Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய தானம் - AstroVed
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய தானம்

Posted DateJune 10, 2025

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அப்படி சிறப்பு வாய்ந்த புதன்கிழமை அன்று புதன் பகவானை வணங்குவதன் மூலம் உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க  புதன் கிழமை அன்று செய்ய வேண்டிய தானம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கல்வி கண் போன்றது என்று கூறுவார்கள். எனவே தான் நாம் கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம். சிறு வயதில் இருந்தே தம் பிள்ளைகளுக்கு கல்வி ஞானம் வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவது மரபு. இன்றளவிலும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால் எல்லா பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் ஆர்வம் ஒரே மாதிரி இருபதில்லை. சில குழந்தைகள் நன்றாக கல்வி பயிலும். சில குழந்தைகள் கல்வியில் மந்தமாக செயல்படலாம். ஒரு குழந்தை நன்கு கல்வி பயில பல காரணிகள் இருக்கின்றன.   குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் பள்ளி தொடங்கிய நாள் முதலில் இருந்தே அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். அவர்கள் நன்றாக படிக்கும் அளவிற்கு வீட்டுச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களது ஆர்வம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது நண்பர்கள் யார் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் முழு கவனமும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும். அவர்களிடம் அன்பு கலந்த கண்டிப்புடன் பழக வேண்டும். அதை விடுத்து சும்மா படி படி என்று கூறினால் மட்டும் போதாது.

ஒரு சில குழந்தைகள் இயற்கையிலேயே சிறப்பாக படிப்பார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட அக்கறை எதுவும் காட்ட வேண்டிய தேவை இருக்காது. ஒரு சில குழந்தைகள் நன்றாக படிக்கும்.ஆனால் அவர்களிடம் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே அவர்கள் மீது சிறிது அக்கறை காட்ட வேண்டியிருக்கும். ஒரு சில குழந்தைகள் படிப்பில் மந்தமாக சோம்பலாக இருக்கும். அவர்களை படிக்க வைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

ஜாதக ரீதியாக ஒரு குழந்தையின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் தான் அந்தக் குழந்தையின்  கல்வி சிறப்பாக அமையும். கேதுவும் புதனும் தொடர்பு கொண்டால் அவர்களின் படிப்பில் தடைகள் இருக்கும்.   பரம்பரை ரீதியாக கண்டால் முன்னோர்கள் படிப்பாளியாக இருந்தால் அவர்களைப் போல இவர்களும் படிப்பில் சிறந்து விளங்கலாம். அல்லது ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தால் இவர்களும் அவர்களைப் போல ஆர்வம் இல்லமால் இருக்கலாம்.

இன்றைய தினம்  ஜூன் மாதம் 11ஆம் தேதி, புதன்கிழமை. மேலும் இன்றைய நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம். இது புதன் பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. புதனுக்கு உரிய தானியம் பச்சைப் பயறு. இன்று நீங்கள் பச்சைப் பயறை உபயோகித்து சுண்டல் செய்து வீட்டிற்கு அருகில் இருக்கும் நவக்கிரக கோவிலுக்கு எடுத்துச் சென்று உங்கள் குழந்தையின் பெயரில் அரச்சனை செய்து புதன் பகவானுக்கு படைத்து பிறகு அதனை பிறருக்கு தானமாக அளியுங்கள். அதன் மூலம் புத பகவானின் அருள் உங்கள் குழந்தைக்கு கிட்டும்.  உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். இதனை நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமையும் செய்யலாம். அல்லது மாதம் ஒரு புதன் கிழமை செய்யலாம்.