Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Mithunam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024 | August Matha Mithunam Rasi Palan 2024

Posted DateJuly 26, 2024

மிதுனம் ஆகஸ்ட் 2024 பொதுப்பலன்கள்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் குடும்ப உறவுகள் சம்பந்தமாக அதிர்ஷ்டத்தில் மாற்றம் இருக்கலாம் மற்றும் எதிர்பாராத பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்படலாம். நன்மை தரும் கிரகங்களின்  தாக்கம் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை உறுப்பினர்களிடையே கையாள சமநிலையை அளிக்கும். வருமானம் செழிப்புக்கு ஆதரவாக  இருக்கலாம். நீங்கள்  சில உடல்நலப் பிரச்சினைகளையும் சந்திகலாம்.  இந்த மாதம் வெளியூர் பயணம் அல்லது நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். மிதுன ராசிக்காரர்களின் பிள்ளைகளும் இந்த மாத இறுதியில் சில எதிர்பாராத வீழ்ச்சிகளைக் காண்பார்கள். தாய்க்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம், ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக நாட்டம் காட்டலாம். குறிப்பாக இந்த மாதத்தில் குடும்ப வாழ்க்கையில் தவறான கருத்து வேறுபாடுகள் காரணமாக சர்ச்சைகள் ஏற்படலாம். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்க இது ஒரு நல்ல நேரம். புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். தந்தையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரலாம்.

காதல் / குடும்ப உறவு :

மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களில் வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு தவறான புரிதல்கள் காணப்படலாம்.  திருமண வாழ்க்கையில் மிதமான மகிழ்ச்சி இருக்கலாம்.  காதல் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் இந்த மாத இறுதியில் ஆர்வம் குறையலாம்.  உங்கள் துணையின் ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரும்.  முந்தைய பிரச்சினைகள் மற்றும் தவறான புரிதல்கள் தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் வாதங்களுக்கு வழிவகுக்கும். உறவு விஷயங்களில் கோபம் மற்றும் பதற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்களின்  மன அழுத்த நிலை அதிகரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம்.  குடும்பச் சூழலில் நிம்மதி குறையும். இந்த மாதம் தாம்பத்திய சுகம் அதிகரிக்கலாம். காதலில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் நல்ல முன்னேற்றம் மற்றும் துணைவரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறலாம். என்றாலும் சிந்தனையில் ஒத்திசைவு குறைவாக இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  :அங்காரகன் பூஜை

நிதிநிலை :

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த நிதி செழிப்பு நன்றாக இருக்கும். வருமானத்தை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகள் உருவாகலாம். ரியல் எஸ்டேட் விஷயங்களில் முதலீடு செய்யலாம்.   மருத்துவ  செலவுகள் இருக்கலாம்.  உடன்பிறந்தவர்கள் மற்றும் பங்குதாரர் / மனைவியின் நலனுக்காகவும் செலவுகளைச் செய்யக்கூடும். இந்த மாதத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டு பணத்தை  பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாம்.  மிதுன ராசிக்காரர்களின் அர்ப்பணிப்பு முயற்சியால் வருமானமும் பெருகும். இது நல்ல நிதி ஆதாயங்களையும் சேமிப்பையும் குவிக்க உதவும். தந்தை மற்றும் உறவினர்கள் மூலமாகவும் ஆதாயம் உண்டாகும். செலவுகளை  நிர்வகிப்பது இந்த மாதத்தில் சவாலான விஷயமாக இருக்கலாம். பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் ஊகங்கள் மிதமான அளவு லாபம் / ஆதாயங்களைக் கொண்டு வரும். மனைவி மற்றும் உடன்பிறந்தோருக்கான உடல்நலச் செலவுகளும்  ஏற்படக்கூடும்.

உங்கள் நிதிநிலை மேம்பட  : அங்காரகன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதத்தில் வேலையை இழக்க நேரிடும் என்ற அச்சத்துடன் கடுமையான மன அழுத்தம் இருக்கும் உத்தியோகம்  குறித்த  கவலை ஏற்படும். சவால்கள் காத்திருக்கும். வேலை/பதவியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது நல்ல மாதம் அல்ல.  கடின உழைப்பின் காரணமாக பண வரவு மற்றும் நேர்மறையான வளர்ச்சியைக் காணலாம். சந்தையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் இருக்கலாம். இந்த மாதம் உத்தியோக வாய்ப்புகளில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம். உங்களை நம்பி பணியிடத்தில் அதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். இருப்பினும், போதுமான அங்கீகாரம் கிடைக்காது. எனவே, இக்கட்டான நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். பணிச்சுமையும் அதிகரிக்கலாம். மிதுன ராசிக்காரர்கள் தொழில் விஷயங்களில் கருத்துப் பரிமாற்றத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் கவனமான நடவடிக்கைகளுடன் இந்த காலகட்டத்தில் பயணம் செய்வது நல்லது. இந்த மாதம் தொழில் சம்பந்தமான பயணங்கள் அதிகமாக இருக்கலாம். சில சமயங்களில், தொழில்/பணியிடத்தில் அர்ப்பணிப்புடன் எடுக்கும் முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும்.

தொழில் :

மிதுன ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் தொழில்கள் இந்த மாதத்தில் சுமாரான பலன்களைக் காணக்கூடும். துணிச்சலான முயற்சியால், வியாபாரம் சந்தையில் விரிவடையும்.  வாடிக்கையாளர்கள் மூலம் வரும் வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் லாபம் குறைவாக  கிடைக்கும். இந்த மாத இறுதியில்  முதலீடுகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களுடன் புதிய தொடர்புகள் இருக்கலாம், அவை நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். தொழிலுக்கு  அதிக பணப்புழக்கம் தேவைப்படுவதால் வணிகத்தில் கடன் சுமை அதிகரிக்கலாம்.  எதிர்காலத்தில் வணிகம் செழிக்க இந்த மாதம்  ஒரு தளமாக / அடித்தளமாக செயல்படும். மாதத்தின் முதல் பாதியில் அரசு மற்றும் அதன் அதிகாரிகளிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். மேற்பார்வையும் தலைமைத்துவமும் அதிகமாக உணரப்படும். சில சந்தர்ப்பங்களில், பங்குதாரர்,  இழப்புகளுக்கும் ஒரு காரணியாக இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற  : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனைவி மற்றும் தாயாரின் ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படும், தீவிர கவனம் தேவை.  இந்த மாதத்தில் தூக்கம் தொடர்பான சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். முக்கியமான விஷயங்களில் ஞாபகமறதி இருக்கலாம்.  ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் மற்றும் மருத்துவமனை தொடர்பான செலவுகள் உயரும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட  : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

மிதுன ராசி மாணவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்வதில் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களாகவும்  வித்தியாசமாகச் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். இதுவரை கற்றுக்கொண்டதை சுயபரிசோதனை செய்து, கல்வியின் ஏணியில் தங்கள் சொந்த நிலைப்பாட்டை மதிப்பிடுவதற்கு இது ஒரு சிறந்த மாதம். மிதுன ராசி மாணவர்களுக்கு படிப்பில் தடைகள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிநாடுகளிலும் பிற புகழ்பெற்ற நிறுவனங்களிலும் உயர்கல்வியைத் தொடர விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் சில போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.

கல்வியில் சிறந்து விளங்க  : விஷ்ணு பூஜை

சுப தேதிகள் : 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 22, 23, 24 & 25.

அசுப தேதிகள் : 1, 2, 17, 18, 19, 26, 27, 28, 29 & 30.