக்குவாதங்களை மேற்கொள்வீர்கள். அவர்களிடம் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் சிரமங்களை சந்திப்பீர்கள். வீட்டிலும் சரி வெளியிலும் சரி உங்கள் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. உங்கள் தந்தை/ குரு மற்றும் வழிகாட்டிகளுடன் மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த மாத இறுதியில் குருவின் மூலம் ஆன்மீக ஞானம் பெறுவீர்கள்.
இளம் வயது கடக ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலர வாய்ப்பு உள்ளது. காதலர்கள் சில பிரச்சினைகளுக்கு இடையே தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்வார்கள்.உறவில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். குடும்பத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக கணவன் மனைவி இடையே அவ்வப்பொழுது வாக்குவாதங்களும் தவறான புரிந்துணர்வும் ஏறப்டலாம். என்றாலும் தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். குடும்ப பிரச்சினைகள் மாத இறுதியில் தீர்வுக்கு வரும். திருமணத்திற்குக் காத்திருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டு கொள்ளலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
இந்த மாதம் உங்கள் ஒட்டுமொத்த பொருளாதார நிலை ஓரளவு சீராக இருக்கும். இந்த மாதம் பண வரவில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். ஊக வணிகம் மூலமும் பணவரவு இருக்க வாய்ப்புள்ளது. முதலீடு மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் பண வரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பிள்ளைகளின் நலன் குறித்து செலவுகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குதல், வீடு மராமத்து போன்ற வகையில் செலவினங்கள் இருக்கும். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதில் சில பிரச்சினைகள் அல்லது தாமதங்களை சந்திக்க நேரலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அளிக்கவும் அதற்குண்டான செலவுகளை சமாளிக்கவும் நீங்கள் கடன் வாங்க நேரலாம். சிறு தூர பயணம் சார்ந்த செலவுகளும் கணிக்கப்படுகிறது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் குறித்த செலவுகள் இருக்கலாம். உத்தியோகம் சார்ந்த உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள கற்கும் வகையில் செலவு செய்ய உங்கள் சேமிப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட :பிருகஸ்பதி பூஜை
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். நீங்கள் உங்களுக்கு அளிக்கும் பணிகளை சிறப்பாக முடித்து அளிக்க அதிர்ஷ்டம் மற்றும் இறை அருள் கை கொடுக்கும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்பு உள்ளது. அவர்களை கையாள தொழில்முறை அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. நீங்கள் பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். இந்த மாத ஆரம்பத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பில்லை. சக பணியாளார்கள் காரணமாகவும் சில பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். என்றாலும் பெண் பணியாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்புள்ளது வழிகாட்டிகளின் ஆதரவு இந்த மாதம் உங்களுக்கு பணியிடத்தில் கிட்டும். உங்கள் புது கருத்துகள் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். போனஸ் வகையில் பண ஆதாயம் கிட்டும். இந்த மாதம் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அங்கீகாரம் மற்றும் இன்க்ரிமென்ட் கிட்டும்.
இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். ஒரு சிலர் தொழில் விரிவாக்கத்தையும் மேற்கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும் காரணத்தால் உங்கள் வருமானத்தில் திடீர் உயர்வு காணப்படும். கடன் சுமை குறையும். என்றாலும் விரிவாகத்திற்காக கடன் பெறுவீர்கள். தொழிலில் உங்கள் தலைமைப்பண்பு வெளிப்படும். புதிய தொழிலில் படிப்படியாக மேன்மை ஏற்படும். லாபமும் சிறிது சிறிதாக கூடும். கடந்த காலங்களில் இழந்ததை இந்த மாதம் பெறுவீர்கள். புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். கையில் பணப்புழக்கமும் மேம்படும்.
கடக ராசி தொழில் வல்லுனர்களின் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றி லாபம் காண்பீர்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெறுவீர்கள். என்றாலும் அவர்களுடனான தகவல் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பெண் பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழிலில் போட்டியாளர்கள் தற்காலிகமாக விலகுவார்கள். நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள். நிபுணர்களின் ஆலோசனை உங்களுக்கு நல்ல பயன் தரும். வழக்கு விவகாரங்கள் ஏதேனும் இருந்தால் இந்த மாதம் அதில் வெற்றி காண்பீர்கள். மருத்துவம், பொறியியல் மற்றும் கற்பித்தல் துறைகளில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் இந்த மாத இறுதியில் சாதகமான வளர்ச்சியைக் காணலாம். உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். என்றாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிட்ட தாமதம் ஆகலாம்.. இது உங்கள் மனதில் விரக்தியை ஏற்படுத்தலாம். மாத இறுதியில் இந்த நிலைமை சீராகும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற :அங்காரகன் பூஜை
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். என்றாலும் பயம் மற்றும் பதட்டம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். வயதைப் பொறுத்து நினைவாற்றல் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். மன உளைச்சல் குறையலாம். இருப்பினும், சிறுநீர் பாதை தொற்று மற்றும் கால்சியம் குறைபாடு தொடர்பான அசௌகரியங்கள் டிசம்பரில் காணப்படலாம். தாயின் உடல்நிலை மேம்படலாம், படிப்படியாக குணமடையலாம், ஆனால் தந்தையின் உடல்நிலை குறையலாம். மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தூக்கமின்மை பிரச்சினை இருக்கலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்கள் பாடங்களை நன்கு புரிந்து கொண்டு பரீட்சைகளில் அசாதாரணமாகச் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். மாணவர்களிடம் படைப்பாற்றல் திறன் வெளிப்படும். புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான சில யோசனைகள் இருக்கலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் குருக்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தங்கள் கருத்துக்களை எழுத்தில் வெளிப்படுத்துவதில் சில சிரமங்கள் இருக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்பின் நோக்கத்திற்காக வசதியான சூழலை அனுபவிக்க முடியும். கடக ராசிக்காரர்கள் முந்தைய மாதங்களை விட கல்வியில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகளைப் பெற இது ஒரு நல்ல நேரம், ஆனால் சில கடின முயற்சிகளுக்குப் பிறகு அது நிறைவேறக் கூடும்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப தேதிகள்: 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 22, 23, 24 & 25.
அசுப தேதிகள் : 1, 2, 3, 18, 19, 26, 27, 28, 29 & 30.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025