ஆடி மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்று கூறலாம். ஆடி மாதத்தில் பல சிறப்பான நாட்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக வருவது தான் ஆடிக்கிருத்திகை ஆகும். ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாள் ஆடிக் கிருத்திகை என்று கூறப்படும். இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். எனவே இந்த நாள் புனிதமான நாளாகவும் முருகனை போற்றக் கூடிய நாளாகவும் கருதப்படுகிறது.
முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் ஆவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகள், கங்கையில் உள்ள ஆறு தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். எனவே, அவர்கள் முருகனின் வளர்ப்புத் தாய்மார்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த நாள் முருகப் பெருமான் அவதரித்த நாளாகவும், கார்த்திகை பெண்களால் பாலூட்டி வளர்க்கப்பட்ட நாளாகவும் கருதப்படுகிறது.
ஆடிக் கிருத்திகை அன்று குன்று தோறும் குடியிருக்கும் முருகப் பெருமானை தவறாமல் வணங்க வேண்டும். முதல் நாளே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறை மற்றும் பூஜை சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்ள வேண்டும். முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்ற வேண்டும். புதிதான பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும். விரதத்தைக் காலையில் தொடங்கி அன்றைய நாள் முழுவதும் ‘ஓம் முருகா ஓம்’ அல்லது ‘ஓம் சரவணபவ ஓம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 6 மணிக்குப் பூஜை அறையில் ஆறு மண் அகல் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.நட்சத்திர கோலம் போட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துகளை எழுதி அந்த நட்சத்திரக் கோலத்தைச் சுற்றி மண் அகல் தீபத்தை வைத்து, முருகப்பெருமானை வழிபடுவதும் நல்லது.
ஆடிக் கார்த்திகை என்பது ஆடித் திங்கள் கார்த்திகை நாளில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவாகும். ஆடிக் கார்த்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கிருத்திகை நாள் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். குறிப்பாக அறுபடை வீடுகளில் இவ்விழா திருவிழாகவே கொண்டாடப்படும். பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும். அறுபடை வீடுகளுள் திருத்தணி முருகன் கோவில் மிகவும் விசேஷம் ஆகும். ஆடிக் கிருத்திகை அன்று இங்கு காவடி எடுப்பது, அலகு குத்துதல், முடிகாணிக்கை தருதல் என நேர்த்திக் கடன் செலுத்த உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். தமிழ் நாட்டில் மட்டும் இன்றி மலேசியா இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இந்த நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடும் ஒரு சிறப்பு நாள். இது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், திருமணத்தடை நீங்கும், ஆடி கிருத்திகை அன்று விரதம் இருப்பது செல்வ செழிப்பு, ஞானம், தைரியம் மற்றும் வெற்றியைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாடு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகளைக் குறைக்கும். வாழ்க்கையில் உள்ள எதிர்மறை கூறுகளை அழிக்கும். தடைகளை நீக்கி, முழுமையான வெற்றியை வழங்கும்.கடன்களையும் நோய்களையும் குறைக்கவும்
∙ முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
∙ முருகனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்வது சிறப்பு.
∙ விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறந்தது.
∙ வீட்டில் முருகனை வேண்டி சர்க்கரைப் பொங்கல், பால், பழங்கள் போன்றவற்றை நிவேதனமாக படைக்கலாம்.
∙ சிவப்பு நிற மலர்களால் முருகனை அலங்கரிப்பது மிகவும் நல்லது.
∙ கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
ஆடி கிருத்திகை அன்று செய்யக் கூடாதவை:
∙ விரதம் இருப்பவர்கள், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
∙ பொதுவாக, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்கலாம்.
∙ அதிகமாக பேசாமல், அமைதியாக முருகனை தியானிக்க வேண்டும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025