Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஆஷாட நவராத்திரி 2025 தேதி மற்றும் சிறப்பம்சங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆஷாட நவராத்திரி 2025 தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

Posted DateJune 20, 2025

”நமது புராணங்களின்படி,  நான்கு நவராத்திரிகள்  முக்கியமானவை. அவை: ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, மாசி மாதம் சியாமளா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி.இவற்றுள் ஆஷாட நவராத்திரியைப் பற்றி இப்பொழுது காண்போம்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி அல்லது வாராஹி நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஒன்பது புனிதமான ராத்திரிகள் தச  மகாவித்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தச மகா வித்யா என்பது இந்து சமயத்தில் ஆதிசக்தி தேவியின் பத்து வடிவங்களைக் குறிக்கும். இவை “பத்து மகா வித்யாக்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. “தச” என்றால் பத்து, “வித்யா” என்றால் அறிவு என்று பொருள். இந்த பத்து தேவியரும் பெண்மையின் சக்தியின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கின்றனர்.

ஆஷாட நவராத்திரி தொடக்கம்: வியாழன், ஜூன் 26, 2025

ஆஷாட நவராத்திரி முடிவு: வெள்ளிக்கிழமை, ஜூலை 4, 2025 (சில மரபுகளில் ஜூலை 5 வரை நீட்டிக்கப்படலாம்)

தச மகா வித்யா என்பது இந்து சமயத்தில் ஆதிசக்தி தேவியின் பத்து வடிவங்களைக் குறிக்கும். இவை “பத்து மகா வித்யாக்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. “தச” என்றால் பத்து, “வித்யா” என்றால் அறிவு என்று பொருள். இந்த பத்து தேவியரும் பெண்மையின் சக்தியின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கின்றனர், தாய்மை முதல் கோபம் வரை.

தச மகா வித்யாக்கள்: 

  1.  காளி:

காலத்தின் தேவி, அழித்தல் மற்றும் மறுசீரமைப்புக்கான சக்தி.

  1.  தாரை:

ஞானம், கல்வி மற்றும் கருணைக்கான தேவி.

  1.  திரிபுரசுந்தரி:

அழகு, காதல் மற்றும் செழிப்புக்கான தேவி.

  1.  புவனேஸ்வரி:

பிரபஞ்சத்தின் ராணி, எல்லா உலகங்களுக்கும் தாயாக கருதப்படுகிறார்.

  1.  பைரவி:

அழிவு மற்றும் மாற்றத்தின் தேவி.

  1.  சின்னமஸ்தா:

தியாகம் மற்றும் மறுபிறவிக்கான தேவி.

  1.  தூமாவதி:

துன்பம், வறுமை மற்றும் ஏழ்மையின் தேவி.

  1.  பகளாமுகி:

எதிரிகள் மற்றும் தீய சக்திகளை வெல்லும் சக்தி.

  1.  மாதங்கீ:

இசை, கலை மற்றும் படைப்பாற்றலின் தேவி.

  1.  கமலா:

செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் தேவி.

இந்த பத்து தேவியரும் இந்து சமயத்தில் பெண்மையின் சக்தியின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றனர் மற்றும் அவர்களின் வழிபாடு பக்தர்களுக்கு ஞானம், வலிமை மற்றும் நற்பலனைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

இந்த நவராத்திரியின் போது அன்னை,  வாராஹி வடிவில் வழிபடப்படுகிறாள். வாராஹி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய  சக்தி கொண்டவள். பக்தர்களின் வேண்டுகோளைக் கேட்டு உடனடியாக அருளுபவள். வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராக விளங்குபவள். வாராஹி பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், தேவியின் மீது தங்கள் பக்தி சிரத்தையை வெளிப்படுத்துகிறார்கள். நவராத்திரியின் போது, ​​தேவி உடனடியாக பக்தர்களுக்கு செவிசாய்த்து, விருப்பங்களை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

தினசரி வழிபாடு மற்றும் விரதம் :

ஆஷாட நவராத்திரியை அனுஷ்டிக்க முதல் நாளில் ஒரு கலசத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்குள் மஞ்சள் கலந்த புனிதமான நீரை ஊற்ற வேண்டும். கலசத்தின் மேல்  மேல் பகுதியை  மா இலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தேங்காய் வைக்க வேண்டும்.

எண்ணெய் ஊற்றிவிளக்கை  ஏற்றி வைக்கவும். சிவப்பு நிற மலர்களை அர்ப்பணிக்கவும். புனித மந்திரங்களை ஓதவும். துர்கா சப்தசதி அல்லது தேவி மகாத்மியம் படிக்கவும். இனிப்பு, புதிய பழங்கள், போன்ற பிரசாதம் படைக்கவும்.

குப்த நவராத்திரியின் போது விரதம் மேற்கொள்வது ஆன்மீக செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் மன ஆற்றலை வளர்க்கும்.

மிகவும் கடுமையான விரதம் : நிர்ஜல விரதம் — உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்ப்பது

மிதமான விரதம் : பழங்கள், பால், ஜவ்வரிசி கிச்சடி

தவிர்க்க வேண்டியவை : இறைச்சி, ஆல்கஹால், தானியங்கள், வெங்காயம், பூண்டு,  உப்பு

ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்:

ஆன்ம பலம் மற்றும் வாழ்வில் பாதுகாப்பு பெற கீழ்கண்ட மந்திரங்களை  ஜப மாலையுடன் 108 முறை ஜபிக்கவும்:

ஓம் தும் துர்காயே நமஹ – தெய்வீகக் கவசத்திற்காக

ஓம் க்ரீம் கலிகாயை நமஹ -மன வலிமைக்கு

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே – தீமையை வென்றெடுப்பதற்காக

சர்வ மங்கள மாங்கல்யே சிவே  சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே… – உலகளாவிய அமைதி மற்றும் ஆசீர்வாதத்திற்காக

பிற சேவைகள்:

உணவு, உடைகள் அல்லது அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யுங்கள்

கன்யா பூஜை: அஷ்டமி அல்லது நவமி அன்று, ஒன்பது இளம் பெண்களை நவ துர்க்கைகளின் உருவங்களாக வணங்கி, அவர்களுக்கு உணவளித்து, பரிசுகளை வழங்குங்கள்.

ஆஷாட நவராத்திரி வழிபாட்டின் பலன்கள் :

∙ மன தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது

∙ செழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்கிறது

∙ கண்ணுக்குத் தெரியாத எதிர்மறையிலிருந்து நம்மைக் காக்கிறது.

∙ தெய்வீக பெண் ஆற்றலுடனான தொடர்பை ஆழப்படுத்துகிறது

∙ ஆன்மீக சித்திகளை (சக்திகளை) செயல்படுத்துகிறது

∙ உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்கிறது.