முத்தைப் போலவே இதுவும் கடலில் இயற்கையாக விளையும் இரத்தினம் ஆகும். சிலவகைப் பூச்சிகளின் எச்சமே பவளப் பாறையாக உருவாகிறது. நாம் பவளம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவளம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும். பவளத்திற்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர். இதன் இரசாயனக் குறியீடு CaCo3 or Ca3H48N9O11 இதன் கடினத் தன்மை 3 இதன் அடர்த்தி எண் 2.68 இதன் ஒளிவிலகல் எண் 1.49 – 1.66 ஆகும். இது செவ்வாய்க்கு உரியதாகும். இவை கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையை சேர்ந்தவை. இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.
பவளங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும். பவளத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவளம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும். இந்த கற்கள் பவளம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவளம் என்று எண்ணிவிடக்கூடாது. பவளத்திற்கு 6 குற்றங்கள் உண்டு. அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது. பவளம் கடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது.
பவளத்தை அணிந்தால் இரத்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது. செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவளக்கல்லை அணியலாம். பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது. கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவளக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். பவளம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும். சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
செவ்வாய் யாருடைய சாதகத்தில் சுபமாக உள்ளதோ அவர் அணியலாம். அசுப வீட்டில் செவ்வாய் இருந்தால் பவளம் அணிவது பவளம் எதிர்மறையான மற்றும் தீமையான பலன்களை அளிக்கும். செந்நிற கிரகமான செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும், எண் கணிதப்படி 9,18,27 ம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம்.7, 9, 11 ரத்திகள் எடையில் பவளம் அணிவது நன்மை தரும்.
மாற்றுக்கல்
பவளத்திற்கு மாற்றுக்கல்லாக கார்னெட் அணியலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025