Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஆந்தையைப் பார்த்தால் என்ன ஆகும்?- ஆபத்து ஏற்படுமா, திடீர் பண வரவு கிடைக்குமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆந்தையைப் பார்த்தால் என்ன ஆகும்?- ஆபத்து ஏற்படுமா, திடீர் பண வரவு கிடைக்குமா?

Posted DateOctober 4, 2024

பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்து சகுனம் பார்க்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தப்  பதிவில் ஆந்தை பற்றிய சகுனங்களைப் பற்றிக் காண்போம்.

ஆந்தையின் சிறப்பு

இது இரவுப் பறவை ஆகும். இரவில் தான் இதற்கு கண் தெரியும் என்பார்கள். இரை தேடி இந்தப் பறவை இரவில் தான் வெளியில் வரும். பொதுவாக இது மனிதர்கள்  இருக்கும் பகுதிகளில் அதிகம் காணப்படாது. ஆந்தை மகாலட்சுமியின் வாகனமாக கருதப்படுகிறது. ஆந்தையைப் பார்த்தால் என்ன பலன் அதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பதைக் காணலாம் வாருங்கள.

கிழக்கு இந்தியாவில், ஆந்தைகள் செல்வம், செழிப்பு, ஞானம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையவை, ஏனெனில் அவை லட்சுமி தெய்வத்தின் வாகனம். இருப்பினும், ஆந்தைகள் இந்து மதத்தில் தீய காலங்கள் மற்றும் மரணத்துடன் தொடர்புடையவை.சகுன சாஸ்திரப்படி பல இடங்களில் சுபமானதாகவும், பல இடங்களில் அசுப பலனைத் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது.

ஆன்மீக ரீதியாக ஆந்தை

ஆந்தை நம் உள்ளுணர்வைத் தூண்டுகிறது. அதன் மூலம் உண்மையான ஞானம் பெறலாம். ஆன்மீக ரீதியாக அது அறியப்படாதவற்றை ஆராயவும், மாற்றவும், மற்றும் வாழ்க்கையின் மர்மத்தை அனுபவிக்கவும் தேவையான உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இது பெரும்பாலும் புத்திசாலித்தனமாக இருப்பதற்கான அடையாளமாகவும் எச்சரிக்கை அறிகுறியாகவும் கருதப்படுகிறது. மக்கள் ஆந்தையை மதிக்கிறார்கள், ஏனென்றால் அது செல்வத்தைத் தரும் தெய்வமான லட்சுமியுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஆந்தையைப் பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாகும், வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டம் பற்றிய எண்ணங்களைக் கொண்டுவரும்.

ஆந்தையைப் பார்த்தால் என்ன ஆகும்?- ஆபத்து ஏற்படுமா, திடீர் பண வரவு கிடைக்குமா?

எந்த நேரத்தில் எந்த நிற ஆந்தையைப் பார்த்தால் சுப மற்றும் அசுப பலன்

வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. வெள்ளை ஆந்தைகள் அரிதாகவே காணப்பட்டாலும், அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதனால் உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகள் முடிவடையும். உங்கள் வாழ்க்கையில் பிரச்னை நிறைந்ததாக இருந்தால், வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பதால் சில நேர்மறை ஆற்றலைப் பெறலாம். இது உங்கள் மூதாதையர்கள் தொடர்புடையதாகப் பார்க்கப்படுவதால் பயப்படத் தேவையில்லை.

 ஆந்தை குறித்த சகுனங்கள்

நீங்கள் ஒரு பயணம் மேற்கொள்ளும் போது, போகும் வழியில் ஆந்தையைப் பார்த்தால், பணம் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.

ஆந்தை வீட்டிற்கு வந்தால், அது தீங்கு விளைவிக்கும் என்றும், வீட்டின் முன்னேற்றத்தை நிறுத்துவதாக இருக்கும் என கருதப்படுகிறது.

வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.

கடன் தொகையை வசூலிக்கச் செல்லும் போது ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால், அப்போது மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்கள் கடன் தொகை வசூலிப்பீர்கள். உங்கள் செயலில் வெற்றி ஏற்படும்.

உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய வழி கிடைக்கும். விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.

இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும்

 பகலில் ஆந்தையைப் பார்த்தல்

நீங்கள் பகலில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அது அதிர்ஷ்டம் தருவதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக தயாராக உள்ளது என்று அர்த்தம். மேலும், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கப் போகிறது மற்றும் விரைவில் நல்ல செய்தி தேடி வரும். பகல் நேரத்தில், வேலை நேரத்தில் ஒரு ஆந்தை பறந்து செல்வது பார்த்தால், உங்களுக்கு எந்த முடிவும் சரியானதாகவும், எங்கு தவறு செய்கிறீர்கள், நடக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

 இரவில் ஆந்தையைப் பார்த்தல்

இரவு நேரத்தில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் பல வகையில் நன்மையைத் தரும் என கருதப்படுகிறது. அனைத்து பிரச்சினைகளிலிருந்து உங்களை மீட்கு. தொழில் முன்னேற்றம் ஏற்படும். இரவு நேரத்தில் ஆந்தையின் அலறல் குரல் கேட்டால் உங்கள் துறையில் நன்மையும், வெற்றியும் பெறுவீர்கள். பல புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள்.

 ஆந்தை, கூகை, கோட்டான் பற்றிய பழமொழிகள்:

ஆந்தை அலறல் கெட்ட சகுனம்

ஆந்தைக் காதலை பொய்க்காது

ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது

ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்

கூகைக்குப் பகலில் கண் தெரியாது

கூகை விழித்தாற் போல விழிக்கிறான்

கோட்டானை மடியிற் கட்டிக் கொண்டதுபோல

 பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்.

 ஆந்தைதைய எந்த திசையில் பார்த்தால் நல்லது

 ஆந்தை தென்மேற்கு திசையிலிருந்து ஒலி எழுப்புவதைக் கேட்டால் அல்லது பார்த்தால் உங்களின் நிதி நெருக்கடி தீரும்.

அதுவே ஆந்தையின் அலறல் கிழக்கு திசையிலிருந்து கேட்டால் அல்லது ஆந்தையை கிழக்கு திசையில் பார்த்தால் அது உங்கள் பொருளாதார ரீதியான நன்மைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

தெற்கிலிருந்து ஆந்தையின் அலறல் கேட்க நேர்ந்தால் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள் என்று அர்த்தம்.

 கனவில் ஆந்தை

யாராவது தங்கள் கனவில் ஆந்தையைக் கண்டால், ஆழ்ந்து சிந்தித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது ஒரு வலுவான செய்தி. இந்த வகையான அனுபவம் ஒரு நபரை விஷயங்களில் உண்மையான அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது, . இந்து மதத்தில் ஆந்தை என்பது பணத்தையும் பொருட்களையும் விட ஞானத்தை மதிக்க மக்களை ஊக்குவிக்கும் ஒரு சின்னமாகும்.

உங்கள் கனவில் தொடர்ந்து நீங்கள்  ஆந்தையைப் பார்ப்பது என்பது நீங்கள் சில பெரிய மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள் அல்லது கொஞ்சம் ஞானத்தைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

அதே நேரத்தில், அதிகாலை  கனவுகளில் ஆந்தையைக் கண்டால் உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அர்த்தம். அதே சமயத்தில், உங்களில் அறிவு அதிகரிக்கும் உங்கள் சொந்த திறன் அதிகரிக்கும்.