இது பூனையின் கண் மாதிரி அமைப்புள்ள இரத்தினமாகும். இது சாம்பல் நிறம், மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இதன் மேற்பரப்பில் ஒளிக்கோடானது பிரகாசிக்கும். இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்ஐ என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. இதில் தெரியும் வெண்ணிறக் கொடு கல்லின் உள்ளே அமைந்துள்ள மிக மெலிதான் ஆழமற்ற சிறுகுழாய் போன்ற வடிவங்களால் ஏற்படுவது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.இது கிரிஸ்ஸோபெரில் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் ரசாயன பார்முலா BeAl2O4 இதன் கடினத்தன்மை 8 இதன் அடர்த்தி எண் 3.71 இதன் ஒளிவிலகல் எண் 1.74-1.7.5. இது கேதுவின் தன்மைகளைப் பெற்றிருக்கும் இரத்தினமாகும். வைடூரியமானது மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததாகும். வைடூரியம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால், இதனை பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (Tiger Eye) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (Bulls Eye) என்றும் அழைக்கின்றனர்.
வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது. வைடூரியக் கல்லை அணிவதால் மிகுந்த செல்வம், செல்வாக்கு உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாம். இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்கள் வராது. மன நிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இது கேதுவிற்கு உரிய கல் ஆகும். வைடூரியக் கல்லைத் தங்கத்தில் பதித்து ஆள் காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்த கொள்வது நல்லது. வைடூரியக் கல்லை கால சர்பயோகம் உடையவர்களும், கேது திசை நடப்பில் உள்ளோரும், 7,16,25 ஆகிய எண்களில் பிறந்தோரும் அணிவது உத்தமம். அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரக்காரர்களும் அணியலாம். 3,5 அல்லது 7 ரத்திகள் எடை உள்ளதை அணியலாம்.
வைடூரியம் அணிவதன் பலன்கள்:
வைடூரியம் அணிவதால் சளி, கபம் போன்ற பிரச்சனைகள் விலகும். உடல் அழகாகும். கேன்சர் எனப்படும் புற்றுநோயை வைடூரியக் கற்கள் மூலம் குணப்படுத்தலாம். பக்கவாதம், பராலிசஸ் போன்ற நோய்களை படிப்படியாகத் தீர்க்கும். புள்ளிகள், பள்ளங்கள், மங்கலான நிறங்கள் உடைய வைடூரியங்கள் தீமையான பலன்களை அடைய நேரிடும். எனவே வைடூரியத்தை நன்கு பரிசோதித்து அணிவது உத்ததமம்.
ஒப்பல், வைடூரியத்திற்கு மாற்றுக் கல்லாக ஒப்பல் என்ற கல்லை அணியலாம். ஒப்பல் கற்கள் ஏழு எண்காரர்களுக்கு மிகவும் உகந்ததாகும். இது பல வண்ணங்களில் கிடைத்தாலும் வெண்மை நிறம் கொண்ட கல்லே சிறந்ததாகும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025