திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்ற புனித ஸ்தலமாகும். இங்கு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது பாரம்பரியமாக உள்ளது. பௌர்ணமி இரவில் சுமார் 14 கி.மீ நீளமான அருணாசல மலையை சுற்றி நடந்து சிதம்பர ரகசியத்தை உணர்த்தும் அருணாசல சிவனை தரிசிப்பதே கிரிவலத்தின் சிறப்பு.
ஆனால் சில ஆண்டுகளில் பௌர்ணமி நாளே சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 2025-இலும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு உள்ளது. அப்போது, பலருக்கும் எழும் கேள்வி – “சந்திர கிரகணம் இருக்கும் பௌர்ணமியில் கிரிவலம் செல்லலாமா? அல்லது கூடாதா?” இந்த கேள்விக்கு பதில் காண, முதலில் கிரகணத்தின் ஆன்மீக முக்கியத்துவம், சாஸ்திரக் கருத்துக்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவற்றை புரிந்துகொள்வது அவசியம்.
சாஸ்திரம் மற்றும் கிரகணம்
பழமையான இந்து சாஸ்திரங்களின் படி, கிரகணம் என்பது சூரியன் அல்லது சந்திரன் தற்காலிகமாக இருண்டு காணப்படும் வானியல் நிகழ்வு மட்டுமல்ல; அதற்கு ஆழ்ந்த ஆன்மீக, ஜோதிட முக்கியத்துவம் உண்டு. ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகணங்களின் போது ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குவதாகக் கூறப்படுகிறது. அதாவது, ராகு மற்றும் கேது ஆகிய “நிழல் கிரகங்கள்” சூரியன், சந்திரன் போன்ற ஒளி கிரகங்களின் ஆற்றலை மறைக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வில், ராகு அல்லது கேதுவுடன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது முழு நிலவு சந்திரன் மங்கலாகி, சில சமயங்களில் சிவப்பு நிறத்தில் தோன்றும். கிரகண காலம் அசுபமான நேரமாக கருதப்படுகிறது:
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
கிரகண நேரத்தில் மந்திர ஜபம், தியானம் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டும். சுத்தமான இடத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். கிரகண நேரத்திற்கு முன்னும் பின்னும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தர்ப்பணம் மேற்கொள்ள வேண்டும்.
கிரகணத்தின் போது தவிர்க்க வேண்டியவை:
கிரகணம் காரணமாக, கிரகண நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பே கோயில் வாசல்கள் பொதுவாக மூடப்படும். மற்றும் பூஜை, ஹோமம் போன்ற சடங்குகள் நிறுத்தப்படும். மேலும் அந்த நேரத்தில் யாத்திரைகள் அல்லது பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கிரகண நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் கிரகணம் பிடிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னாலே உணவு தவிர்க்கப் பட வேண்டும்.
2025-இல் சந்திர கிரகணம் எப்போது?
இந்த ஆண்டின் இரண்டாவதும், கடைசியுமான சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இது மார்ச் மாதம் நடந்த சந்திர கிரகணம் போல் இல்லாமல் முழுமையான சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 09.56 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணிக்கு துவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி நாளில் தான் நிகழும். இந்த முறை ஆவணி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது பவுர்ணமி தினத்திலேயே வருகிறது என்பதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இது தொடர்பான சந்தேகம் ஏற்படுகிறது.
பௌர்ணமியில் கிரிவலம் செல்வதன் ஆன்மீக அர்த்தம்
பௌர்ணமி இரவு சிவபெருமானுக்குப் பிரத்யேகமான இரவாக கருதப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலையில் பௌர்ணமி இரவு கிரிவலம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தருவதாக நம்பப்படுகிறது. ஏனெனில் பௌர்ணமி நாளில் நிலா பூரணமாக இருப்பதால், சோம சக்தி அதிகரிக்கும்.அது அருணாசல மலை சிவனின் தேஜஸின் பிரதிபலிப்பு எனக் கருதப்படுகிறது. இந்த இரவில் கிரிவலம் செய்வது கவலைகளை குறைத்து, மன அமைதியை அளிக்கும்.இதனால் பக்தர்கள் எந்த விதத்திலும் பவுர்ணமி கிரிவலத்தை தவற விட விரும்புவதில்லை.
கிரகணத்துடன் கூடிய பௌர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?
கிரகண நேரத்தில் கிரிவலம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல பண்டிதர்கள் வலியுறுத்துகிறார்கள். காரணம். அந்நேரம் ‘அசுத்த காலம்’ என கருதப்படுகிறது.கோவில்கள் மூடப்பட்டிருக்கும். கிரகணத்தின் போது ஆன்மிக ஆற்றல் மாற்றமடைகிறது. கிரகண நேரத்திற்கு முன் அல்லது பின் கிரிவலம் செய்யலாம். கிரகணம் தொடங்கும் முன்னர் (மாலை 8 மணிக்குள்) கிரிவலம் முடித்துவிடலாம்.அல்லது கிரகணம் முடிந்த பின் (அதிகாலை 3 மணி பிறகு) கிரிவலம் தொடங்கலாம். பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்வது ஒரு அபார புண்ணிய செயல். ஆனால் அந்த பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் இருந்தால், கிரகண நேரத்தில் கிரிவலம் செல்லாமல், சாஸ்திரத்தையும் நடைமுறையையும் இணைத்து நடப்பது சிறந்தது. ஆன்மீகப் பார்வையில், கிரகண நேரத்தில் வெளிப்புற யாத்திரையை விட, உள்ளார்ந்த தியானம், ஜபம், தத்துவ சிந்தனை அதிக புண்ணியத்தை அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரகண நேரத்தில் மந்திர ஜபம் செய்வது மிகச் சிறந்தது.
சந்திர கிரகண சாந்தி பரிகாரம்
நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோவேதில் 4-புரோகிதர்கள் மூலம் நடத்தப்படும் சந்திர கிரக சாந்தி ஹோமம், தனிப்பட்ட சந்திர ஹோமம் மற்றும் நவகிரக பூஜை போன்றவை ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி நடத்தப்பட உள்ளது. எங்களின் ஹோமங்கள் மற்றும் பூஜையில் பங்கு கொண்டு சந்திர கிரக சாந்தி மற்றும் தோஷ நிவர்த்தி பெறுங்கள்.
சந்திர கிரகணம் குறித்த எங்களின் சேவை பற்றி அறிந்து கொள்ளவும் பங்கு கொள்ளவும் கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025