Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சகல விதமான அதிர்ஷ்டமும் வசியமாக பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சகல விதமான அதிர்ஷ்டமும் வசியமாக பரிகாரம்

Posted DateJuly 27, 2024

மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வாழத் தான் விரும்புவோம்.நல்ல பெயர் புகழ் மரியாதை என வலம் வரும் விருப்பம் அனைவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அனைவருக்கும் இந்த அந்தஸ்து கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பணம் அமைகிறது என்று கூறினால் மிகை ஆகாது. ஆனால் அது மட்டும் போதாது. நல்ல பதவி, கல்வி முக்கியமாக அதிர்ஷ்டமும் இதற்கு காரணமாக அமைகிறது. இந்த அதிர்ஷ்டத்தை எவ்வாறு அடைவது. அதிர்ஷ்டம் மூலம் எப்படி சமூகத்தில் மதிப்பும் அங்கீகாரமும் பெறுவது?நமக்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.நமது பேச்சிற்கு மதிப்பில்லை. நமக்கு யாரும் கட்டுப்படுவதில்லை என யாரெல்லாம் வருத்தப் படுகிறீர்களோ அவர்களுக்கான பதிவு இது. அதிர்ஷ்டமும் வசியமும் பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பரிகாரத்திற்கு  ஆல மர விழுது ஒன்றை  எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் விரல் அளவில் இருந்தால் போதுமானது. புது மஞ்சள் கயிறு ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது மஞ்சள் நூலாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் புதியதாக இருக்க வேண்டும். அதனை விழுதில் சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து  அதற்கு மஞ்சள் குங்குமம் சாற்றுங்கள். பின் கீழ்கண்ட மந்திரத்தை 108 முறை கூறுங்கள்.

“ஓம் ரீம் வசி வசி சகலரும் வசி சர்வமும் வசி”

பிறகு ஒரு சதுரமான சிகப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் புதியதாக இருக்க வேண்டும். அதன் மேல் இதனை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இதனை உங்கள் கைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதனை எடுத்து இந்த மந்திரத்தை கூறி மறுபடி வைத்துக் கொள்ளுங்கள். ஆண் பெண் இருபாலரும் இதனை செய்யலாம். பெண்கள் மாத விலக்கு காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் இதனை வைத்துக் கொள்ளலாம்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறி வர ஒவ்வொன்றும் படிப்படியாக உங்கள் வசப்படும்.  பிற மனிதர்கள் உங்களை மதித்துப் பேசுவார்கள். உங்களிடம் கருத்து கேட்பார்கள்.சமூகத்தில் உங்களுக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிட்டும். பணத்தைக் கூட உங்களால் ஈர்க்க முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள்.