நமது அன்றாட வாழ்வில் நாம் பலவற்றை அடைய நினைக்கிறோம். வாழ்வின் பல அம்சங்களில் பல தேவைகள் நமக்கு இருக்கின்றன. நமது தேவைகளுக்கு முடிவே இருப்பதில்லை. அவற்றை அடைவதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். நமது முயற்சிகள் இருந்தாலும் இறை அருளும் இருந்தால் தான் நம்மால் இயன்றவற்றை நாம் செய்ய இயலும். நாம் நினைத்ததை அடைய முடியும்.
இந்தப் பதிவில் நாம் காணவிருப்பது அஸ்வத் நாராயண வழிபாடு. நாராயணன் என்றால் பரம்பொருள் என்பது அர்த்தம். அந்த பரம்பொருள் மூன்று முகங்களாக வெளிப்படுகிறான். பிரம்மா (படைப்பு), விஷ்ணு (பாதுகாப்பு), சிவன் (அழிவு). எனவே நாராயணன் மூன்றின் மூலமும் ஆதாரமுமாக விளங்குகின்றார். அஸ்வத் (அஸ்வத்தா) என்பது ஆலமரத்தைக் குறிக்கும். நாராயணர் என்பது விஷ்ணுவின் பெயர். எனவே, அஸ்வத் நாராயணர் என்றால் “ஆலமரத்தின் வடிவில் இருப்பவன் நாராயணன்” என்று பொருள். சில வேத மந்திரங்களில், பரமாத்மா அஸ்வத்த மரமாகவும் இருக்கிறான் என்று குறிப்பிடப்படுகிறது.
கீதையில் (அத்தியாயம் 15) பகவான் சொல்வது:“உர்த்தமூலம் அவாக்ஷாகம் அஸ்வத்தம் பிராஹ்மணம்…”
அதாவது பரமபிரம்மன் அஸ்வத் மரத்தின் வடிவில் உலகத்தில் இருக்கிறான். சாஸ்திரங்களில் அஸ்வத் மரத்தின் கீழ் நாராயணனை வணங்குவது மிகப் புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் நினைத்ததை இறை அருளுடன் அடைவதற்கான ஒரு பரிகாரம் அல்லது எளிய வழிபாட்டைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை மிகச் சிறந்தது.மேலும் பௌர்ணமி அல்லது ஏகாதசி நாளில் செய்தால் அதிக பலன்கள் கிட்டும். காலையில் சூரிய உதயத்திற்கு பின் செய்வது நல்லது. காலையில் சுபமுகூர்த்தத்தில் குளித்து, சுத்தமான உடை அணியவும். உங்கள் வீட்டிற்கு அருகாமை ஆலயத்தில் இருக்கும். ஆலமரத்தின் அடியில் சுத்தம் செய்து, கோலம் போடவும். சங்கல்பம் (விரத நோக்கம் கூறுதல்) செய்து கொள்ளவும். மம ஸகல பாப நிவிர்த்தி, ஸமஸ்த மங்கள ஸம்ருத்த்யர்த்தம்,அஸ்வத் நாராயண ப்ரீத்யர்த்தம், அஸ்வத் நாராயண விரதம் கரிஷ்யே. அர்த்தம்: எனது பாவங்கள் நீங்கி, எல்லா நல்லது கிட்ட, அஸ்வத் நாராயணரின் அனுக்ரஹத்திற்காக இந்த விரதத்தை செய்கிறேன். ஆலமரத்திற்கு நீர் ஊற்றவும், 7 பிரதக்ஷிணை செய்யவும்.துளசி மாலை சமர்ப்பிக்கவும்.நெய் தீபம் ஏற்றி, பால், பழம், பாயசம், துளசி இலை வைத்து நிவேதனம் செய்யவும். நாராயணனின் நாமங்களைப் பாடி ஆரத்தி காட்ட வேண்டும்.ஓம் நமோ நாராயணாய – என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இதனை பிரதி வியாழன் அல்லது சனி அல்லது பௌர்ணமி, ஏகாதசி நாளில் தொடர்ந்து செய்து வர உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில்செய்யக் கூடிய எளிய பரிகாரம் பற்றிக் காணலாம். மேலே கூறியது போல ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அன்று மாலை 6:00 மணிக்கு முன்பாக அரச மர இலை ஒன்றை பறித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த அரச இலையை பன்னீரால் சுத்தம் செய்து அதன் நான்கு புறங்களிலும் சந்தனம் குங்குமத்தை வைத்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைக்க வேண்டும். அந்த தாம்பாள தட்டிற்கும் சந்தனம் குங்குமம் வைத்திருக்க வேண்டும். இலையின் நரம்பிற்கு வலது புறமாக மஞ்சளையும் இடது புறமாக குங்குமத்தையும் வைக்க வேண்டும். இவ்வாறு மஞ்சள் குங்குமத்தை அந்த இலையில் வைக்கும் பொழுது நமக்கு எது அத்தியாவசியமாக நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டு வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்துவிட்டு அஸ்வத் நாராயணரின் மந்திரத்தை கூற செய்ய வேண்டும். அந்த இலை காயும் வரை அப்படியே இருக்கட்டும் தினமும் இந்த இலையில் இருக்கக்கூடிய மஞ்சள் மற்றும் குங்குமத்தை நம்முடைய நெற்றியில் நாம் வைத்துக் கொள்ளலாம்.. இலை காய்ந்ததும் அதை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். திரும்பவும் புதிதாக இலையை பறித்து வந்து இதே வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இலை பூஜை அறையில் இருக்கும் வரை தினமும் மந்திரத்தைமுழு மனதோடு கூற வேண்டும். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு மனதில் நினைத்தது நினைத்தபடி நடக்கும், நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேற எங்களின் வாழ்த்துக்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025